ஸ்கார்ப்பின் ஊழல் புலனாய்வில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது நெருங்கிய நண்பரான அப்துல் ரசாக் பகிந்தாவும் ‘முன்னுரிமை உடைய சாட்சிகள்’ என பிரஞ்சு வழக்குரைஞர் Apoline Cagnat கூறியுள்ளார்.
பிரஞ்சு நீதித் துறை நடத்தும் அந்தப் புலனாய்வில் அவர் மனித உரிமைகளுக்குப் போராடும் சுவாராம் அமைப்பைப் பிரதிநிதிக்கிறார்.
அவர் இன்று சிங்கப்பூரில் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரஞ்சு புனாய்வு குறித்து விளக்கமளித்தார்.
சுவாராம் சமர்பித்து பிரஞ்சு நீதித் துறை ஏற்றுக் கொண்ட ஏழு சாட்சிகளில் நஜிப்பும் ரசாக்கும் மிகவும் முக்கியமானவர்கள் என Cagnat சொன்னார்.
“அவர்களை நீதிபதிகள் விசாரிக்க முடியும் என நான் நம்புகிறேன்,” என்றார் அவர்.
மற்ற ஐந்து சாட்சிகள் வருமாறு:
– தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி
– செத்தேவ் ஷாரிபு, கொலையுண்ட மங்கோலியப் பிரஜை அல்தான்துயா ஷாரிபுவின் தந்தை
– தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம்
– போஸ்டிட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் குழும நிர்வாக இயக்குநரும் துணைத் தலைவருமான லோடின் வோக் கமாருதின்
– ரசாக்கின் வலது கரம் எனக் கூறப்படும் ஜாஸ்பிர் சிங் சாஹ்ல்