“நீங்கள் தூய்மையாக இருந்தால் சிலாங்கூரிலும் பினாங்கிலும் ஆட்சி மன்ற உறுப்பினர்கள் சொத்துக்களை அறிவித்தது போல செய்ய நீங்கள் ஏன் பயப்பட வேண்டும் ?”
சொத்துக்களை அறிவிப்பது பற்றி அம்னோ இதேர்தலுக்கு முன்னர் இன்னும் முடிவு செய்யவில்லை
என்ன நடக்கிறது: புதிய அம்னோ உறுப்பினர்கள் மட்டும் சொத்துக்களை அறிவிக்க வேண்டுமா ? கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அகமட் மஸ்லான் அவர்களே, அனைத்து வேட்பாளர்களும் (பழையவர்கள், புதியவர்கள், கோடீஸ்வரர்கள் ) அதனைச் செய்ய வேண்டும். தயவு செய்து எந்த ஒப்பனையும் இல்லாமல் அதனைச் செய்யுங்கள்.
ஆனால் அது நடக்கப் போவதில்லை. அதுவும் டிஏபி செய்ததை அது செய்யாது. புத்ராஜெயாவுக்கான பாதையில் பக்காத்தான் ராக்யாட் ஒரு தரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் அம்னோ எவ்வளவோ பின் தங்கி விட்டது.
ஆகவே அம்னோ தொடர்ந்து ஆட்சி புரிவதற்கு எந்தக் காரணமும் இல்லை. அது 13வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அது தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புக்களின் துணையுடன் மோசடி, திடீர் பிரஜைகள் வழியாக கிடைத்ததாகத்தான் இருக்கும்.
நீலகிரி: நீங்கள் தூய்மையாக இருந்தால் சிலாங்கூரிலும் பினாங்கிலும் ஆட்சி மன்ற உறுப்பினர்கள் சொத்துக்களை அறிவித்தது போல நீங்களும் செய்ய ஏன் பயப்பட வேண்டும் ?
நீங்கள் உங்கள் சொத்துக்களைப் பிரதமருக்கு அறிவிக்கின்றீர்களா இல்லையா என்பதில் மக்களுக்கு அக்கறையில்லை. நீங்கள் மக்கள் பேராளராக இருப்பதால் மக்களிடம் அதனைத் தெரிவியுங்கள்.
பிரதமரிடம் அதனை ஏன் சொல்ல வேண்டும் ? அவர் மக்கள் அல்லவே !
டபிள்யூ சோய்: அனைத்து தனிநபர் சொத்துக்களையும் இணையத்தில் அறிவியுங்கள். நீங்கள் உண்மையானவர்கள் என்பதைக் காட்டுவதற்கு அதுவே சிறந்த வழி. பணக்காரராக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. அது சட்டவிரோதமாக சேர்த்த பணமாக மட்டும் இருக்கக் கூடாது.
மலாயா உணர்வு: ஊழலையும் லஞ்சத்தையும் ஒடுக்க பிரதமர் அரும்பாடுபடுகிறார். ஆனால் அதில் எதிர்க்கட்சியினரும் அம்னோ அல்லது பொது மக்களுமே சம்பந்தப்பட்டுள்ளனர்.
தொடக்கப் பள்ளியில் பயிலும் என்னுடைய மகனுக்குக் கூட அது நன்கு தெரியும். அந்த அபத்தங்கள் போதும். பக்காத்தானுக்கு வாக்களித்து நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மீட்போம்.
வீரா: வேட்பாளர்களைப் பற்றிப் பேச வேண்டாம். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில, கூட்டரசு நிலைகளில் பதவி வகிக்கின்றவர்கள் தயவு செய்து தணிக்கை செய்யப்பட்ட தங்கள் சொத்துக்களைப் பொது மக்களுக்கும் ஊடகங்களுக்கும் அறிவியுங்கள்.(பினாங்கிலும் சிலாங்கூரிலும் செய்யப்பட்டது போல)
அடையாளம் இல்லாதவன்_40c8: மிகவும் குறுகிய நான்கு ஆண்டுகளில் (பிஎன் ஆட்சி செய்யும் 50 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது) பினாங்கு தூய்மையான, வர்த்தகத்தை நோக்கமாகக் கொண்ட அரசாங்கம் என்ற பாராட்டை நிதி செய்தி நிறுவனமான புளும்பெர்க்-கிடமிருந்து பெற்றுள்ளது.
இந்த நாடு முதல் தரத்தில் இருக்க வேண்டுமானால் அது பினாங்கு அரசாங்கத்தை போல இயங்க வேண்டும்.
Pink Floyd: ஊழல் மலிந்த அம்னோ பிஎன் தலைவர்கள் தங்கள் சொத்துக்களை அறிவிக்கும் போது அவை நிச்சயம் நன்றாகத் தோற்றமளிக்கும்.
அந்தச் சொத்துக்களை அவர்கள் பட்டியலிடப்பட்ட பட்டியலில் சேராத சொத்துக்கள் என வகைப்படுத்தி பட்டியைலிடப்பட்ட சொத்துக்களை மட்டுமே காண்பிப்பார்கள்.
அரமெகடோன்: காகிதத் துண்டு ஒன்றில் உங்கள் சொத்துக்களை எழுதி கையெழுத்துப் போடுவது மிகவும் சுலபம். யாராவது பொய் சொல்வதாக கண்டு பிடிக்கப்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையே நாங்கள் அறிய விரும்புகிறோம்.