டி.ஆர்.காங்கோ நாட்டிலுள்ள கோமா நகரை கைப்பற்றியது எம்-23 போராளிக்குழு

டி.ஆர்.காங்கோ நாட்டின் வளம் மிகுந்த பகுதியான கிழக்குப்பகுதியில் உள்ள கோமா நகரை எம்-23 போராளிக்குழுப் படையினார் கைப்பற்றியுள்ளனர். இராணுவம் மற்றும் ஐ.நா. அமைதிப்படையின் தடையையும் மீறி அந்த நகரை போராளிகள் கைப்பற்றியுள்ளனர். பழங்குடியின டுட்சிஸ் இனம் ஆளும் பக்கத்து நாடான ருவாண்டா நாட்டின் ஆதரவு இந்த எம்-23 போராளிகளுக்கு உள்ளது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் டி.ஆர்.காங்கோவின் தலைவர் ஜோசப் கபிலாவும் ருவாண்ட தலைவர் பால் ககேமும் பேச்சுவார்த்தை நடத்த உகாண்டா நாட்டிற்கு சென்று உள்ளனர். இங்கு நடந்துவரும் சண்டைக்கு பயந்து மக்கள் வீட்டை காலி செய்து அகதிகளாக வெளியேறி வருகின்றனர். அரசு பேச்சுவார்த்தை நடத்தவரவில்லையென்றால் அடுத்து புகாவு நகரை கைப்பற்றுவோம் என்று எம்-23 போராளிக்குழுவின் தலைவர் சூல்தானி மகெங்கா கூறியுள்ளார். போராளி குழுக்களை மக்கள் எதிர்க்க கபிலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, ஐ.நா. அமைதிப்படை, போராளிக்குழுக்களை தடுத்து நிறுத்தவில்லை என்று பிரான்சு அரசு குறை கூறியுள்ளது.