‘தலைமை நீதிபதி இன்னும் நிறைய செய்ய முடியும். அவர் தமது பதவிக்கு இன்னும் எஞ்சியுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி அரசமைப்பைப் பின்பற்றுமாறு பிரதமருக்கு ஊக்கமூட்ட முடியும்’
நீதித் துறை சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறு தலைமை நீதிபதி பிரதமருக்கு வேண்டுகோள்
அடையாளம் இல்லாதவன்_4031: சட்ட ஆட்சி முறை எப்போதும் நிலை நிறுத்தப்பட வேண்டும் என தலைமை நீதிபதி சொல்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நீதித் துறை சுதந்திரம் என்ன விலை கொடுத்தாவது காப்பாற்றப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும்.
அது நடந்தால் நீதித் துறை மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும். அதன் விளைவாக உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை கூடும்.
மனக் குறைகளைக் கொண்டுள்ள முதலீட்டாளர்கள் நீதியை நியாயமாக நிலை நிறுத்துவதற்கு நீதித் துறை உள்ளது என அவர்களுக்குத் தெரியும்.
நீதித் துறை குறித்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தால் நீதிபதிகள் வழங்கும் தீர்ப்பை அவர்கள் ஏற்றுக் கொள்வர். அது தான் சிறந்த வழி.
ஒஎம்ஜி!!: நீதித் துறை சுதந்தரம் பெறப்பட வேண்டுமே தவிர கொடுக்கப்படக் கூடாது.
பிரிட்டனில் நீதிபதிகள் பகைமைப் போக்குடைய நிர்வாகத் தரப்புக்கு எதிராக துணிந்து செயல்படுவதால் வெஸ்ட்மினிஸ்டர் பாணியில் நீதித் துறை சுதந்திரம் நிலை நாட்டப்பட்டுள்ளது என்பது தலைமை நீதிபதிக்குத் தெரியவில்லையா ? ஆனால் இங்கு மலேசியாவில் தாம் பதவியில் இருந்த போதும் அதற்குப் பின்னரும் நீதித் துறையைத் தொடர்ந்து தாக்கி வரும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மீது நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் சாட்ட எந்த நீதிபதிக்கும் துணிச்சல் இல்லை.
கீ துவான் சாய்: அரசமைப்பில் 121வது பிரிவை மீண்டும் இணைப்பதின் மூலம் நீதித்துறை சுதந்திரத்தை மீண்டும் நிலை நிறுத்துமாறு நாடாளுமன்றத்தை தலைமை நீதிபதி கேட்டுக் கொள்ள வேண்டும். அதிகாரப் பிரிப்பை அந்தப் பிரிவு எடுத்துரைக்கிறது.
1988ல் மகாதீர் அதனை நீக்கி விட்டார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சீர்திருத்தத்தைக் கொண்டு வர விரும்பினால் 121வது பிரிவை மீண்டும் சேர்க்க வேண்டும். உண்மையில் அது சீர்திருத்தம் கூட இல்லை. அதனை மீண்டும் அதே இடத்தில் வைப்பதாகும்.
பார்வையாளன்: பேராக் வழக்கில் சட்டத்தை ‘தலை கீழாகத் திருப்பி’ அந்த மாநிலத்தை பிஎன் -னிடம் ஒப்படைத்த நீதிபதிகள் குழுவில் தலைமை நீதிபதி அரிபின் ஸாக்காரியாவும் இருந்தார்.
அந்த வெறுப்பைத் தந்த தீர்ப்புக்கு பின்னர் அவரும் அவருடன் ஒத்துழைத்த சகாக்களும் விரைவாக பதவி உயர்வு பெற்றனர். சில யோசனைகளைச் சொல்வதின் மூலம் தாம் நியாயமானவர் என்பதைக் காட்டிக் கொள்ள அவர் முயலுகிறார். அவை நிச்சயம் அமலாக்கப்பட மாட்டாது என்பது அவருக்குத் தெரியும்.
ஸ்டார்ர்: தேசியத் தலைமை நீதிபதி சாலே அபாஸ் நீக்கப்பட்ட பின்னர் எழுந்த நீதித் துறை நெருக்கடி அரசாங்கத்தின் அடித்தளத்தையே அசைத்து விட்டது. அதனால் நிர்வாகம் மீது மக்கள் நம்பிக்கை சிதறி விட்டது.
அதற்குப் பின்னர் நீதித் துறை நிர்வாகத்தின் ‘கருவியாகவே’ இருந்து வந்துள்ளது.
பாவி: திரு தலைமை நீதிபதி அவர்களே, மகாதீர் பதவியில் இருந்த போது அவர் ‘குதிக்கவும்’ எனக் கூறினால்’எவ்வளவு உயரத்திலிருந்து ?’ எனக் கேட்கும் அளவுக்கு நீதிபதிகள் அடி பணிந்திருந்தார்கள்.
1988ம் ஆண்டு சாலே அபாஸை மகாதீர் நீக்கிய பின்னர் அது தெளிவாக தெரிந்தது. அவர் நீக்கப்படுவதற்கு ‘இணக்கம்’ தெரிவித்த நீதிபதிகளில் சிலர் இன்னும் பதவியில் உள்ளனர். புதிய அரசாங்கம் அந்த 1988 பிசாசை விரட்ட வேண்டும்.
ஜோ லீ: சந்தேகம் என்ற சாதகத்தை தலைமை நீதிபதி அரிபின் ஸாக்காரியாவுக்கு நாம் வழங்குவோம். தலைமை நீதிபதி இன்னும் நிறைய செய்ய முடியும். அவர் தமது பதவிக்கு இன்னும் எஞ்சியுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி அரசமைப்பைப் பின்பற்றுமாறு பிரதமருக்கு ஊக்கமூட்ட முடியும்.
அவருக்கு பெரும்பான்மை சிவில் சமூகம் ஆதரவளிக்கும். பிரதமருடைய அப்பட்டமான அதிகார அத்துமீறல்களை எதிர்க்க தேவைப்பட்டால் மக்கள் அவருக்கு ஆதரவளிக்கத் தயார்.
தலைமை நீதிபதி அவர்களே என்ன சொல்கின்றீர்கள் ?
அடையாளம் இல்லாதவன்#12566075: பிரதமர் நீங்கள் சொல்வது போல செய்யா விட்டால் நமக்கு என்ன மாற்று வழி உள்ளது என்பதைச் சொல்லுங்கள்.
உங்கள் அடிச்சுவட்டில்: மலேசியாவில் இன்று நீதித் துறை சுதந்திரம் உள்ளதா இல்லையா ? இல்லை என்றால்அது மீறப்பட்ட சம்பவங்களை எங்களுக்குச் சொல்லுங்கள்.