“அமைச்சர் ராயிஸ் நஜிப் முகத்தில் சரியாக அறைந்துள்ளார். பல தடுமாற்றங்களுக்குப் பின்னர் நஜிப் வாக்குறுதிகளை நான் நம்புவதில்லை..”
பீட் தியோ: வாக்களியுங்கள் (Undilah) வீடியோ இனிமேல் இணைய மக்கள் கரங்களில்
டிகேசி: பெர்சே 2.0 கோரிக்கைகளில் ஒன்று “ஊடகங்களில் நியாயமான சுதந்திரமான இடம்”. வாக்களிக்கப் பதிந்து கொள்ளுமாறு மக்களைக் கேட்டுக் கொள்ளும் அந்த கட்சிச் சார்பற்ற வீடியோவைக் கூட உங்களால் அனுமதிக்க முடியவில்லை என்றால் பெர்சே கோரிக்கைகள் செவிமடுக்கப்படுவதற்கு என்ன வாய்ப்பு உள்ளது.
பெர்சே கோரிக்கைகளை விவாதிக்க நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைப்பதாக யோசனை கூறுவதின் மூலம் நடப்பு அரசாங்கம் எங்கள் அறிவாற்றலை அவமானப்படுத்தக் கூடாது.
பெர்ட் தான்: வாக்களியுங்கள் (Undilah) வீடியோவில் எந்தக் கோளாறும் இல்லை. அதன் உள்ளடக்கத்திலோ செய்தியிலோ நிச்சயம் எந்தத் தவறும் இல்லை. அந்த வீடியோவுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததின் மூலம் தகவல், பண்பாடு, தொடர்பு அமைச்சர் ராயிஸ் யாத்திம் மலேசியர்களை மீண்டும் அதிர்ச்சி அடையச் செய்து விட்டார்.
அதில் நிர்வாகத்திற்கு எதிரான கருத்துக்கள் மறைந்திருப்பதாக அவர் சொல்வது முட்டாள்தனமான காரணம். உண்மையில் அந்தக் காரணம் வேடிக்கையாக இருக்கிறது.
இளம் அறிவாளிகளான நுருல் இஸ்ஸா அன்வார், டோனி புவா, நிக் நாஸ்மி நிக் அகமட், பாஸ் கட்சியின் எம்பி காலித் சாமாட் ஆகிய எதிர்க்கட்சித் தலைவர்கள் பிஎன் தலைவர்களுடன் அதில் தோன்றுவதுதான் காரணமா?
என்ன மறைந்திருக்கும் செய்தி? கடந்த கால ராக் பாடல்களில் சைத்தான் செய்திகள் ஏதும் மறைந்துள்ளனவா? அல்லது நம் கண்ணுக்குத் தெரியாத ‘கறுப்பு மூக மூடி அணிந்த சைத்தான்களை’ அவர்கள் கண்டார்களா?
நியாயமானவன்: ராயிஸ் யாத்திம் அவர்களே “அந்த வீடியோவில் சில பகுதிகள் புண்படுத்துகின்றன” எனத் தாங்கள் கூறியுள்ளதற்கு விளக்கம் தர இயலுமா? நீங்கள் சமூகத்தில் “சில பிரிவுகளை” வெளிப்படையாக பாதுகாக்க முயலுவதாகத் தோன்றுகிறது.
ஜோசபின்: பக்கத்தான் ராக்யாட் சம்பந்தப்பட்ட எதுவும் அரசாங்கத்தை புண்படுத்தும் என நான் நினைக்கிறேன். தாம் மலேசிய அரசாங்கத்தில் ஒர் அமைச்சர் என்பதை அவர் மறந்து விட்டார். அவர் தமது கடமைகளைச் செய்யும் போது பிஎன் தொப்பியைக் கழற்றி விட வேண்டும். அதனால்தான் நாம் நல்ல முறையில் வாக்களிக்க வேண்டும்.
கேஜேலிம்: இந்த நாட்டில் வாழுகின்ற 28 மில்லியன் மலேசியர்களுக்கும் பெற்றோர்களைப் போல நமது தலைவர்கள் நடந்து கொள்கின்றனர். என்ன சொல்ல வேண்டும் என்ன பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும், என்ன பார்க்க வேண்டும் என்பது தங்களுக்குத் தான் நன்கு தெரியும் என அவர்கள் எண்ணுகின்றனர். ஏனெனில் அவர்கள் அனைத்து மலேசியர்களையும் குழந்தைகளாக கருதுகின்றனர்.
மலேசியாவை சிறந்த ஜனநாயகமாக மாற்றுவதற்குப் பிரதமர் நஜிப் அளித்துள்ள வாக்குறுதியை நீங்கள் நம்புகின்றீர்களா? அமைச்சர் ராயிஸ் நஜிப் முகத்தில் சரியாக அறைந்துள்ளார். பல தடுமாற்றங்களுக்குப் பின்னர் நஜிப் வாக்குறுதிகளை நான் நம்புவதில்லை. அந்த வீடியோவில் புண்படுத்தும் அம்சங்களா? எதுவுமே இல்லை.
அபில்: இசா அகற்றப்படும் என நஜிப் அண்மையில் அறிவித்தார். மக்களை வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளும் சாதாரண வீடியோவைக் கூட அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இசா உண்மையில் அகற்றப்படும் என மக்கள் நம்ப வேண்டும் என நீங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்?
லின்: அரசாங்கக் கண்ணோட்டத்தில் ஒரே ஒரு புண்படுத்தும் அம்சம் இதுவாகத் தான் இருக்க வேண்டும். அதாவது அவர்கள் அந்த சொற்றொடரை “பிஎன் -னுக்கு வாக்களியுங்கள்” ( “undilah BN” ) என முடிக்கவில்லை.
அந்த வீடியோவை நான் யூ டியூப்பில் பார்த்தேன். மிகவும் அற்புதமான உருவாக்கம். மலேசியத் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் இவ்வளவு கெட்டிக்காரத்தனமாக விளம்பரப் படத்தை தயாரிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது எனக்குப் பெருமையாக இருக்கிறது. அதனை எல்லோரும் பார்க்க வேண்டும்.
அதன் இணைய முகவரி: http://www.youtube.com/watch?v=-1hllAhSXLAப்
மைக்கல் செலோ: அந்த வீடியோவுக்கு ‘Undilah Barisan’ (பாரிசானுக்கு வாக்களியுங்கள்) என பீட் தியோ தலைப்பு கொடுத்திருந்தால் அவருக்கு “தான் ஸ்ரீ” பட்டமும் கிடைத்திருக்கும். அவரது வாழ்நாளுக்கு அல்லது இரண்டு வாழ்நாளுக்கும் கூட போதுமான பணமும் கிடைத்திருக்கும்.