‘சமயத்தில் கட்டாயம் இல்லை’ என்பது சமய நம்பிக்கையற்றவர்களுக்கு மட்டும் தானா ?

“திருக்குர் -ஆனில் ‘சமயத்தில் கட்டாயம் இல்லை’ எனத் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் நசாருதின் அவர்களே அது ‘முஸ்லிம் அல்லாதாருக்கு மட்டுமே பொருந்தும்’ என எந்த இடத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதை எனக்குச் சொல்லுங்கள்.”

நசாருதின்: நுருல் சொல்வது தவறு முஸ்லிம்களுக்குத் தேர்வு இல்லை

முகமூடி: முன்னாள் பாஸ் துணைத் தலைவர் நசாருதின் மாட் ஈசா அவர்களே “பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் மேற்கோள் காட்டியுள்ள வாசகம் முஸ்லிம் அல்லாதாருக்கு மட்டுமே பொருந்தும்” என நீங்கள் கூறியுள்ளீர்கள்.

அத்துடன் ‘திருக்குர் ஆனில் கூறப்பட்டுள்ளதை செவிமடுத்து கீழ்ப்படிவதே நமது உரிமை’ என்றும் நீங்கள் சொல்லியிருக்கின்றீர்கள்.

திருக்குர் -ஆனில் ‘சமயத்தில் கட்டாயம் இல்லை’ எனத் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் நசாருதின் அவர்களே அது ‘முஸ்லிம் அல்லாதாருக்கு மட்டுமே பொருந்தும்’ என எந்த இடத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதை எனக்குச் சொல்லுங்கள்.

ஈப்போ2: நசாருதின் சொல்வதில் பாதி தான் உண்மை. உலகின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் இஸ்லாத்திலிருந்து வேறு சமயங்களுக்கு மாறியுள்ளனர். மலேசியாவில் மலாய்க்காரர்கள் அவ்வாறு செய்ய முடியாது. அதே மலாய்க்காரர்கள் மற்ற நாடுகளுக்குக் குடியேறினால் அவர்களுக்குத் தேர்வு உண்டு. இந்தோனிசியாவில் அல்லது துருக்கியில் நசாருதின் அதனை சொல்லியிருந்தால் அவர் இன்னேரம் கண்டிக்கப்பட்டிருப்பார்.

ஜெரார்ட் லூர்துசாமி: இஸ்லாத்தில் காணப்படும் சடங்குகளிலும் வடிவத்திலும் மட்டுமே சிந்தனைகளைச் செலுத்துவதாகத் தெரிகிறது. அதன் அழகைக் காணவில்லை.

இவ்வளவு பெரிய மகத்தான ஒரு சமயம் இந்த நாட்டில் இன மேலாண்மையையும் மேலாதிக்கத்தையும் வலியுறுத்தும் பொருட்டு அரசியல் நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது.

பார்வையாளன்: சமய வாசகங்களுக்கு யார் வேண்டுமானாலும் தமது விருப்பம் போல் விளக்கம் சொல்லலாம். பக்காத்தான் ராக்யாட்டிலிருந்து சென்ற முன்னாள் தவளைகளும் நசாருதின் போன்று தாவுவதற்குத் தயாராக இருக்கும் தவளைகளும் தங்கள் அம்னோ எஜமானர்கள் வீசும் துண்டுகளுக்காக ஊழல் அம்னோ விருப்பத்திற்கு ஏற்ப இப்போது விவாதிக்கப்படும் சமய வாசகத்தை விளக்க முடியும்.

இலவச உணவு என இந்த உலகில் ஏதுமில்லை என்பதையும் அவர்களுடைய நடவடிக்கைகளைப் பொறுத்தே வீசப்படும் துண்டின் அளவு இருக்கும் என்பதையும் அவர்கள் உணர வேண்டும்.

அதனால் தான் சிறிய வாய்ப்புக் கிடைத்தால் கூட, தங்கள் அம்னோ எஜமானர்களைத் திருப்திப்படுத்த அவை கத்தத் தொடங்கி விடும். (எதிர்க்கட்சிகளுக்குக் களங்கத்தை ஏற்படுத்த பொய்களைச் சொல்வது) இலசவ ‘உணவை’ பெறுவதும் துண்டுகள் பெரிதாக இருக்கும் என்ற நப்பாசையுமே அதற்குக் காரணம்.

அடையாளம் இல்லாதவன் #76965586: இறைவன் முழுமையானவன். ஆனால் மனிதன் பாவி. அந்த விஷயங்களில் தில்லுமுல்லு செய்கின்றவர்களைச் சற்றுக் கவனியுங்கள். அவர்கள் நம்மை விடச் சிறந்தவர்களா அல்லது உண்மையில் பிசாசுகளா ? குறிப்பிட்ட நோக்கத்துக்காக அதனைச் செய்கின்றார்களா ?

தாம் எண்ணுவதைப் பேசிய லெம்பா பந்தாய் எம்பி நுருலுக்கு என வணக்கங்கள். அளவுக்கு அதிகமாக மிரட்டப்படும் ஒரு நாட்டில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் அதனை நிராகரிக்க வேண்டும்.

ரியாலிஸ்: மலாய்க்காரர் அல்லாதாரும் முஸ்லிம் அல்லாதாரும் திருக்குர் ஆனை மேற்கோள் காட்டி விருப்பம்போல் பேசுகின்றனர். உலகில் எந்த இடத்திலும் காணப்படாத அளவுக்கு மிக நெருக்கமாக பின்னிப் பிணைந்த மலாய்/முஸ்லிம் சமூகத்தில் ஒற்றுமை சீர்குலைவதைக் காண அவர்கள் மகிழ்ச்சி அடைவதாகத் தோன்றுகிறது.

அவர்கள் மலாய்க்காரர்கள் இந்தோனிசியாவில் உள்ள மலாய்க்காரர்களைப் போன்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த அரபுக்களைப் போன்றும் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர். நாங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் ஊடுருவுவதில்லை என்பதைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

மாஹாஷித்தா: உத்துசான் மலேசியாவும் அம்னோ அதே பழைய பாணியைப் பயன்படுத்தி இன சமய உணர்வுகளுக்கு தூபம் போடுகின்றன. ஆனால் அது இந்த முறை வேலை செய்யாது.

அரசாங்கத்தில் காணப்படும் பல அத்துமீறல், ஊழல் பிரச்னைகள் சரியான முறையில் தீர்க்கப்படவில்லை. எரியும் நெருப்பிலிருந்து நுருல் உரை தங்களைக் காப்பாற்றி விடும் என அவை எண்ணுகின்றன. அம்னோ அதனை விட இன்னும் நன்றாக இயங்க வேண்டும்.

குழப்பம் இல்லாதவன்: திருக்குர்-ஆனில் ‘சமயத்தில் கட்டாயம் இல்லை’ என்னும் அந்தக் குறிப்பிட்ட வாசகத்துக்கு ஒரு மனிதரான நசருதின் விளக்கம் தருகின்றார். அவருடைய விளக்கம் எப்படி  மற்றவர்களுடைய விளக்கத்தைக் காட்டிலும் சிறந்ததாகவோ மோசமானதாகவோ இருக்க முடியும் ?

திருக்குர் ஆன் முஸ்லிம்களுக்கு ‘வெளிச்சத்தை’ காட்டுவதற்காகும். ஆகவே எப்படி அந்த குறிப்பிட்ட வாசகம் மட்டும் முஸ்லிம் அல்லாதாருக்குப் பொருந்தும் ?

TAGS: