“சமூக நோக்கங்களுக்காக” முந்திய சிலாங்கூர் அரசாங்கத்திடமிருந்து மலிவாக பெறப்பட்ட நிலத்தில் ஆடம்பர அடுக்கு மாடித் தொகுதி கட்டப்பட்டுள்ளது மீது எழுந்துள்ள பிரச்னைக்குப் பதில் அளிப்பதை சுபாங் அம்னோ இப்போது கிளானா ஜெயா அம்னோ இடைக்காலத் தலைவர் யாஹ்யா பூஜாங்-கிடம் தள்ளி விட்டுள்ளது.
சுபாங் அம்னோ தொகுதியின் தலைமையகத்தைக் கட்டுவதற்காக அந்த நிலம் பெறப்பட்டதை ஒப்புக் கொண்ட அதன் தலைவர் மொக்தார் டாஹ்லான், அந்த நிலம் 2004ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி எல்லை மறுசீரமைப்புக்குப் பின்னர் கிளானா ஜெயா அம்னோவிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
“சுபாங் அம்னோ அந்த நிலத்துக்கு விண்ணப்பித்து அதனைப் பெற்றது, தொகுதி எல்லை மறுசீரமைப்புக்குப் பின்னர் இரண்டு தொகுதிகள் உருவாகின. சுபாங் பாரு, சுபாங் லாமா ஆகியவையே அவை.”
சுபாங் பாரு சுபாங் அம்னோ தொகுதியாக தொடர்ந்தது என்றும் சுபாங் லாமா தொகுதி கிளானா ஜெயா என அழைக்கப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார்.
தொகுதி எல்லைகள் மறுசீரமைப்புச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்தத் தொகுதியின் எல்லாச் சொத்துக்களும் பிரிக்கப்பட வேண்டும் என அம்னோ தலைமையகம் ஆணையிட்டது. அதனால் எல்லாச் சொத்துக்களும் புதிய தொகுதியுடன் சம அளவில் பிரிக்கப்பட்டன என மொக்தார் குறிப்பிட்டார்.
சர்ச்சையை உருவாக்கியுள்ள அந்த நிலம் சுபாங் லாமா தொகுதிக்குக் கொடுக்கப்பட வேண்டும் என அவர் அப்போது முடிவு செய்தார்.
“நான் அந்த நிலத்தை சுபாங் லாமா தொகுதியிடம் ஒப்படைத்தேன். அதற்கான பரிவர்த்தனையை யாஹ்யா மேற்கொண்டார்,” என அந்த நிலத்தை அண்மையில் டிஏபி குழு ஒன்று பார்வையிட்டது குறித்து வினவப்பட்ட போது மொக்தார் கூறினார்.
யாஹ்யாவுக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது
டிஏபி எழுப்பியுள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றித் தாம் யாஹ்யாவுடன் நேரடியாகப் பேசியிருப்பதாவும் அவர்சொன்னார்.
“அடுத்த வாரம் வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் அவர் அந்த விஷயத்தை விளக்குவார் என நான் எதிர்பார்க்கிறேன்,” என்றார் மொக்தார்.
2004ம் ஆண்டு ஒரு சதுர அடி ஒரு ரிங்கிட் என்ற விலையில் பெறப்பட்ட அந்த நிலத்தை கடந்த செவ்வாய்க்கிழமையன்று டிஏபி தேசியப் பிரச்சாரச் செயலாளர் டோனி புவா தலைமையில் சென்ற ஒரு குழு பார்வையிட்டது.
அந்த நிலம் இப்போது 200 வீடுகளைக் கொண்ட சூரியா டமன்சாரா ஆடம்பர அடுக்குமாடித் தொகுதியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அதன் மதிப்பு இப்போது ஒரு சதுர அடிக்கு 200 ரிங்கிட் ஆகும்.
2006ம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த அடுக்குமாடித் தொகுதியில் எல்லா வீடுகளும் வாங்கப்பட்டு விட்டன. ஒரு வீட்டின் மதிப்பு 450,000 ரிங்கிட் என பெட்டாலLand handed to Kelana Jaya Umno, says Subang Umnoிங் ஜெயா உத்தாரா எம்பி-யுமான புவா தெரிவித்தார்.