ராயிஸ் அவர்களே தாண்டா புத்ரா மீது நடிப்பதை நிறுத்துங்கள்

‘மே 13 நிகழ்வுகளைத் தவறாகச் சித்தரிக்கும் திரைப்படத்துக்கு அமைச்சின் நடவடிக்கை அங்கீகாரம் கொடுப்பதாகத் தோன்றுகின்றது. அதனால் தான் இவ்வளவு ஆட்சேபமும் ஆத்திரமும்’

தாண்டா புத்ரா திரையீடு தாமதத்திற்கு தணிக்கை வாரியம் காரணம்

பூமிஅஸ்லி: ஏன் எல்லா இடங்களுக்கும் பந்து உருந்து கொண்டே இருக்கிறது ? பினாஸ் என்ற தேசியதிரைப்பட வாரியம் ஒரு பக்கம், தணிக்கை வாரியம் இன்னொரு பக்கம், நடுவே தகவல், தொடர்பு,  பண்பாட்டு அமைச்சு.

ஒரு திரைப்படம் மீது இவ்வளவு குழப்பமா ? அது வெளியிடப்பட்டால் குழப்பம் அதிகரிக்கும். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவது நிற்க வேண்டும்.

அந்தத் திரைப்படம் வெளியிடப்படுவதற்கும் வெளியிடப்படாததற்கும் யார் உண்மையில் பொறுப்பு என்பதை அறிய நாங்கள் விரும்புகிறோம். அமைச்சர் பதில் கொடுப்பாரா ?

சக மலேசியன்: அந்தத் திரைப்படத்தை வெளியிடுவதற்கு ஏற்பட்டுள்ள தாமதம் பினாஸ் பிரச்னை எனச் சொல்லி தகவல் அமைச்சர் ராயிஸ் யாத்திம் சூட்டைத் தணிக்க முயலுகிறார்.

அந்தத் திரைப்படத்துக்கு நிதி உதவி செய்ததின் மூலம் தனது கறை படிந்த கரங்களை தகவல் அமைச்சு வைத்திருக்கா விட்டால் இன்று எதிர்நோக்கப்படும் பிர்சனையே எழுந்திருக்காது.

மே 13 நிகழ்வுகளைத் தவறாகச் சித்தரிக்கும் திரைப்படத்துக்கு அமைச்சின் நடவடிக்கை அங்கீகாரம் கொடுப்பதாகத் தோன்றுகின்றது. அதனால் தான் இவ்வளவு ஆட்சேபமும் ஆத்திரமும்.

தணிக்கை வாரியத்தைப் போல அந்தத் திரைப்படத்தை பினாஸ்-ஸும் தடை செய்து நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.

அடையாளம் இல்லாதவன்#8211967: பிஎன் அதிகார வர்க்கத்தில் உள்துறை அமைச்சராக இருந்தாலும் தகவல்அமைச்சராக இருந்தாலும் அமைச்சருக்கு மேலான அதிகாரத்தை திரைப்படத் தணிக்கை வாரியம் கொண்டுள்ளது மிகவும் அதிசயமாக உள்ளது.

தாம் சொல்வதை மக்கள் நம்ப வேண்டும் என உண்மையில் ராயிஸ் விரும்புகிறாரா ? தாண்டா புத்ரா மீது பொய்களைச் சொன்னதற்காக தாம் வருந்துவதாக நீங்கள் சொன்னால் நான் உங்களை மென்மேலும் மதிப்பேன்.

அடையாளம் இல்லாதவன்#18452573: மிகவும் வல்லமை படைத்த கர்வம் பிடித்த ராயிஸ் அதிகாரம் இல்லாத திரைப்படத் தணிக்கை வாரியத்தின் கரங்களுக்குள் இருக்கிறாரா ? அந்தத் தணிக்கை வாரியம் இன்னும் வலிமை வாய்ந்த உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கீழ் உள்ளது.

நீங்கள் எல்லாருமே ஒரே படுக்கையில் தூங்குகின்றீர்கள். ஆனால் வேறு வேறு அறைகளில் தூங்குவதாக நடிக்கின்றீர்கள். தயவு செய்து இந்த நாடகத்திலிருந்து பொது மக்களுக்கு சற்று விடுதலை கொடுங்கள்.

அடையாளம் இல்லாதவன் #33877536: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 13வது பொதுத் தேர்தலுக்கான தேதியைஅறிவித்ததும் அது திரையிடப்படும். நல்ல சிந்தனை கொண்ட குடிமக்கள் குறிப்பாக பூமிபுத்ராக்கள்  அந்தத் திரைப்படம் விரிக்கும் வலைக்குள் விழுந்து விடக் கூடாது.

அதன் உள்ளடக்கத்தை அறிந்து கொள்ள நான் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டியதில்லை. நாம் ஏற்கனவே இன ரீதியாக வேறுபட்டுள்ளோம். நாம் அதனை ஏன் மேலும் வளர்க்க வேண்டும் ? அது நஜிப்பின் ஒரே மலேசியா கோட்பாட்டை சிதறடித்துள்ளது.

கேகன்: அதனை திரையிடுவதை முற்றாக நிறுத்தி விட்டால் என்ன ? மோசமான விளம்பரத்துக்குப் பின்னர் அது பிஎன் -னுக்கு எந்த நன்மையும் செய்யப் போவதில்லை. அந்தத் திரைப்படத்தின் நோக்கமே அச்சத்தை ஏற்படுத்துவதாகும். அதனால் பல மலேசியர்கள் வெறுப்படைந்துள்ளனர்.   மலேசியன்: கடந்த மசீச பொதுக் கூட்டத்துக்குப் பின்னர் சீன வாக்குகளைப் பெறும் நம்பிக்கையை பிஎன் இழந்திருக்க வேண்டும். ஆகவே அதனைத் திரையிடுவது தேவையற்ற நடவடிக்கை ஆகும்.

இயக்குநர் மீது பழி போட வேண்டாம். எந்த வேலையையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்த ஒருவராக அவர் இருக்க வேண்டும். அத்துடன் அதனை கலைப் படைப்புக்களுக்கான சுதந்திரம் என்று கூட சொல்லி விடலாம்.

தலை வேட்டைக்காரன்: அந்தத் திரைப்படம் வெளியிடப்படுவதை தாமதப்படுத்துமாறு தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டது யார் ? நாம் ஊகமாகச் சொல்லலாமா ?

எரிக்சிசி: BR1M உதவித் தொகை வேண்டுமானால் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என நிபந்தனை விதிப்பதின் மூலம் மக்களை அதனைப் பார்க்குமாறு கட்டாயப்படுத்துவது தான் ஒரே வழி.

அந்த உதவித் தொகை வேண்டுமானால் முதலில் அந்தத் திரைப்பட டிக்கெட்டைக் காட்டுமாறு கூறப்பட வேண்டும்.

பாக் குட் தி: அந்தத் திரைப்படம் மிகுந்த படைப்பாற்றலைக் கொண்டுள்ளது எனக் கூறி அந்த இனவாதத் திரைப்படம் திரையிடப்படுவது மீது தீவிரமாக தூபம் போட்டுக் கொண்டிருந்த அம்னோ வலைப்பதிவாளர்களுக்கு அது நிச்சயம் ஏமாற்றத்தைத் தந்திருக்கும்.

விளக்கமானவன்: அத்தகைய திரைப்படம் ஒன்று தயாரிக்கப்படுகிறது என்பது நஜிப்புக்கு தெரிந்திருக்குமா என நான் எண்ணுவது உண்டு. அல்லது ராயிஸ் அவரைக் கீழறுப்புச் செய்ய முயலுகின்றாரா ?

 

TAGS: