ஒரு மருத்துவமனைக்காக ஷா ஆலம் இன்னும் எவ்வளவு காலம்தான் காத்திருக்க வேண்டும்?

உங்கள் கருத்து: “இதில் நம்பமுடியாத விசயம் என்னவென்றால், முன்னாள் குத்தகையாளர் ‘முக்கியமான புள்ளி’ என்பதற்காக அவருக்கு முன்பணம் கூடுதலாகவே அள்ளிக் கொடுக்கப்பட்டிருப்பதுதான்”.

ஷா ஆலம் மருத்துவமனை ‘அடுத்த ஆண்டில் தயாராகி விடும்’

பெயரிலி_4154: 2009-இல், பொதுப்பணி அமைச்சர் சொன்னார்  2010-இல் கட்டி முடிக்கப்படும் என்று. பிறகு 2010-இல், அவரே அது 2011-இல் தயாராகி விடும் என்றார்.அதன்பின்னர் ஈராண்டுகளாக அது கைவிடப்பட்டுக் கிடந்தது. இப்போது அடுத்த ஆண்டில் தயாராகிவிடும் என்ற அறிவிப்புடன் வந்திருக்கிறார்.

அதே ஆட்கள். ஆண்டுக்காண்டு அதே கதை. அடுத்த ஆண்டில் என்ன சொல்வார்களோ? வேறு என்ன? திரும்பவும் அதே கதைதான்.

சந்திரன்சிவா: இவ்வளவு செலவிட்டதற்கு ஷா ஆலமில் இரண்டு மருத்துவ மனைகளைக் கட்டி இருக்கலாம்.அது சரி, முந்திய குத்தகையாளர்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஒரு நடவடிக்கையும் இல்லை என்றால், இந்த அரசாங்கத்தை 13வது பொதுத் தேர்தலில் விரட்டி அடிக்க வேண்டியதுதான்.

வெட்கம் கெட்ட அரசாங்கம். கொஞ்சம்கூட பொறுப்பில்லை.

கோட்ஷா: முந்திய குத்தகை, கட்டுமானம் பற்றி அறியாத ஒருவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தத் திட்ட நிர்வாகிமீது இழப்பீடு  கோரி அரசாங்கம் வழக்குத் தொடுக்க வெண்டும். மக்கள் பணத்தை வீணடிக்காதீர்கள்.

மூஷிரோ: ஈராண்டுகள் தாமதமாகி செலவுத்தொகை ரிம500 மில்லியனைத் தாண்டிவிட்டது, இப்போதுதான் பொதுப்பணி அமைச்சும் சுகாதார அமைச்சும் திட்டத்தைக் கண்காணிக்கப்போவதாகக் கூறுகின்றன.

பிகேஆர் பலவீனமாக இருப்பதால்தான் டிஏபி-க்கு மலாய்க்காரர் ஆதாரவு கூடுகிறதா?

ஜிமினி: சீனர்களும் இந்தியர்களும் மசீசவையும் மஇகாவையும் பற்றி என்ன நினைக்கிறார்களோ அதேபோலத்தான் மலாய்க்காரர்களும் அம்னோவைப் பற்றி நினைக்கிறார்கள். எல்லாமே ஊழல்மிக்க, பணத்தைச் சுருட்டிக்கொள்வதில் நாட்டம்கொண்ட கட்சிகள்.

நாம் நம்மை மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என்று பிரித்துப் பார்க்காமல் அனைவருமே மலேசியர்கள் என்று எண்ணத் தலைப்பட்டால் ஓரு வலுவான மலேசியா உருவாகும்.

பினாங்கு அம்னோ இளைஞர் தலைவர் ஷேக் ஹுசேன் மைதின் பிஎன்னின் பிரித்தாளும் சூழ்ச்சியைத்தான் இங்கும் பயன்படுத்தி  டிஏபியையும் பிகேஆரையும் பிரிக்கப் பார்க்கிறார்.

மலாய்க்காரர்கள் இன்னும் அதிகம் அதிகமாக டிஏபியில் சேர, சீனர்கள் இன்னும் கூடுதல் எண்ணிக்கையில் பாஸ் கட்சியிலும் பிகேஆரிலும் சேர சமச்சீர் பக்காத்தான் ஒன்று உருவாகும். மலேசியர்களுக்கான மலேசியா என்ற கனவும் நனவாகும்.

டும்டும்டும்: எல்லா மலேசியர்களுக்கும் தெரியப்படுத்திக்கொள்வது என்னவென்றால், நாம் எந்தவொரு கட்சியிலும் உறுப்பினர் ஆக வேண்டிய அவசியமில்லை, பிஎன்னைத் தவிர்த்து எந்தவொரு கட்சிக்கும் பக்கத்திலும் ‘X’என்ற குறையைப் போட்டால் போதும். பக்காத்தானுக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்போம். சொல்வதுபோல் செய்கிறார்களா, பார்ப்போம்.

ஏனென்றால்,  நான் மலிவான விலையில் கார்கள் வாங்க நினைக்கிறேன். பெட்ரோல் விலை குறைவதைப் பார்க்க விரும்புகிறேன். ஊழல் பேர்வழிகள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதைப் பார்க்க விரும்புகிறேன்.

கொதி சேறு: நிபோங் தெபால் பகுதியில் டிஏபி கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அவ்வட்டாரத்தில் அதற்கு ஆதரவு பெருகி வருவதற்கான அறிகுறிதான். ஆனால், அதற்காக பிகேஆருக்கு ஆதரவு குறைகிறது என்பது நினைக்கக் கூடாது.

இதுவரை மதில்மேல் பூனையாக இருந்தவர்கள் இப்போது அதில் சேர்ந்திருக்கலாம் அல்லது புதிதாக அரசியல் விழிப்புப் பெற்றவர்கள் அதில் உறுப்பினராகி இருக்கலாம். அதனால் அதற்கு ஆதரவு பெருகி இருக்கலாம்.

பிகேஆர் உறுப்பினர்கள் அக்கட்சியைவிட்டு வெளியேறி மற்ற கட்சிகளுக்குச் சென்றார்கள் என்பதற்கு எந்தப் புள்ளிவிவரமும் கிடையாது. எனவே, பக்காத்தானுக்கான ஆதரவு பெருகியுள்ளது என்பதே சரியான விளக்கமாக இருக்கும்.

அம்னோ இளைஞர் தலைவர் புள்ளிவிவரங்களை வைத்து ஆராய்வதில் ஒன்றும் புலி அல்ல.

விழிப்பானவன்: என்ன ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறார்கள், பார்த்தீர்களா. பக்காத்தானுக்கு எதிரிகள் என்றாலும், பக்காத்தானின் பலவீனங்களை எடுத்துச்சொல்லி அவற்றைக் களைவது எப்படி என்பதையும் சொல்லி இருக்கிறார்களே.

கப்பாளா பத்தாஸ் இளைஞர் தலைவர் ரீஸால் மரைக்கான் நயினா மரைக்கானுக்கும் ஷேக் ஹுசேன் மைதினுக்கும், அவர்கள் செய்த உதவிக்கு நன்றி சொல்வோம்.

ஐயா, பக்காத்தானிடம் வேறு பலவீனங்கள் ஏதேனும் உண்டா? இருந்தால் முன்கூட்டியே சொல்லுங்கள், திருத்திக்கொள்கிறோம். அம்னோ/பிஎன்னில் ரீஸால், மைதின் போன்ற தலைவர்கள் இருக்கும்போது அதற்கு வேறு பகைவர்கள் தேவையே இல்லை.

TAGS: