பிரஞ்சு வழக்குரைஞர்களுடைய விளக்கம் சிங்கப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது

ஸ்கார்ப்பின் ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் சிங்கப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது. அது இன்று சிங்கப்பூரில் நடைபெறும்.

அந்த இரண்டு வழக்குரைஞர்களுடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாக அரசாங்கத்திடமிருந்து வாக்குறுதியைப் பெறுவதற்கு மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் தவறியதைத் தொடர்ந்து விளக்கக் கூட்டத்தை இடம் மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

அந்த இரண்டு மணி நேர விளக்கக் கூட்டம் Hotel Changi Village-ல் இன்று  நண்பகல் வாக்கில் நடைபெறும்.

அங்கு வில்லியம் போர்டோன், அபோலின் காக்னேட் ஆகிய வழக்குரைஞர்கள் விளக்கம் தருவார்கள் என சுபாங் எம்பி சிவராசா ராசைய்யா நேற்று  நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

போர்டோன் கடந்த ஆண்டு மலேசியாவுக்கு வந்த போது நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதால் முன் -வாக்குறுதியை அரசாங்கத்திடமிருந்து சுவாராமை பிரஞ்சு நீதித் துறை விசாரணையில் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்கள் கோரியிருந்தனர்.

பினாங்கு, பேராக், கோலாலம்பூர் ஆகியவற்றில் நடத்தப்பட்ட பல நிதி திரட்டும் விருந்துகளில் தனது ஆதரவாளர்களுக்கு விளக்கமளிப்பதற்கு சுவாராம் அவரை அழைத்திருந்தது.

TAGS: