முறையீட்டில் புவா வெற்றி, 200,000 ரிங்கிட்டைத் திருப்பிக் கொடுக்குமாறு சபாஷ்-க்கு ஆணை

puaஅவதூறு கூறியதற்காக சபாஷ் எனப்படும் Syarikat Bekalan Air Selangor-க்கு 200,000 ரிங்கிட் கொடுக்குமாறு  உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து செய்து கொண்ட முறையீட்டில் பெட்டாலிங் ஜெயா உத்தாரா  எம்பி டோனி புவா வெற்றி பெற்றுள்ளார்.

புவா அவதூறு கூறியிருப்பதாக தீர்ப்பளித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் சபாஷ் -க்கு அந்தத் தொகையை
கொடுக்குமாறும் உத்தரவிட்டிருந்ததை முறையீட்டு நீதிமன்றம் இன்று ஏகமனதாக நிராகரித்தது.

அந்த விவரங்களை புவா-வுக்காக வாதாடிய வழக்குரைஞர் கோபிந்த் சிங் டியோ இன்று மலேசியாகினியிடம்
தெரிவித்தார்.pua1

ஸாஹாரா இப்ரஹிம் தலைமையில் கூடிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழு அந்த முடிவை ஏகமனதாக  வழங்கியது. ஆனந்தன் காசிநாதர், முகமட் அரிப் முகமட் யூசோப் ஆகியோர் மற்ற இரு நீதிபதிகள் ஆவர்.

புவாவுக்குச் செலவுத் தொகையாக 50,000 ரிங்கிட் கொடுக்குமாறும் முறையீட்டு நீதிமன்றம் சபாஷ்-க்கு  ஆணையிட்டது.

வாய்மொழியாக வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பில் தனது முடிவுக்கான காரணங்களை நீதிபதிகள் குழு தரவில்லை.

அந்த முடிவைத் தொடர்ந்து சபாஷ் ஏற்கனவே அதற்குச் செலுத்தப்பட்டு விட்ட 200,000 ரிங்கிட்டையும்
திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கும்.

 

TAGS: