‘சீனர்களுக்குப் பிரதமர் பதவியில் ஆசை இல்லை’

மலேசிய சீனர்கள் பிரதமராவதற்கு நாட்டம் கொள்ளவில்லை என பெட்டாலிங்  ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார். மாறாக மலேசியச் சீனர்கள் தங்களை முதலில் மலேசியர்களாகக் கருதுகின்றனர் என்றும் இன, சமய வேறுபாடின்றி அனைத்து மலேசியர்களுடைய நலன்களில்  அக்கறை கொண்டுள்ள எந்த இனத்தைச் சேர்ந்த ஒருவரையும் பிரதமராக ஏற்றுக்…

KLIA2ன் கட்டுமானச் செலவுகள் : ஏர் ஏசியா விடுத்த அறைகூவலை…

KLIA2 முனையத்தைக் கட்டுவதற்கான செலவுகள் கூடிக் கொண்டே போவது  பற்றியும் அதன் கட்டுமானத்தில் பல முறை தாமதங்கள் ஏற்பட்டுள்ளது பற்றியும்  புலனாய்வு செய்ய சுயேச்சைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனத்  தெரிவிக்கப்பட்ட யோசனையை டிஏபி ஆதரித்துள்ளது. அந்த முழு விவகாரம் மீது இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின்…

முறையீட்டில் புவா வெற்றி, 200,000 ரிங்கிட்டைத் திருப்பிக் கொடுக்குமாறு சபாஷ்-க்கு…

அவதூறு கூறியதற்காக சபாஷ் எனப்படும் Syarikat Bekalan Air Selangor-க்கு 200,000 ரிங்கிட் கொடுக்குமாறு  உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து செய்து கொண்ட முறையீட்டில் பெட்டாலிங் ஜெயா உத்தாரா  எம்பி டோனி புவா வெற்றி பெற்றுள்ளார். புவா அவதூறு கூறியிருப்பதாக தீர்ப்பளித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் சபாஷ்…

தேர்தல் தோல்வி பயம் பில்லியன் ரிங்கிட் பெறும் குத்தகைகளை வெளியிடுவதற்குக்…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தமது பதவிக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் பில்லியன் ரிங்கிட் திட்டங்களை அவசரம் அவசரமாக வழங்குவதற்கு வரும் தேர்தலில் தோல்வி காணக் கூடும் என்ற பயம் காரணமா என டிஏபி இன்று வினவியது. தனியார் மயத் திட்டங்கள் வழங்கப்படும் வேகத்தைப் பார்க்கும் போது இரண்டு…

உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கான மறு பயிற்சிக்கு 22 மில்லியன் ரிங்கிட் ஏன்…

ஒப்பந்தம் ஒன்றுக்கு ஈடாகக் கல்வி அமைச்சர் முஹைடின் யாசினுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியதை அமெரிக்க விளையாட்டுக் கல்லூரி (USSA) மறுத்துள்ள போதிலும் டிஏபி அந்தப் பேரம் மீது தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றது. ஆயிரம் உடற்பயிற்சிக் கல்வி ஆசிரியர்களுக்கு மறு பயிற்சி அளிப்பதற்கு அம்னோவுடன் தொடர்புடையது எனக்…

டோனி புவா: நில அபகரிப்பு குறித்து நஜிப் விளக்க வேண்டும்

எம்பி பேசுகிறார்:  அம்னோ தலைவர்கள் சிலாங்கூரில் நிலம் அபகரிக்கப்பட்ட விவகாரத்துக்குப் பொறுப்பேற்க மறுப்பதும் அது பற்றி எதுவும் தெரியாது என்று நாடகமாடுவதும் பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ளது. 2004-இல், ஆரா டமன்சாராவில் 87,188 சதுர அடி நிலம் மிகக் குறைந்த விலையில் சுபாங் அம்னோவுக்கு விற்கப்பட்ட விவகாரத்தை  செவ்வாய்க்கிழமை நாங்கள்…

‘அந்த நிலம் கிளானா ஜெயா அம்னோவிடம் ஒப்படைக்கப்பட்டது என சுபாங்…

"சமூக நோக்கங்களுக்காக" முந்திய சிலாங்கூர் அரசாங்கத்திடமிருந்து மலிவாக பெறப்பட்ட நிலத்தில் ஆடம்பர அடுக்கு மாடித் தொகுதி கட்டப்பட்டுள்ளது மீது எழுந்துள்ள பிரச்னைக்குப் பதில் அளிப்பதை  சுபாங் அம்னோ இப்போது கிளானா ஜெயா அம்னோ இடைக்காலத் தலைவர் யாஹ்யா பூஜாங்-கிடம் தள்ளி விட்டுள்ளது. சுபாங் அம்னோ தொகுதியின் தலைமையகத்தைக் கட்டுவதற்காக…

‘அம்னோவின் மலிவான நிலத்தில் இப்போது ஆடம்பர அடுக்குமாடித் தொகுதி அமைந்துள்ளது’

சிலாங்கூரில் மக்களுக்காக தான் மலிவான நிலங்களைப் பெற்றதாக பிஎன் கூறிக் கொள்வதை நிராகரிப்பதற்கு பக்காத்தான் ராக்யாட் இன்று நடவடிக்கை எடுத்துள்ளது. கிளானாஜெயாவில் அவ்வாறு மலிவாக பெற்ற நிலங்களில் ஒன்றில் ஆடம்பர அடுக்குமாடித் தொகுதி ஒன்று அமைந்துள்ளதை அது சுட்டிக் காட்டியது. இன்று அந்த இடத்துக்கு பெட்டாலிங் ஜெயா உத்தாரா…

ROS நடத்தும் விசாரணையில் தாம் இழுக்கப்பட்டதை புவா ஆட்சேபிக்கிறார்

மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் மீது  ஆர்ஒஎஸ் என்ற சங்கப் பதிவதிகாரி அலுவலகம் போலீஸ் துணையுடன் விசாரணைக்கு அழைத்துள்ள நபர்களில் பெட்டாலிங் ஜெயா எம்பி டோனி புவா கடைசியாக அழைக்கப்பட்டுள்ளார். அது குறித்து ஆத்திரமடைந்துள்ள புவா," இது மென்மேலும் அபத்தமாகி வருகின்றது. சுவாராமை விசாரிக்கும் துறையில் மூளையில்லாதவர்கள்…

அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் தாங்கள் சொல்வதற்குப் பொறுப்பேற்க வேண்டும்

சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் உட்பட அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் தாங்கள் சொல்வதற்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும். அதிகாரிகள் தயாரித்ததையே  தாங்கள் வாசித்ததாக கூறி அவர்கள் தப்பித்துக் கொள்ளக் கூடாது என பத்து எம்பி  சுவா தியான் சாங் கூறினார். "அதிகாரிகள் தயாரிக்கும் பதிலைத் திருத்தும்…

இஸ்மாயில் சப்ரியின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும்: டோனி புவா

உள்நாட்டு வாணிகம், கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சப்ரி மலேசிய நிறுவனங்கள் ஆணைய (சிசிஎம்) த்தைக் கொண்டு சுவாரா இனிஷியேடிப் சென் பெர்ஹாட் மீது விசாரணை மேற்கொண்டதன்வழி தம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்பதால் அவரின் சம்பளத்தில் ரிம10 ரிங்கிட்டைப் பிடித்தம் செய்ய வேண்டும் என்று டிஏபி…

புவா: நஜிப் மிதவாதி என்றால் பெர்காசாவை கண்டிக்க வேண்டும்

பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் மிதவாதத்தை ஊக்குவிப்பவராக இருந்தால், அதை நிரூபிக்க மலாய் உரிமைகளுக்காக போராடும் அமைப்பான பெர்காசாவுடன் எல்லா உறவுகளையும் துண்டித்துக்கொள்ள வேண்டும். அதைச் செய்யத் தவறினால், உலகளாவிய மிதவாத இயக்கத்தை ஊக்குவிக்கும் நஜிப்பின் முயற்சியெல்லாம் “வெறும் அரசியல் மோசடிதானே தவிர வேறு ஒன்றுமல்ல”…

புவா: கடந்த கால ஊழல்கள் தற்காப்புத் தளவாட ஒப்பந்தங்கள் ஆய்வு…

தற்காப்புச் செலவுகள் மீது இரு தரப்பு நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவை அமைப்பதற்கான தேவையை நிராகரிக்க தற்காப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது, அதனிடம் வெளிப்படையான போக்கும் பொறுப்புணர்வும் இல்லை என்பதைக் காட்டுவதாக பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார். அந்த நிலை, அரசாங்கத்தின் உருமாற்றத் திட்டத்துக்கு முரணாக…

புவா: செலவில்லாமலேயே வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்கலாம்

வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்க அரசாங்கம்  உதவித்தொகை என்ற பெயரில் செலவிடும் தொகை அதிகரித்துகொண்டே போகிறது. ஆனால் ஒரு காசு செலவில்லாமலேயே  அப்பிரச்னைக்குத் தீர்வுகாணலாம் என்கிறார் டிஏபி தேசிய விளம்பரப்பிரிவுச் செயலாளர் டோனி புவா. டிஏபியின் சீபூத்தே எம்பி தெரேசா கொக்கின் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கருத்தரங்கில் பேசிய…