நியூயார்க்: பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் தீர்மானம் தொடர்பாக, ஐ.நா.-வில் நடந்த வாக்கெடுப்பில், அமெரிக்கா, ஜெர்மன், இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் எதிர்த்து வாக்களித்துள்ளன – ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் கலந்து கொள்ளவில்லை.
பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் நீண்ட காலமாகப் பகை நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தை, தனி நாடாக அங்கீகரிக்கக் கோரி போராடியவர் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அராபத்.
இவரது முயற்சியால் பாலஸ்தீனம் தனி நாடானது. இருப்பினும், இந்த நாடு, ஐ.நா., சபையால் இன்னும் அங்கீகரிக்கப்படாமல் உள்ளது.ஐ.நா., சபையால் தனி நாடாக அங்கீகரிக்கப்படாததால், இராணுவம் அமைப்பது, ஆயுதங்களை வாங்குவது, எல்லைகளை வரையறுப்பது போன்ற காரியங்களை, பாலஸ்தீனத்தால் செய்ய முடியவில்லை.எனவே தான், பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் தீர்மானத்தின் மீது, ஐ.நா., சபையில், நேற்று வாக்கடுப்பு நடந்தது.
ஐ.நா., சபையில் மொத்தமுள்ள, 193 உறுப்பு நாடுகளில், இந்தியா உட்பட, 126 நாடுகள் அதன் இறையாண்மையை அங்கீகரித்து உள்ளன. ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், டென்மார்க், சுவிட்சர்லாந்து, போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகள், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
ஐ.நா.,வில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தால், பாலஸ்தீனம், சுதந்திரநாடாக அறிவிக்கப்பட்டு விட்டதாகக் கருத முடியாது. கடந்த, 67-ஆம் ஆண்டுக்கு முந்தைய எல்லைகளுடன் தங்கள் நாட்டை அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பாலஸ்தீனம் வலியுறுத்தி உள்ளது.