அரசியல் செராமாக்கள் அருகருகே நடத்தப்படுவதற்கு அனுமதிக்கக் கூடாது, அவ்வாறு அனுமதித்தால் கோம்பாக்கில் கடந்த செவ்வாய்க் கிழமை இரவு நிகழ்ந்ததைப் போன்று மோதல்களே மூளும் என முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் கூறுகிறார்.
தாம் மலாக்காவில் மாவட்ட போலீஸ் தலைவராக இருந்த போது போட்டிக் கட்சிகளின் செராமாக்கள் அருகருகே நடத்தப்படுவதற்குத் தாம் அனுமதித்தது இல்லை எனவும் அவர் சொன்னார்.
என்றாலும் கோம்பாக் சம்பவத்தில் என்ன நடந்தது என்பதும் அத்தகைய ஆணைகள் கொடுக்கப்பட்டதா என்பதும் எனக்குத் தெரியாது.”
“போட்டி கட்சி உறுப்பினர் ஒருவர் இன்னொரு தரப்புக்குள் நுழைந்தால் போலீசார் வெகு வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டால் மோதல்களையும் காயம் ஏற்படுவதையும் தடுத்து விட முடியும்,” என்றார் அவர்.
மூசா, சினார் ஹரியான் “குண்டர் அரசியல்: எங்கே நமது கௌரவம்” என்னும் தலைப்பில் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் பேசிய பின்னர் நிருபர்களைச் சந்தித்தார்.
அந்தக் கருத்தரங்கில் உலு சிலாங்கூர் எம்பி பி கமலநாதன், பாஸ் மத்தியக் குழு உறுப்பினர் ஹனிப்பா மைடின், மலேசிய நன்னெறிக் கழகத் தலைவர் முகமட் டேப் சாலே ஆகியோரும் உரையாற்றினார்கள்.