பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்திப்பதற்கு ஒப்புக் கொள்ளும் முன்னர் ஹிண்டராப் ‘முன் நிபந்தனைகளை விதிக்கக் கூடாது’.
ஏனெனில் அதன் எந்தக் கோரிக்கையும் பேச்சுக்களின் போது எழுப்பப்பட முடியும் எனப் பிரதமர் துறை துணை அமைச்சர் அகமட் மஸ்லான் கூறினார்.
“உண்மையில் நிபந்தனைகளை விதிக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்த விஷயங்களை கூட்டத்தில் விவாதிக்க முடியும். அவர்கள் சந்திக்கவே இல்லை. ஆனால் அது நிபந்தனைகளை விதிக்கத் தொடங்கி விட்டது. அதற்கு அவசியமே இல்லை,” என அவர் இன்று கோலாலம்பூரில் நிருபர்களிடம் கூறினார்.
சந்திப்புக்கு நஜிப் விடுத்த அழைப்பை தான் ஏற்றுக் கொள்வதற்கு முன்னர் 2007ம் ஆண்டு அந்த இயக்கம் (ஹிண்ட்ராப்) மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொண்டது
முன் நிபந்தனைகள் விதிக்கப்பட்டால் சந்திப்பு நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை என மஇகா தலைமைச் செயலாளர் எஸ் முருகேசன் கூறியதற்கு ஏற்ப அகமட்டின் கருத்துக்களும் அமைந்துள்ளன.