லிம் கிட் சியாங்: ஊழலை ஒடுக்க நஜிப்புக்கு ஏஇஎஸ் (AES) தேவை

போக்குவரத்து அத்துமீறல்களைக் குறைப்பதற்கு சர்சைக்குரிய ஏஇஎஸ் என்ற இயல்பான அமலாக்க முறை மீது விவாதத்தில் ஈடுபடுவதற்குப் பதில் ஊழலுக்கு அது போன்ற முறை அமலக்கப்பட வேண்டும் என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டுள்ளார்.

“பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உண்மையில் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு முன்னுரிமை கொடுப்பதற்குத் தீவிரம் காட்டினால் ‘பெரிய அளவிலான ஊழலை’ எதிர்த்துப் போராடுவதற்கு ஏஇஎஸ் முறையை அறிமுகம் செய்து அமல்படுத்தி வழக்கத்திற்கு மாறாக  மிதமிஞ்சி செல்வத்தைச் சேர்ப்பதை இயல்பான ஊழல் குற்றமாக்க வேண்டும்,” என லிம் இன்று விடுத்த அறிக்கை கூறியது.

தங்கள் வருமானத்துக்கு மேல் ஆடம்பரமாக வாழும் தனிநபர்களை விசாரணை செய்வது ஹாங்காங்கிலும் மற்ற நாடுகளிலும் நடைபெறுகின்றது. அவை ஊழலைத் துடைத்தொழிப்பதில் தீவிரம் காட்டுகின்றன என்றார் அவர்.

TAGS: