சமயம் அரசியலுடன் கலக்கப்படும் போது…..

 “நுருல் இஸ்ஸா சொன்னதை வேண்டுமென்றே திரித்து உத்துசான் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் உயர் நிலை அம்னோ தலைவர்கள் கண்டனங்களை வெளியிடுவது உண்மையில் வெறுப்பைத் தருகின்றது.”

நுருல் இஸ்ஸாவைக் களங்கப்படுத்தும் இயக்கத்தை நிறுத்துங்கள்

கிம் குவேக்: அம்னோ தலைவர்கள் இந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் மீது- அவற்றை ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் விவேகமான விவாதத்தில் ஈடுபட முன் வர வேண்டும்.

நியாயமான காரணங்கள் அடிப்படையில் விவாதம் நடத்துவதற்கான ஆற்றலைத் தாங்கள் பெற்றுள்ளதை அவர்கள் முதலில் நிரூபிக்க வேண்டும்.

நியாயமான சிந்தனைகள் இல்லாவிட்டால் அவர்களை மீண்டும் அதிகாரத்துக்கு எப்படித் தேர்வு செய்வது ?

லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா சொன்னதை வேண்டுமென்றே திரித்து உத்துசான் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் உயர் நிலை அம்னோ தலைவர்கள் கண்டனங்களை வெளியிடுவது உண்மையில் வெறுப்பைத் தருகின்றது. நல்ல எண்ணம் கொண்ட மலேசியர்கள் அதனை நிராகரிக்கின்றனர்.

பூன்பாவ்: நுருல் இஸ்ஸா மீது தொடுக்கப்பட்டுள்ள ‘போர்’ மீது தெரிவிக்கப்பட்டுள்ள சிறந்த கருத்து இது தான்.நேர்மையான சிந்தனைகளைக் கொண்ட மலேசியர்கள் பேசத் தொடங்கியுள்ளதை நான் வரவேற்கிறேன்.

சமயம் நீண்ட காலமாகவே கடத்தப்பட்டுள்ளது. உண்மையில் சமய நம்பிக்கையற்றவர்களே சமய நம்பிக்கையைக் கொண்டுள்ளதாக கூறுகின்றவர்களை விட சமயத்தை அதிகம் புரிந்து வைத்துள்ளனர்.

நான் இஸ்லாம் பற்றிப் பேசவில்லை. எல்லா சமயங்களையும் பற்றிப் பேசுகிறேன். முகமட் அசாட் எழுதிய புத்தகங்களை மலேசிய முஸ்லிம்கள் வாசிக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். மேலும்  இணக்கமான பல பண்பாட்டு சமூகத்துக்கு முதல் படியாகவும் அது அமையலாம்.

ஜாகோ: சமயத்தை அரசியலுக்குள் கொண்டு வந்தது தான் மலேசியா செய்துள்ள பெரிய தவறாகும். அதனால் கால ஒட்டத்தில் அவற்றை எப்படிப் பிரிப்பது எனத் தெரியாமல் தடுமாறுகிறோம்.

சமயம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயமும் அரசியல் பின்னணியையும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. அதனால் சமயத்தில் சம்பந்தப்படாதவர்களும் கூட பாதிக்கப்படுகின்றனர்.

டிஏபி கபீர்கள் போன்ற கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. நாம் என்ன மலேசியாவில் இருக்கிறோமா அல்லது சவூதி அரேபியாவில் இருக்கின்றோமா ?

இஸ்லாத்தின் நல்ல பண்புகளை எடுத்துக் காட்டி அதில் உறுதியாக இருப்பதின் மூலம் ஐஆர்எப் இஸ்லாமிய மறுமலர்ச்சி முன்னணி நல்ல பணியாற்றிக் கொண்டிருக்கிறது.

அதே வேலையை இந்த நாட்டில் உள்ள இமாம்களும் உலாமாக்களும் செய்தால் ஆனால் அதனைச் செய்வதற்கு இன்னொரு ஆயுட்காலம் வேண்டும். சேதம் ஏற்படுத்தப்பட்டு விட்டது.

Ohakimm: ஐஆர்எப் விடுத்துள்ள அறிக்கையை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இஸ்லாம் உலக அளவிலானது. மலாய்க்காரர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. நாம் இந்த கிணற்றுத் தவளை உணர்வை கை விட வேண்டும். உலக அளவில் சிந்திக்க வேண்டும்.

உலகம் மலேசியாவைக் காட்டிலும் பெரியது. வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுக்கு அது நன்கு தெரியும்.  உலகின் மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுடன் கலந்துறவாடுவதால் அவர்களில் பலர் சிறந்த முஸ்லிம்களாகத் திகழ்கின்றனர்.

சீசர் மனைவி: ஐஆர்எப் தனது கருத்துக்களை- இது வரை அனுப்பா விட்டால்- உத்துசான் மலேசியா, ஜயிஸ்என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை, சிலாங்கூர் இஸ்லாமிய மன்றம் மற்றும் இதர அமைப்புக்களுக்கும் அனுப்ப வேண்டும். ஏனெனில் தமது அரசமைப்பு உரிமைக்குள் இயங்கும் நுருல் இஸ்ஸா மீது அவை பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளன.

அடையாளம் இல்லாதவன் #18452573: எல்லாம் நியாயமாகவும் சமமாகவும் நிகழ்ந்தால் மலேசியா சிறந்த பொருளாதாரமாகத் திகழும். ஆனால் கட்டுப்பாட்டை வைத்திருக்கவும் மக்களை தங்கள் பிடியில்  வைத்திருக்கவும் எண்ணம் கொண்டுள்ள பிஎன் அரசியல்வாதிகள் நம்மை பிளவுபடுத்தி விட்டனர்.

அந்த இருளிலிருந்து நாம் மீள முடியுமா ? நிச்சயம் நல்லது தீயதை வெல்லும். நமது வாக்குகளில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.

திரு கேஜே ஜான்: விளக்கம் கொடுத்த ஐஆர்எப்-க்கு நன்றி. எது இஸ்லாமிய நாடு எது இஸ்லாமிய நாடுஅல்ல என்பது பற்றியே கடந்த சனிக்கிழமை விவாதம் நடந்தது. திருக்குர் ஆனில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நன்கு அறியப்பட்ட வாசகம் ஒன்றின் தொடர்பில் அந்த சர்ச்சை எழுந்துள்ளது தான் வினோதமானது.

ஆன்மீகம் மீதான ஒருவரைஉடைய தனிப்பட்ட நிலை, நம்பிக்கை மீது விவாதம் நடத்துவதைக் காட்டிலும் ஊழலும் லஞ்சமும் எந்த ஒரு நாட்டிலும் முக்கியமாக இஸ்லாமியப் பிரச்னை அல்லவா ?

 

TAGS: