அழியாத மை போடப்படுவது மீதான விளக்கக் காட்சியை அரசியல் தலைவர்கள் பார்வையிட்டனர்

தேர்தலில் அழியாத மையைப் பயன்படுத்துவது மீதான விளக்கக் காட்சியை தேர்தல் ஆணையம் இன்று சிலாங்கூரைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்காக இன்று நடத்தியது.

அடுத்த பொதுத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அழியாத மை போடப்படுவது தொடர்பான உண்மை நிலையை விளக்குவதே அந்த நடவடிக்கையின் நோக்கம் என சிலாங்கூர் தேர்தல் ஆணைய இயக்குநர் சுல்கிப்லி அப்துல் ரஹ்மான் கூறினார்.

“வாக்களிப்பு நடைமுறையின் போது அழியாத மையைப் பயன்படுத்துவதால் ஏற்படக் கூடிய சாத்தியங்களைப் பற்றி அரசியல் தலைவர்கள் அறிந்து கொள்ள அந்த நடவடிக்கை உதவியது,” என அவர் சொன்னார்.

ஷா அலாமில் நிகழ்ந்த அந்த விளக்கக் காட்சிக்கு தேர்தல் ஆணையத் துணைச் செயலாளர் நூர்டின் சே ங்கா விளக்கமளித்தார்.   அடுத்த பொதுத் தேர்தலில் அழியாத மையைப் பயன்படுத்துவது பற்றி பிப்ரவரி 13ம் தேதி அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்டது.

வாக்காளர்களுக்கு அவர்களது இடது கை சுட்டு விரலில்  வாக்குச் சாவடிகளில் அழியாத மை போடப்படும்.

அந்த மையைப் பயன்படுத்துவது மீது எழுந்துள்ள தவறான புரிந்துணர்வைப் போக்குவதற்குச் சரியான நேரத்தில் அந்த விளக்கக் காட்சி நடத்தப்ப்பட்டுள்ளதாக காப்பார் மஇகா தொகுதித் தலைவர் டி கணேசன் சொன்னார்.

பெர்னாமா

TAGS: