‘தமிழ்ப்பள்ளிகளின் UPSR அடைவுநிலை 80 விழுக்காட்டாக இருக்க வேண்டும்’

7A பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு ஒரு தமிழ்ப்பள்ளியின் தரத்தை நிர்ணயிக்கக்கூடாது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 மாணவர்கள் UPSR தேர்வுக்கு அமருகின்றனர். இதில் 1045 மாணவர்கள் 7A பெற்றுள்ளனர். இவ்வாண்டு தமிழ்ப்பள்ளிகளின் தேர்ச்சி விவரம் கிடைக்கப்படவில்லையென்றாலும், 50 விழுக்காட்டு மாணவர்கள் மட்டுமே தேர்வுக்கு அமர்ந்த ஏழு பாடங்களிலும் குறைந்த பட்சம் C தேர்ச்சி பெற்றிருப்பவர் என்று திண்ணமாக கூறலாம் என தமிழ் அறவரியத் தலைவர் சி. பசுபதி கூறினார்.

15,000 மாணவர்கள் அமரும் ஒரு பொதுத்தேர்வில் 50 விழுக்காடு தேர்ச்சி நிலை என்பது வருந்தத்தக்க ஒன்று. மாணவர்கள் எண்ணிக்கையில் அடிப்படையில் பார்க்கும்போது நமது தமிழ்ப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்தபட்சம் 80 விழுக்காடு இருக்க வேண்டும் என வழக்கறிஞருமான சி. பசுபதி மேலும் கூறினார்.

தமிழ் அறவாரியம் தமிழ்ப்பள்ளிகளின் UPSR அடைவுநிலை 80 விழுக்காட்டாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஐந்து ஆண்டுக்கால திட்டங்களை தீட்டியுள்ளது.

இதில் முக்கிய மூன்று திட்டங்களில்:

1.    பெற்றோர்களும் மாணவர்களின் வெற்றியை உறுதி செய்யலாம்

2.    தலைமை மற்றும் துணைத் தலைமை ஆசிரியர்கள் தலைமைத்துவ ஆளுமையை அதிகரிப்பது.

3.    பள்ளியை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்று நடத்த பள்ளி வாரியத்தை அமைத்தல்.

மேற்குறிப்பிட்டுள்ள 3 திட்டங்களும் பள்ளி தலைமைத்துவம் மற்றும் மாணவர்களை மையப்படுத்து மேற்கொள்ளப்படும் திட்டங்களேயாகும். இந்த திட்டங்கள் சராசரி மற்றும் பின்தங்கிய மாணவர்களை முதன்மைப்படுத்தி மேற்கொள்ளப்படும் திட்டங்கள்.

7A என்ற மாயையிலிருந்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறலாம் என்ற மனநிலையை அடைய செயலில் இறங்க வேண்டும். நமது சமுதாயத்தின் வளர்ச்சியில் அளவுகோல் ஒரு மருத்துவ கல்லுரி மற்றும் UPSR தேர்வில் 7A என்ற நிலை மாற வேண்டும். அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறலாம் என்ற மனநிலையோடு மாணவர்களை மையப்படுத்தி செயலில் இறங்குவோம் என்றார் தமிழ் அறவரியத் தலைவர் சி. பசுபதி.