மலேசிய சீனர்கள் பிரதமராவதற்கு நாட்டம் கொள்ளவில்லை என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார்.
மாறாக மலேசியச் சீனர்கள் தங்களை முதலில் மலேசியர்களாகக் கருதுகின்றனர் என்றும் இன, சமய வேறுபாடின்றி அனைத்து மலேசியர்களுடைய நலன்களில் அக்கறை கொண்டுள்ள எந்த இனத்தைச் சேர்ந்த ஒருவரையும் பிரதமராக ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராக உள்ளனர் என்றும் அவர் சொன்னார்.
மலேசிய சீனர்கள் தீவிர இனவாதச் சிந்தனையில் மூழ்கியுள்ளனர் என்றும் அவர்கள் அந்த ‘இனவாத சிந்தனையை’ கை விட்டால் சீன வமசாவளியைச் சேர்ந்த ஒருவர் மலேசியாவுக்கு பிரதமராக முடியும் என்றும் பிரதமர் துறை அமைச்சர் ஷாஹிடான் காசிம் கூறியுள்ளது பற்றி புவா கருத்துரைத்தார்.
மலேசிய சீனர்களுக்கு எதிரான அந்த தவறான கருத்துக்கள் வேண்டுமென்றோ அல்லது இல்லாமலோ பரப்பப்படுவதாக அவர் ஒர் அறிக்கையில் தெரிவித்தார்.
டோனி பூவாவிற்கு பினாங்கு மாநிலத்தில் நடக்கும் இன்றைய நிலை என்னவென்று தெரியாமல் இருக்காது. இந்தியர்கள் அக்கௌன்ட் வேலை செய்வதும் சொந்த கணக்காளர் நிறுவனத்தை நடத்துவதும் பெரிய விசயமாக உள்ளது . அப்படி இருக்க அதிகார திமிர் இந்த சினர்களுக்கு நிறையவே உண்டு . மற்றவர்கள் இவர்களிடம் மட்டும் தான் வேலை செய்ய வேண்டும் . இந்த சீனர்கள் யாருக்கு கீழும் வேலை செய்ய விரும்பமாட்டார்கள் . இந்த சினர்களுக்கு துணைப் பிரதமர் பதவி கிடைத்தால் கூட போதும் அவர்கள் நாட்டு பிரஜைகளை இறக்கி நம்மை அடிமையாக்கி விடுவார்கள்!
ஆசை இல்லாத அரசியல் வாதியா ? நம்பும் படியாகவா இருக்கு ?
இந்நாட்டு குடிமக்கள் எந்த இனத்தினராக இருந்தாலும், பிரதமராக வருவதிலும், ஆசை படுவதிலும், தவறொன்றும் இருக்க முடியாது.. ஒபாமா நல்ல எடுத்து காட்டு. நம் நாட்டு அரசியல் அமைப்பில், குறிப்பிட்ட இனத்தினர் மட்டுமே பிரதமராக வரவேண்டும் என்றில்லை..
maggai நீங்கள் சொல்லுவது சரிதான். அதே சமயத்தில் அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டின் பொருளாதாரம் இன்னும் அவர்கள் கையில் தான். அதை உடைப்பது அவ்வளவு எளிதல்ல. அத்தோடு கூட ஒற்றுமையும் உண்டு. நம் கையில் பொருளாதார பலம் இருந்தால் நாமும் அவர்களைப் போலத் தான் செயல் படுவோம்!