தாண்டா புத்ரா திரைப்படத்தை வெளியிடுவதை அடுத்த ஆண்டுக்குத் தள்ளி வைப்பது என்ற முடிவை அமைச்சரவை எடுத்தது.
அந்தத் தகவலை தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் இன்று வெளியிட்டார்.
திரையிடப்படுவதற்கு ‘பொருத்தமற்ற’ அம்சங்கள் திரைப்படத்தில் இருப்பதை அமைச்சர்கள் கண்ட பின்னர் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
“மக்கள் நன்மைக்காக அந்தத் திரைப்படத்தின் அதிகாரத்துவ வெளியீட்டை தள்ளி வைப்பது என அமைச்சரவை முடிவு செய்தது. ஏனெனில் பூசலை ஏற்படுத்தக் கூடிய காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.”
“பல்வேறு தரப்புக்கள் முரண்பாடான கருத்துக்களைத் தெரிவித்துள்ள மே 13 துயரச்சம்பவத்தை அது காட்டுவதே அதற்குக் காரணம்,” என்றும் ராயிஸ் தெரிவித்தார்.
அவர் இன்று மாலை கம்போங் புவா லெம்பாவில் மாநில அளவிலான Himpunan Kasih Sayang நிகழ்வை தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் பேசினார்.