கோகிலன் “கையும் களவுமாக” பிடிபட்டார்; இறைவனை அழைக்கிறார்

உங்கள் கருத்து: “கோகிலன் சொன்ன பொய் இப்போது வெளிச்சத்துக்கு வந்து விட்டது. அதனை அங்கீகரித்தது தமக்கு நினைவில் இல்லை அல்லது அந்த நேரத்தில் தமக்குத் தற்காலிகமாக ஞாபக மறதி வந்து விட்டது என அவர் இனிமேல் பெரும்பாலும் கூறிக் கொள்வார்.”

கூட்டக் குறிப்புக்கள் அம்பலமான பின்னர் ‘கொண்டோ’ அங்கீகாரம் மீது கோகிலன் மௌனம்

ஆர் வேணுகோபால்: செனட்டர் ஏ கோகிலன் பிள்ளை அவர்களே, செலாயாங் நகராட்சி மன்ற உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் மன்றக் கூட்டங்களில் அந்த ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் திட்டத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. நீங்கள் அந்தத் திட்டத்தை அங்கீகரித்தீர்கள் என்பதே அதன் அர்த்தமாகும்.

இப்போது ஏன் வழக்குரைஞர்களை நாட வேண்டும் ? உண்மை வெளிச்சத்துக்கு வந்து விட்டது. முருகக் கடவுளிடமிருந்து மன்னிப்புக் கேளுங்கள். மற்றவர்கள் மீது பழி போட வேண்டாம்.

தாய்லெக்: கோகிலன், நீங்கள் வழக்குரைஞர்களை நாடுவதற்கு என்ன தேவை ? ஊராட்சி மன்றக் கூட்டக் குறிப்புக்கள் தெளிவானவை. நீங்கள் பிடிபட்டு விட்டீர்கள். நீங்கள் துணிச்சலாக உங்கள் குற்றச்சாட்டுக்களை மீட்டுக் கொண்டு தவறாக வழி நடத்தியதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

சியாபீ2: “கூட்டக் குறிப்புக்களை மீண்டும் சோதிக்க எனக்கு அனுமதி கொடுங்கள். நான் எல்லாக் கூட்டக் குறிப்புக்களையும் பார்க்க வேண்டும். அடுத்து நான் என் கருத்துக்களைத் தெரிவிக்கிறேன்,” என அவர் சொன்னார். இதனை நீங்கள் ஏற்கனவே செய்திருக்காலாமே ?

மக்கள் முட்டாள்கள் என்றும் சோம்பேறிகள் என்றும் தங்களைப் போன்று ஏதும் அறியாதவர்கள் என்றும் அந்த பிஎன் முட்டாள்கள் எண்ணுவதே இங்குள்ள பிரச்னை. அவர்களுடைய உண்மையான கடவுளான  அம்னோவை சாந்தப்படுத்துவதற்காக முருகக் கடவுள் முன்பு கூட சத்தியம் செய்வார்கள்.

இவ்வாறு தகவல்கள் அம்பலமான பின்னரும் இந்தியர்கள் பார்வையற்றவர்களாக இருந்தால் உங்களை யாரும் காப்பாற்ற முடியாது

சின்ன அரக்கன்: கோகிலன் அவர்களே, அந்த விவகாரம் மீது ஒன்றுக்கு ஒன்றுக்கு முரணாக பதில் சொல்வதைமுதலில் நிறுத்திக் கொள்ளுங்கள். அவர் அந்த ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் திட்டத்தில் தமது ஈடுபாடு குறித்து விவரமான உண்மையான விளக்கத்தை அவர் பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் ஆலய நிர்வாகத்துக்கும் இந்திய சமூகத்துக்கும் கொடுக்க வேண்டும்.

அந்தத் திட்டத்தைப் பற்றி அறிந்திருந்து அதனை அங்கீகரித்த செலாயாங் நகராட்சி மன்ற முழு வாரியக் கூட்டத்தில் கலந்து கொண்ட மஇகா-வைச் சேர்ந்த நகராட்சி மன்ற உறுப்பினர்களைப் பற்றி என்ன சொல்வது ?

அப்போது கட்சித் தலைவராக இருந்த எஸ் சாமிவேலுக்கு அந்தத் திட்டம் பற்றித் தெரிவிக்கப்பட்டதா ? இந்திய சமூகம் புனிதப் பயணங்களை மேற்கொள்ளும் முக்கியமான இடத்துக்கு மிக அருகில் மெகா திட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவிருப்பது மீது மஇகா தலைமைத்துவத்துக்கு எப்படித் தெரியாமல் இருந்தது ?

நடப்பு மஇகா தலைமைத்துவம் அந்தப் பிரச்னை மீது ‘நாடாகமாடுவதை’ நிறுத்திக் கொள்ள வேண்டும். நடப்பு சிலாங்கூர் மாநில அரசாங்கத்தைக் குறை சொல்வதையும் நிறுத்த வேண்டும்.

அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தனது அனைத்து நகராட்சி மன்ற உறுப்பினர்களையும் அது அழைத்து பிரச்னையை முழுமையாக ஆராய்ந்து இந்திய சமூகத்துக்கு உண்மையைத் தெரிவிக்க வேண்டும்.

பூ: இந்தியப் பண்பாட்டையும் உரிமைகளையும் பாதுகாக்கும் ‘இந்தியர் தலைவர்கள்’ எனத் தங்களை அழைத்துக் கொள்கின்றவர்களுடைய தராதரம்  இவ்வளவுதானா ?

நீலகிரி: ஒர் அமைச்சர் பொய் சொல்வது வெளிச்சத்துக்கு வந்தால் அவர் என்ன செய்ய வேண்டும் ? பதவி துறக்க வேண்டும்.

டாக்: இது போன்ற ‘‘dungu’ துணை வெளியுறவு அமைச்சராக முடியும். உண்மையில் பிஎன் அமைச்சர்களுடைய ஆற்றல் பரிதாபத்துக்குரியது.

ஜெரோனிமோ: பினாங்கு கம்போங் புவா பாலா சம்பவத்தைப் போன்று இங்கும் நடக்கிறது. முதலில் பழைய சாமிவேலு தோன்றி தமது பெருமைய எடுத்துச் சொல்லி பக்காத்தான் ராக்யாட்டுக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுவார். பின்னர் உண்மையில் இறுதியில் வெளிச்சமானதும் சாமிவேலு காணாமல் போய் விடுவார்.

TAGS: