‘கேஜே அவர்களே ,சண்டை போட வேண்டுமானால் ஒரு காரணம் இருக்க வேண்டும். சர்ச்சிலிடம் காரணம் இருந்தது. மக்கள் பணத்தைத் திருடும் சுயநலனைத் தவிர அம்னோவிடம் எதுவுமே இல்லை.’
கைரி: சர்ச்சிலைப் போல சண்டை போடுங்கள், ஒரு போதும் சரணடைய வேண்டாம்
வெர்சே: அந்தச் செய்தியின் முதல் சில பத்திகளை வாசித்த பின்னர் எஞ்சியிருக்கும் ‘குப்பையை’ வாசிக்க நான் விரும்பவில்லை. அந்த ஆக்ஸ்போர்ட் பட்டதாரி எந்தக் குப்பையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார் ?
பிகேஆருக்கு எதிராக அந்த அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் விடுக்கும் ஒவ்வொரு அறிக்கையும் பிஎன் -னைப் பற்றிப் பேசுவதைப் போலவே இருக்கிறது.
தயவு செய்து கண்ணாடியில் உங்களை பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒய்எப்: அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் வின்சன் சர்ச்சில் இனவாத நாஸிக்களுக்கு எதிராக சண்டைபோட்டார். ஆகவே கேஜே அம்னோ இளைஞர்களுக்குச் சொல்வது இது தான்: இனவாதிகளும் மலேசியாவை மிரட்டுகின்றவர்களுமான அம்னோவை எதிர்த்து சண்டையிடுங்கள். ஒன்று நீங்கள் குழப்பமடைந்திருக்க வேண்டும். அல்லது நீங்கள் போக்கிரியாக மாறியிருக்க வேண்டும்.
மாங்கோடுரியான்: அம்னோ எப்போதும் சண்டையிடுவதாக கூறப்படும் அந்த பூச்சாண்டி யார் ? ‘அல்லாதார்’என அழைக்கப்படும் பிரிவிலிருந்து தாங்கள் உருவாக்கிக் கொள்ளப்பட்ட ‘அரக்கர்கள்’ குறித்தே அவர்கள் எப்போதும் அச்சமடைகின்றனர்.
சர்ச்சில் தெளிவான நாஸி மிரட்டலுக்கு எதிராகச் சண்டையிட்டார். அம்னோ எதற்காக போராடுகின்றது ? அதனைப் பொறுத்த வரையில் ‘யாரையும் உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு என்ன தெரியும் என்பதல்ல’.
பேஸ்: கேஜே அவர்களே சண்டை போட வேண்டுமானால் ஒரு காரணம் இருக்க வேண்டும். சர்ச்சிலிடம்காரணம் இருந்தது. மக்கள் பணத்தைத் திருடும் சுயநலனைத் தவிர அம்னோவிடம் எதுவுமே இல்லை.
உங்கள் சொற்பொழிவு உத்துசான் மலேசியா அல்லது பெரித்தா ஹரியான் செய்திகளிலிருந்து மாறுபடவில்லை. ஒரே சொற்றொடர்கள் திரும்பத் திரும்பக் கூறப்படுகின்றன. அதனை நான் மீண்டும் சொல்ல விரும்பவில்லை.
புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து பட்டம் பெற்றதால் நல்ல மனிதராக இருப்பதற்கான விவேகம் உங்களுக்கு வந்து விடாது. தோல்வி காணும் ஆட்சியை எடுத்து நிறுத்துவதற்கு நீங்கள் சொல்ல முடிந்தது இவ்வளவு தானா ?
அடையாளம் இல்லாதவன் #65253729: ஒரு போதும் சரணடைய வேண்டாம். ஏனெனில் அம்னோபுத்ராக்கள் கொள்ளையடிப்பதற்கு இன்னும் நிறைய உள்ளது.
வெறுப்பு: பக்காத்தானிடம் பலவீனங்கள் இருந்தால் அம்னோவிடம் ‘பெரிய பெரிய’ பலவீனங்கள் உள்ளன.அந்தப் பட்டியல் நீளும்.
முன்னாள் அமைச்சர் ஒருவர் சொன்னது போல எந்த அம்னோ அமைச்சரிடம் தான் பிரச்னை இல்லை ? நீங்கள் உங்களுக்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். இப்போது நீங்கள் உயிர்வாழ்வுக்குப் போராடுகின்றீர்கள்.
மிஸ் பண்டோரா: நாங்கள் தேர்தலுக்கு ஆயத்தாமாகிக் கொண்டிருக்கிறோம். நாட்டை ஊழலும் இனவெறியும் இல்லாமல் சரியான பாதையில் கொண்டு செல்லக் கூடியவர்கள் என நாங்கள் நம்புகின்ற தலைவர்களைத் தெரிவு செய்ய நாங்கள் விரும்புகிறோம். எங்கள் சக மலேசியர்களுடன் மோதுவதற்கு நாங்கள் தயாராகவில்லை.
கைரி உங்களுக்கு என்ன கோளாறு ? பதற்றத்தைத் தூண்டி விடுகின்றீர்களா ? அப்படி என்றால் மே 13 திரும்பும் என ஷாரிஸாட் அப்துல் ஜலில் மருட்டுவதைப் போலச் சொல்லும் நீங்கள் கைது செய்யப்பட வேண்டும். தேசியப் பாதுகாப்புக்கு மருட்டலை ஏற்படுத்தும் அத்தகைய கருத்துக்களைச் சொல்லும் அம்னோ மட்டும் ஏன் தப்பித்துக் கொள்கின்றது ?