“அரசாங்க ஊழியர் ஒருவர் தமது வேலையை இழக்கக் கூடும் என மருட்டப்படும் போது தேர்தல்கள் நியாயமாக நடைபெறும் எனப் பிரதமர் எப்படிச் சொல்ல முடியும் ?”
அன்வார் செராமாவில் கலந்து கொண்டதற்காக ஆசிரியர் நீக்கப்பட்டார்
பெரிய கரடி: மலேசியாவில் மாணவர்களை கன்னத்தில் அறைந்த ஆசிரியர் வேலையில் தொடருவார் ஆனால்எதிர்க்கட்சிகள் செராமாவில் கலந்து கொண்ட பகுதி நேர சமய ஆசிரியரான காத்ருன் நாடா முகமட் லாத்பி வேலையிலிருந்து விசாரணை இல்லாமால் நீக்கப்பட்டுள்ளார்.
அரசாங்க ஊழியர் ஒருவர் தமது வேலையை இழக்கக் கூடும் என மருட்டப்படும் போது தேர்தல்கள்நியாயமாக நடைபெறும் எனப் பிரதமர் எப்படிச் சொல்ல முடியும் ?
செராமாவில் கலந்து கொள்வதில் எந்த அரசியலும் இருப்பதாக நான் எண்ணவில்லை. நாம் விரும்பும் அரசாங்கத்தைத் தேர்வு செய்யும் சுதந்திரம் நமது உரிமை ஆகும்.
அரசாங்கம் அதனை விரும்பவில்லை என்பது தெளிவாகும். மக்கள் ஏதுமறியாதவர்களாகவும் கீழ்ப்படிகின்றவர்களாகவும் இருப்பதையே காண அது விரும்புகிறது.
கேகன்: ஜாவி என்ற கூட்டரசுப் பிரதேச சமய விவகாரத் துறைக்கு யார் நிதி அளிக்கிறார்கள் ? பொது மக்களா அல்லது பிஎன் -னா ? அரசியல் பாகுபாடு இல்லாமல் இயங்க வேண்டிய அரசு ஊழியர்கள் தங்கள் வாழ்வு ஆதாரத்துக்கு பிஎன் -னை நம்பியுள்ளது போல செயல்படுவது வெறுப்பை அளிக்கிறது.
கேஎஸ்என்: அரசாங்க ஊழியர்கள் அரசியலில் தீவிரமாக ஈடுபடக் கூடாது என நான் கேள்விப்பட்டுள்ளேன்.செராமாவில் கலந்து கொள்வது தீவிர அரசியல் ஈடுபாடு என அர்த்தமா ?
இந்த நாடு பற்றியும் அது ஆளப்படும் முறை பற்றியும் ஊழல் பற்றியும் முறைகேடுகள் பற்றியும் அரசியல்வாதிகள் சொல்வதைக் கேட்கவே செராமாக்களுக்கு மக்கள் செல்கின்றனர்.
அந்தக் காரணம் அமலாக்கப்பட்டால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் நீக்கப்பட வேண்டும். ஏனெனில் அம்னோ பாரு செராமாக்களில் கலந்து கொள்கின்றவர்களில் பெரும்பாலோர் அரசு ஊழியர்கள். இல்லையா ?
அரசு ஊழியர்கள் அம்னோ பாரு சேவகர்கள் அல்ல. பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய பொது ஊழியர்கள்.
எந்த ஒரு அமைப்பிலும் இணைவதற்கான உரிமை அரசமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அது ஜனநாயக உரிமை.
அன்வார் வேற்றுலக மனிதர் அல்ல. ரத்தத்திலும் ஆன்மாவிலும் உண்மையான மலேசியர். இது என்ன நடவடிக்கை. வழக்கம் போல ஒரே மலேசியா பிரதமர் மௌனமாக இருக்கிறார்.
ஜெரார்ட் லூர்துசாமி: அம்னோ/பிஎன் தலைவர்கள் நிகழ்த்தும் அரசியல் உரைகளை அரசு ஊழியர்கள்செவிமடுக்கலாம். அது ஒ கே. அவர் நீது மன்றத்துக்கு சென்று வழக்காட வேண்டும்.
பொது ஆணைகள் அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளில் பதவி வகிப்பதையே தடை செய்கின்றது. ஆனால் அரசியல் நடவடிக்கைகளுக்கு அல்ல.
அது கூட அண்மையில் பிஎன் அரசால் மாற்றப்பட்டு கீழ் நிலை ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அது நிரந்தர ஊழியர்களுக்கு பொருந்துமானால் ஒப்பந்த/தற்காலிக ஊழியர்களுக்குப் பொருந்தும். இல்லை என்றால் அரசமைப்பு 8வது பிரிவின் கீழ் பாரபட்சமாகும்.
அடையாளம் இல்லாதவன்_3e79: பாரபட்சம் காட்டுவதாக ஜாவி மீதும் அரசாங்கம் மீதும் வழக்குப் போடுங்கள்.அதற்கு தேவைப்படும் வழக்குரைஞர் கட்டணங்களை நாம் கொடுப்போம்.
பி தேவ் ஆனந்த் பிள்ளை: அம்னோ ஜமீன்தார்களிடமிருந்து அரசுத் துறைகள் ஆணைகளைப் பெற்றால் இதுதான் நடக்கும். அந்த நடவடிக்கை நாடாளுமன்றச் சட்டங்கள், பொது ஆணைகள் ஆகியவற்றுக்கு முரணானதாகும்.
அரசு ஊழியர்கள் அம்னோவின் உண்மையான ஊழியர்களாக மாறி விட்டனர். முழுக்க முழுக்க மலாய்க்காரர்களாக இருப்பதால் ஒர் எழுச்சி மட்டுமே அரசு சேவை தவறாக பயன்படுத்தப்படுவதை நிறுத்த முடியும். அந்த எழுச்சியை மலாய்க்காரர்களே தொடங்க வேண்டும். மற்றவர்கள் அவர்களைப் பின்பற்றுவர்.
அடையாளம் இல்லாதவன் #41809171: என்ன அநியாயம் ! அன்வார் செராமாவில் கலந்து கொண்டதற்காக பரிதாபத்துக்குரிய அந்த பகுதி நேர ஆசிரியர் நீக்கப்பட்டார்.
இதனிடையே துவா சொல்லாததற்காக ஒராங் அஸ்லி பிள்ளைகளை கன்னத்தில் அறைந்த இன்னொரு ஆசிரியர் மன்னிப்புக் கேட்கவும் இல்லை. தண்டிக்கப்படவும் இல்லை. ஏன் நீக்கப்படவும் இல்லை.
அடையாளம் இல்லாதவன் #38950338: காத்ருன் நீக்கப்படுவதற்கு முன்னர் அவரது குடும்பம் நடுநிலையாக இருந்தது. இப்போது ஜாவி நடவடிக்கையால் பாஸ் ஆதரவாளர் எண்ணிக்கை கூடி விட்டது. பிஎன் நல்ல வேலையைச் செய்துள்ளது. தொடருங்கள்.
லிம் சொங் லியோங்: எதிர்க்கட்சி செராமாக்களில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களும் மாணவர்களும் நீக்கப்படுகின்றனர். வெகு விரைவில் பள்ளிக்கூடங்களுக்குத் தேவை இல்லாமல் போகும். நமது இளைஞர்கள் அனைவரும் மாட் ரெம்பிட்-களாக மாறி அம்னோவுக்காக சண்டை போடுவர். அது தான் அவர்களுடைய முக்கியத் திட்டம்.
அர்ச்சான்: அம்னோ என்ன ஒரு சமயமா ?