மூசா vs ஹிஷாம்: மனுஷனை மனுஷன் சாப்பிடுகிற உலகமடா இது !

உங்கள் கருத்து: “ஏற்கனவே தீபக், இப்போது மூசா அடுத்து யாரோ ? உண்மையில் பிஎன் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது. எலிகள் அதனை விட்டு ஒடிக் கொண்டிருக்கின்றன”

போலீஸ் படையில் ஹிஷாம் தலையிடுவதாக முன்னாள் ஐஜிபி குற்றச்சாட்டு

மஹாஷித்லா: அரச மலேசியப் போலீஸ் படையை நடத்துவதில் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் தலையிடுவதாக வெளியில் வந்து கூறுவதற்கு எந்த துணிச்சலான போலீஸ் அதிகாரிக்கும் தைரியம் இருக்கின்றதா ?

எடுத்துக்காட்டுக்கு பெர்சே 3.0 பேரணியின் போது வழக்கமான போலீஸ் நடைமுறைகளைப் புறக்கணித்து விட்டு நிருபர்களிடமிருந்து வீடியோக்களையும் கேமிராக்களையும் கைப்பற்றுமாறு ஹிஷாமுடின் ஆணையிட்டாரா ?

அரச மலேசியப் போலீஸ் படையில் ஹிஷாமுடின் தலையிடுகிறார் என நமது உள்ளங்களில் எழுந்த சந்தேகத்தை முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசானுடையக் குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்து விட்டன- அதாவது  அரசியல்வாதிகளுடைய நலன்களுக்கு உதவுவதற்காக போலீஸ் பயன்படுத்தப்படுகின்றது என்பதே அதுவாகும்.

மூசா விடுத்த குற்றச்சாட்டுக்களுக்கு ஹிஷாம் அளித்த பதில் குற்றத்தை ஒப்புக் கொள்வதைப் போன்று உள்ளது. உண்மையில் அவர் நிரபராதியாக இருந்தால் உடனடியாக ஆத்திரத்துடன் மறுத்திருப்பார்.

அதற்குப் பதில் அவர் நேரத்தைக் கடத்துகிறார். தற்காக்க முடியாத அந்த நடவடிக்கையை எப்படி மறுப்பது, தற்காப்பது என்பது தொடர்பில் ஹிஷாம் சட்டத்துறைத் தலைவருடன் அவர் ஆலோசனை நடத்த வேண்டும்.

ஜெரார்ட் லூர்துசாமி: மூசா இந்த ஒரு முறை சரியாகச் சொல்லியிருக்கிறார். போலீஸ் நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாடு ஐஜிபி-யைச் சார்ந்துள்ளது. நாடாளுமன்றத்தில் போலீசுக்காக பதில் சொல்ல வேண்டிய அரசியல்  பொறுப்பு மட்டுமே உள்துறை அமைச்சரிடம் உள்ளது.

குற்றத் தடுப்பு, காவல் பணிகள், சட்டச் சீர்திருத்தம் என வரும் போது மட்டும் அமைச்சர் கொள்கைகளை முடிவு செய்யலாம். ஆனால் அவர் போலீஸ் படையின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடவே கூடாது.

ஆனால் மூசா ஏன் இவ்வளவு காலம் மௌனமாக இருந்தார் ?  போலீஸ் படையிலும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திலும் மலேசிய அரசியல் தலையீடு ஊரறிந்த விஷயமாகும்.

ஆனால் அந்தப் பதவிகளை வகித்தவர்கள் புலனாய்வு செய்வதும் வழக்குத் தொடருவதும் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரம் என அரசியல் எஜமானர்களிடம் ஏற்கனவே துணிச்சலுடன் சொல்லியிருக்க வேண்டும்.

போலீஸ் படைக்கும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கும் அமைச்சர்கள் உத்தரவிடுவது நேர்மையற்றது, பொருத்தமற்றது, சட்ட விரோதமானது.

மலேசிய இனப் பிள்ளை:  மூசா நீங்கள் ஹீரோ அல்ல. ஹிஷாமுடினுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் பொருட்டுநீங்கள் விஷயங்களை அம்பலப்படுத்தியுள்ளீர்கள். பக்காத்தான் ராக்யாட் புத்ராஜெயாவைக் கைப்பற்றும் போது நீங்களும் பல விஷயங்களுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

மை: மூசா x ஹிஷாம்: மனுஷனை மனுஷன் சாப்பிடுகிற உலகமடா இது !

அடையாளம் இல்லாதவன்_3e06: மக்களுக்கு அந்த விஷயத்தைச் சொல்லியதற்காக நன்றி. ஆனால் அது எங்களுக்கு வெகு காலமாகவே தெரியும். அது ஒன்றும் புதிதல்ல.

அமைச்சர் இது போல நடந்து கொள்வதை நிறுத்துவதற்கு என்ன செய்யலாம் என்பதை நீங்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.

தலை வேட்டைக்காரன்: இப்போது உண்மை வெளிச்சத்துக்கு வந்து விட்டது. பிஎன் -னுக்கு முடிவு காலம் வந்துகொண்டிருக்கிறது என அறிந்த பின்னர் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மூசா அதனைச் செய்கிறாரா ?

முன்னாள் பிஎன் ஆதரவாளர்களும் சேவகர்களும் வெளியேறத் தொடங்கியுள்ளதாகத் தோன்றுகிறது. ஏற்கனவே அந்த வணிகர் தீபக் ஜெய்கிஷன், இப்போது மூசா அடுத்தது யாரோ ? உண்மையில் பிஎன் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது. எலிகள் அதனைக் கைவிட்டு விட்டு ஒடிக் கொண்டிருக்கின்றன

பிளைண்ட் பிரடோ: கொள்கையும் துணிச்சலும் இல்லாத அந்த மனிதர்களைப் பற்றி என்ன சொல்வது ?

நாடோடி: அம்னோ தலைவர்கள் சம்பந்தப்பட்ட ஆர்வத்தைத் தூண்டும் மேலும் பல கதைகளைவெளியிடுங்கள்.

மங்கோலிய மாது அல்தான்துயா ஷாரிபு கொலையில் சேர்ப்பதற்கு ஏதாவது இருக்கிறதா ? வில்லன் பாத்திரத்திலிருந்து தேசிய ஹீரோவாக நீங்கள் மாறுவதற்கு இது நல்ல வாய்ப்பு.

பால் வாரென்: தீபக் கதையைப் படித்த பின்னர் அம்னோவில் பிரதமர் நஜிப் ரசாக்கைக் காட்டிலும் வலிமையானஒருவர் அவரை வெளியேற்ற விரும்புவதாக நான் நினைத்தேன். ஆனால் அந்த நபர் இப்போது ஹிஷாமுடினையும் அகற்ற விரும்புவதாகத் தெரிகிறது.

குவிக்னோபாண்ட்: உண்மையில் நான் நஜிப்புக்காக பரிதாபப்படுகிறேன். அம்னோ மீதான கட்டுப்பாட்டைஅவர் இழந்து வருகிறார். அவருடைய நடு நிலைப் போக்கை குட்டி நெப்போலியன்கள் இனிமேலும் விரும்பவில்லை. தங்களது அரசியல் உயிர்வாழ்வை உறுதி செய்ய தாங்கள் சரி என எண்ணுவதை (அது பொது மக்களுக்குத் தவறானது) செய்ய அவர்கள் முற்பட்டுள்ளனர்.

அம்னோ பொதுப் பேரவைக்கு நடுவே நஜிப்-ஹிஷாமுடின் ஆகியோருக்கான ஆதரவை அகற்றுவதற்கு துணைப் பிரதமர், மூசாவை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தும் சாத்தியமும் உண்டு.

TAGS: