வேதமூர்த்தி வந்தபிறகுதான் இண்ட்ராப் சரியான பாதைக்குத் திரும்பியுள்ளது

உங்கள் கருத்து: “பக்காத்தான் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.இண்ட்ராபால் மட்டுமே இந்தியர் வாக்குகளை பக்காத்தானுக்குக் கொண்டுவர முடியும்”.

இந்தியர்களின் ஏழ்மையை ஒழிக்க இண்ட்ராபின் ஐந்தாண்டு செயல்திட்டம்

மகிழும் மலேசியன்: விடாதீர்கள். இண்ட்ராபுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கச் சொல்லுங்கள். நாடற்றவர்களாகவுள்ள 350,000 இந்தியர்களுக்குக் குடியுரிமை கொடுக்கச் சொல்லுங்கள்.

பின்சொல்லப்பட்டதைச் சாதிக்க முடிந்தால், இந்தியர்களுக்கு நீங்கள் பெரும் நன்மை செய்தவர்களாவீர்கள். இதை மஇகா, சில மாதங்களுக்குமுன் செய்யப்போவதாகக் கூறிக்கொண்டது. உரத்த குரலில் அறிவிப்புகளைச் செய்தார்கள் படம்பிடித்துக் காண்பித்துக்கொண்டார்கள்.ஆனால் உருப்படியாக எதுவும் நடக்கக் காணோம்.

மெக்னஸ்: வேதமூர்த்தி திரும்பி வந்து இண்ட்ராபை மீண்டுக் திறமையாக வழிநடத்துவதைக் காண மகிழ்ச்சியாக உள்ளது.அவர் மரியாதைக்குரிய ஒரு தலைவராக அரசியல் செல்வாக்குள்ளவராகத் திகழ்கிறார். அதனால்தான் பக்காத்தான், பிஎன் இரண்டுமே அவரை வளைத்துப்போட முயல்கின்றன.

இண்ட்ராப் பேரம் பேசுவதில் விவேகம் காட்ட வேண்டும். அப்போதுதான் சலுகைகளற்றவர்களாகவும் ஓரங்கட்டப்பட்டவர்களாகவும் உள்ள இந்தியர்களின் துயர்தீர்க்க தக்க தீர்வுகளைக் காண முடியும்.

ரத்னம்: “இந்தியர் பிரச்னைகளுக்கு முடிவான தீர்வு காண்பது” நடவாத செயல்.

பிரச்னை என்னவென்பது துல்லியமாக அறியப்பட்டு, அதற்கென்ன செய்யப்பட வேண்டும் என்பதும் தெளிவாக அடையாளம் காணப்பட்டால் மெதுவான, படிப்படியான முன்னேற்றம் காணலாம்.

ஆனால், இண்ட்ராபிடம் அப்படிப்பட்ட தெளிவான நோக்கு இதுவரை இருந்ததில்லை. நவம்பர் 25வரை பொறுத்திருப்போம், அவர்களின் திட்டம் என்னவென்பதை அறிய.

விஜய்47: போதும். திட்டம், செயல்திட்டம், பரிந்துரை வகுத்ததெல்லாம் போதும். எனக்குத் தெரிந்து எத்தனையோ திட்டங்கள் வந்துவிட்டன. ‘இந்தியர் பிரச்னைகள் மீதான ஆய்வுகள்மீது ஒரு ஆய்வு’ என்ற தலைப்பில் பக்கம்பக்கமாக எழுதித்தள்ளலாம்- அத்தனை திட்டங்கள் வந்துள்ளன..

பக்காத்தானோ, பிஎன்னோ இப்போதைய தேவை உடனடி நடவடிக்கை- வாக்குறுதிகளோ உறுதிமொழிகளோ ஒப்பந்தங்களோ அல்ல.

நீதிகேட்கும் மலேசியன்: 55 ஆண்டுகளுக்குமேலாக இந்தியர்கள் ஏமாற்றப்பட்டு வந்திருப்பதை எண்ணிப் பாருங்கள். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கோ,அம்னோவோ மேலும் ஏமாற்றமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

பால் சத்தியநேசன்: வேதமூர்த்தி திரும்பி வந்ததிலிருந்து இண்ட்ராப் மீண்டும் சரியான பாதையில் செல்லத் தொடங்கியுள்ளது. பக்காத்தான் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.இண்ட்ராபால் மட்டுமே இந்தியர் வாக்குகளை பக்காத்தானுக்குக் கொண்டுவர முடியும்.

சிகேஅல்பர்ட்: சிலாங்கூர், பிறகு பேராக், பினாங்கு, கெடா ஆகியவற்றில் இந்திய வாக்காளர்கள் இன்றியமையாதவர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.  இந்தியர் ஆதரவு பக்காத்தானுக்கு இல்லையென்றால் சிலாங்கூரும் கெடாவும் கைமாறலாம்.

அந்த ஆதரவைப் பெற மஇகா கமுக்கமாக வேலை செய்து வருகிறது. பக்காத்தானோ இந்தியர் ஆதரவு தனக்கு நிரந்தரம் என்று கனா காண்கிறது.அந்த ஆதரவைப் பெற இண்ட்ராபுடன் ஒத்துழைப்பதா அல்லது அதைப் புறக்கணிப்பதா என்பதைப் பக்காத்தான் தலைவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

பூட்சி: பிகேஆரில் பிரதமராகக் காத்திருப்பவர் வந்து இந்தியர் பிரச்னைகளுக்கு ஒரு முடிவான தீர்வு காணட்டும்.வேறு யாரையும் நம்பக்கூடாது. 55ஆண்டுகளாக பொறுத்திருந்து என்னத்தைக் கண்டோம்.

ஜெரார்ட் லூர்துசாமி: சமத்துவம், சம உரிமை பற்றிப் பேசுவதற்குமுன் பொதுத்துறையிலும் தனியார்துறையிலும் ஆடுகளம் சமமாக இருத்தல் அவசியமாகும். இதற்கு சமவாய்ப்புச் சட்டம் ஒன்றிருந்தால் நன்றாக இருக்கும்.

பொருளாதார நடவடிக்கை இனரீதியாக இல்லாமல் ஆற்றலையும் அனுபவத்தையும் நேர்மையையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

இனங்கள் அவற்றின் உரிமைகோரி குரல்கொடுப்பதில் தவறில்லை.
அதற்காக அவர்களை இனவாதிகள் என முத்திரை குத்துவது சரியல்ல.ஆனால், அவர்களின் கோரிக்கைகளில் நியாயம் இருக்க வேண்டும்.

நாம் எல்லாருமே இனரீதியான ஒதுக்கீடு, இன உணர்வு ஆகியவற்றிலிருந்து விலகிச் செல்லவே விரும்புகிறோம். ஆனால், அதற்காக விட்டுக்கொடுக்கவும் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறோமா என்பதுதான் தெளிவாகத் தெரியவில்லை.

TAGS: