“தன்னிச்சையாக முழு அளவில் விசாரணையைத் தொடங்கத் தயங்குவது அந்த விஷயத்தை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் தொடருகின்றன என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது.”
பணம் கொடுக்க முன் வந்தது பற்றி புகார் செய்யுங்கள் என ஒராங் அஸ்லி பெற்றோர்களுக்கு அறிவுரை
ஸ்விபெண்டர்: அந்த மாணவர்களை அறைந்த ஆசிரியர் இன்னும் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்படவே இல்லை. ஆகவே பணம் கொடுக்க முன் வந்த விஷயம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு நியாயமாக விசாரிக்கப்படும் என கல்வித் துணை அமைச்சர் புவா ஸார்க்காஷி உறுதியாக நம்புகிறார் ?
பணம் கொடுக்க முன் வந்ததாக கூறப்படும் விஷயம் குறித்துப் பெற்றோர்கள் போலீசில் புகார் செய்ய வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். அந்தச் சம்பவம் தண்டிக்கப்படாமல் தீர்க்கப்படாமல் போகக் கூடாது. இல்லை என்றால் வெறி பிடித்த ஆசிரியர்கள் தங்கள் சமயச் சித்தாந்தங்களை பின்பற்றுமாறு முஸ்லிம் அல்லாத மாணவர்களை தொடர்ந்து மிரட்டுவர் அல்லது வற்புறுத்துவர்.
கொதிக்கும் மண்: மற்ற அரசாங்க அமைப்புக்களைப் போன்று கல்வி அமைச்சும் புகார் செய்தால் மட்டுமே விசாரிக்கப்படும். நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்துகின்றது ?
தன்னிச்சையாக முழு அளவில் விசாரணையைத் தொடங்கத் தயங்குவது அந்த விஷயத்தை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் தொடருகின்றன என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது.
சுவாராம் போன்ற அரசு சாரா அமைப்புக்களை ஒடுக்குவது என வரும் போது அத்தகைய தயக்கத்தை நான் காணவில்லை. ஏன் ?
ஆர் ஏ: பெற்றோர் ஆசிரியர் சங்கம் மட்டுமே அந்தப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும். மற்ற தரப்புக்கள் சம்பந்தப்படக் கூடாது. ஆசிரியர்களும் சொந்த விருப்பு வெறுப்புக்களைக் கொண்ட மனிதர்களே. ஆகவே ஆசிரியர்களை பணிகளுக்கு அனுப்பும் முன்னர் மாணவர்களை கையாளும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
ஒதுக்குப்புறப் பகுதிகளில் வேலை செய்வது மிகவும் கடினமாகும். ஆசிரியர்கள் அங்கிருந்து விரைவாக வெளியேறுவதையே விரும்புவர். ஒரு வேளை அந்த ஆசிரியர் அங்கு நீண்ட காலம் இருந்திருக்க வேண்டும். வேறு இடத்துக்கு அவர் எங்காவது அனுப்பப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
அடையாளம் இல்லாதவன்#62211637: அமைச்சு அந்த சம்பவத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியஅவசியம் இல்லையா ? சிங்கப்பூராக இருந்தால் இன்னேரம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டனையும் கொடுக்கப்பட்டிருக்கும்.
பள்ளிக்கூடங்களுக்குச் செல்லும் நமது பிள்ளைகளுடைய நலன்களைக் கவனிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளவர்கள் இவ்வாறு மெத்தனமாக இருப்பதும் இந்த சாதாரண விஷயத்தை இழுத்துக் கொண்டே போவதும் ஏன் ?
பையுவன்செங்: ‘உண்மையில் ஆசிரியர்கள் தாங்கள் தவறு செய்ததை ஒப்புக் கொள்வதற்கு அது ஒப்பாகும்,” என புவாட் சொன்னார். நீங்கள் சொல்வதின் அர்த்தம் என்ன ? மாணவர்களை அவர்கள் அறைந்தது அவர்கள் தப்பு இல்லையா ?
புதிய மலேசியா ஜிஇ13: பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம் மீது அமைச்சு ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியிருக்க வேண்டும். பெற்றோர்கள் புகார் செய்ய வேண்டும் என ஏன் எதிர்பார்க்கின்றீர்கள் ? லஞ்சமோ இல்லையோ அமைச்சு உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும்.
மூங்கில்: கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம் நிகழ்ந்து பல வாரங்கள் முடிந்து விட்டன. போலீசிலும் புகார் செய்யப்பட்டு விட்டது. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. ஒராங் அஸ்லி பெற்றோர்கள் அந்த விஷயத்தை தொடர வேண்டும் என நான் விரும்புகிறேன். அம்னோ மூளைச் சலவை செய்துள்ள அந்த ஆசிரியர் தப்பிக்கக் கூடாது.
முதியவர்: பெற்றோர் ஆசிரியர் சங்க துனைத் தலைவர் சொன்னதை புலனாய்வாளர்கள் உறுதி செய்தால் போதும். ஆனால் அது நீல நிற சீருடை அணிந்தவர்களுக்கு அது தெரியாததல்ல. அந்த விவகாரத்தை தீர்க்க அவர்கள் ஒப்புதல் வாக்குமூலத்துக்காக காத்திருக்கின்றனர்.
அடையாளம் இல்லாதவன்_3e06: ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் ? என்ன நடவடிக்கை ? அவர் இன்னொரு பள்ளிக்கூடத்துக்கு மாற்றப்படுவார். அவர் அங்கும் அதே வேலையைச் செய்வார்.
இது பல காலமாக நிகழ்கிரது. ஆசிரியர் தொழிலுக்குத் தவறான மக்களை அமைச்சு தேர்வு செய்துள்ளதே அதற்குக் காரணம். அளவை நிரப்புவதற்காக அவ்வாறு செய்யப்பட்டது. நீங்கள் விதைத்ததை நீங்கள் தான் அறுவடை செய்ய வேண்டும்.
பிராமண்: “அடையாளம் தெரிவிக்கப்படாத நன்கொடையாளரிடம்” அந்த 300 ரிங்கிட் நன்கொடை கொடுக்கப்படும் என அந்த ஆசிரியர்கள் சொல்லியிருக்க வேண்டும். அது சட்டப்பூர்வமானதாக இருக்கும். ஒரு முன்னுதாரணமும் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.