பாலா அவர்களே உங்கள் விஷயத்தை எம்ஏசிசி புலனாய்வு செய்யும் என எதிர்பார்க்க வேண்டாம்

“உங்களிடம் ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள். பிஎன் கட்டுக்குள் இருக்கின்ற ஒர் அமைப்பு பிஎன் -னில் உள்ளவர்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு எதுவும் செய்யாது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.”

“எம்ஏசிசி மௌனமாக இருந்தால் தனிப்பட்ட துப்பறிவாளர் பாலா எல்லாவற்றையும் வெளியிடுவார்

தாய்கோதாய்: தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம் அவர்களே, பிஎன் பொறுப்பில் இருக்கும் வரை உங்களுக்கு வாய்ப்பே இல்லை. உங்களிடம் உள்ளதை இப்போதே சொல்லி விடுங்கள். அடுத்த தேர்தலில் பிஎன் தோல்வி காண வேண்டும் என இறைவனிடம் வேண்டுங்கள்.

எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உங்களை மௌனமாக இருக்கச் செய்வதற்கு மிகுந்த ஆர்வமாக இருப்பதால் இந்தியா உங்களுக்கு புகலிடம் கொடுத்துள்ளது குறித்து மகிழ்ச்சி அடையுங்கள்.

பிளைண்ட் பிரடோ: மலேசியர்கள் வினோதமான ஒர் இனம். உங்களிடம் ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள். விளையாட்டு வேண்டாம். பிஎன் கட்டுக்குள் இருக்கின்ற ஒர் அமைப்பு பிஎன் -னில் உள்ளவர்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு எதுவும் செய்யாது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.

ஜெரோனிமோ: பாலசுப்ரமணியம், தயவு செய்து நடிப்பதை நிறுத்துங்கள். நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என நீங்கள் உண்மையிலேயே விரும்பினால் அவசியமானதைச் செய்யுங்கள். மருட்டல்கள் வேண்டாம். செய்யுங்கள்.

உங்கள் அவலத்தைப் பற்றி நாங்கள் நிறையக் கேள்விப்பட்டு விட்டோம். அதே நேரத்தில் அல்தான்துயா ஷாரிபுவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் நாங்கள் விரும்புகிறோம். உங்கள் நடத்தை அதற்கு உதவவில்லை.

டாக்டர் ஜக்#04496187: அம்பலப்படுத்த பாலா ‘எண்ணுவதாக’ சொல்வது வியப்பைத் தருகின்றது. அவர் குற்றவாளிகளுக்கு செய்திகளை அனுப்புகிறார். -‘கொடுங்கள் இல்லாவிட்டால்’……

நாட்ஜா: பாலா காலக் கெடுவை விதிக்க வேண்டாம். உங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட பணத்தில் எஞ்சிய தொகையைப் பெறுவதற்கு நீங்கள் முயற்சி செய்வதாகத் தோன்றுகிறது.

அல்தான்துயா கொடூரமாக கொலையுண்டது மீது மக்கள் முழுமையாக அறிந்து கொள்வதற்கு உங்களுக்குத் தெரிந்த விவரங்களை வெளியிடுங்கள்.

தலைவிதி நிர்ணயம்: சட்ட விரோதமாக தேடிய பணம் நீண்ட காலம் நிலைத்திருக்காது. வாக்குறுதி அளித்தது போல அவர்கள் எஞ்சிய தொகையைக் கொடுக்காததால் உங்கள் பை இப்போது வறண்டு போயிருக்க வேண்டும்.

உங்களுக்குப் பாக்கித் தொகை கிடைத்து விட்டால் அடுத்து என்ன செய்யப் போகின்றீர்கள் ? உங்கள் தவறுக்கு

நீங்கள் ஆயுட்காலம் முழுவதும் வருத்தப்பட வேண்டியிருக்கும். குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதற்காக ஒர் ஆன்மா காத்துக் கொண்டிருக்கிறது.

உங்கள் அடிச்சுவட்டில்: பாலா நாங்கள் கவலைப்படவில்லை. நீங்கள் அம்பலப்படுத்த விரும்பினால் அதனைச் செய்யுங்கள். நீங்கள் அமைதியாக இருக்க விரும்பினால் எந்த மாற்றமும் இருக்காது.

ஆனால் உங்கள் மதிப்பு வேகமாகக் குறைந்து கொண்டு வருகின்றது (எளிதில் அழுகக் கூடிய பொருட்களைப் போல) அது அடுத்த தேர்தலுக்கு பின்னர் காலாவதியாகி விடும்.

மாற்றம்: பாலா மீது தொடுக்கப்படும் கண்டனங்கள் தேவையற்றது என நான் எண்ணுகிறேன். அல்தான்துயா கொடூரமாக கொலையுண்ட விஷயத்தில் அஜிப் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை விசாரிக்குமாறு மட்டுமே அவர் எம்ஏசிசி-யை நெருக்குகிறார்.

அவர் உண்மையில் பணத்தை நாடினால் பிஎன் அரசாங்கத்துக்கு எதிராக அவர் போயிருக்கவே மாட்டார். அவர் தமது பாதுகாப்பு குறித்து அச்சமடைய வேண்டியதும் இல்லை.

லூயிஸ்: இப்போதே அம்பலப்படுத்துங்கள். அரசாங்கத்தை மாற்ற அது உதவும். மாற்றம் நிகழும் போது நீங்கள் பத்திரமாக தாயகம் திரும்பலாம். குற்றவாளிகளைக் கைது செய்யவும் உதவலாம்.

 

TAGS: