நில அபகரிப்பு: மீண்டும் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டது

“நாம் அவர்களுடைய கூர்மையான வர்த்தகச் சிந்தனைகள் குறித்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். ‘சமூக நோக்கங்களுக்காக’ பெறப்பட்ட நிலத்தை ‘கொண்டோ’-வாக மாற்றிய கலையை நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்”

அந்த நிலம் கெளானா ஜெயா அம்னோவிடம் கொடுக்கப்பட்டது என சுபாங் அம்னோ சொல்கிறது

அடையாளம் இல்லாதவன்#85701391: உண்மையில் மலிவாக அந்த நிலங்களைப் பெற்ற அம்னோவும் மற்ற பிஎன் உறுப்புக் கட்சிகளும் “ஆமாம், அதற்கு என்ன இப்போது ?” எனக் கேட்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அம்னோவிலும் மற்ற பிஎன் உறுப்புக் கட்சிகளிலும் அங்கம் வகிக்கின்றவர்களும் மலேசியர்களே. ஆகவே அவர்கள் சில மில்லியன் ரிங்கிட் ஆதாயம் அடைந்தால் என்ன தவறு ? அவர்கள் மலேசியர்களுக்கு உதவி செய்கின்றனர்.

இங்கு பிரச்னையே இது தான், அவ்வாறு ஆதாயம் அடைந்தவர்கள் அந்த சில மில்லியன் ரிங்கிட்டுக்களுக்கு வரி கட்டினார்களா ? இரண்டாவதாக அவ்வாறு ஆதாயத்தை அடைந்தவர்களைத் தேர்வு செய்த அம்னோ, பிஎன் உறுப்புக் கட்சிகளைச் சேர்ந்த சாதாரண உறுப்பினர்களைப் பற்றி என்ன சொல்வது ? ஆதாயத்தில் அவர்களுக்கு பங்கு கிடைத்ததா ?

உண்மையாகப் பார்த்தால் அந்த நிலங்கள் வழி கிடைக்கும் வருமானம் கிளைகள், தொகுதிகள் ஆகியவற்றின் உறுப்பினர்களுக்கு இடையில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர்களுக்கு மட்டுமல்ல சரி தானே ?

குழப்பமடைந்துள்ள பரிதாபத்துக்குரிய மசீச தலைவருடைய புதல்வரை நம்பியிருக்காமல் அம்னோ, பிஎன் உறுப்புக் கட்சிகளின் உறுப்பினர்கள் தங்கள் பங்கைக் கேட்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

மலேசியப் பணம்: அந்த நிலம் மிக மலிவான விலைக்கு அரசியல் கட்சி ஒன்றுக்குக் கொடுக்கபட்டதே முழுக்க முழுக்க அதிகார அத்துமீறலாகும்.

அடுத்து அம்னோ அதனை தனது ‘சொத்து’ எனக் கருதியது, சமூகத்துக்கு அதனை மேம்படுத்தும் எண்ணம் அதற்குக் கிஞ்சித்தும் இல்லை என்பதைக் காட்டி விட்டது.

அனோம்னிம்: நில அபகரிப்பு: அவர்கள் மீண்டும் கையும் களவுமாகப் பிடிப்பட்டனர்.

ஸ்விபெண்டர்: மாநில அரசாங்கத்திடமிருந்து மலிவாக பெற்ற பின்னர் அந்த நிலத்தின் மதிப்பைக் கூட்டுவதில் அம்னோ புத்ராக்கள் மிகவும் கெட்டிக்காரர்கள்.

வர்த்தகச் சிந்தனை கொண்ட அம்னோ வணிகர்கள் இல்லாவிட்டால் அந்த நிலத்தின் மதிப்பு இன்னும் ஒரு சதுர அடிக்கு ஒரு ரிங்கிட்டாகவே இருக்கும். இப்போது அதன் மதிப்பு ஒரு சதுர அடிக்கு 200 ரிங்கிட்.

நாம் அவர்களுடைய கூர்மையான வர்த்தகச் சிந்தனைகள் குறித்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். ‘சமூக நோக்கங்களுக்காக’ பெறப்பட்ட நிலத்தை ஆடம்பர அடுக்கு மாடித் தொகுதியாக மாற்றிய கலையை நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆச்சரியமடைந்துள்ள மலேசியன்: அவர்கள் இதிலிருந்து எப்படி விடுபடுகின்றனர் என்பதைப் பார்ப்போம். எது எப்படி இருந்தாலும் எல்லாம் நேர விரயமே. எதுவும் நடக்கப் போவதில்லை.

நமது ஒரே நம்பிக்கை 13வது பொதுத் தேர்தலே. ஆனால் நாம் அவர்களை எங்கு வைக்க வேண்டும்- சிறைச்சாலைகள் ஏற்கனவே நிரம்பியுள்ளன. கமுந்திங் தடுப்பு முகாம் பொருத்தமாக இருக்கலாம்.

விஜார்ஜ்மை: அந்த  1SapuTanah Malaysia (ஒரே மலேசியா நில அபகரிப்பு) மீது அதிகார வர்க்கம் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது ?

மாற்றம்: அந்த நிலத்தைப் பெற்ற சுபாங் அம்னோ, சுபாங் தொகுதி சுபாங் லாமா, சுபாங் பாரு என இரண்டாகப் பிரிக்கப்பட்ட பின்னர் அதனை கெளானா ஜெயா அம்னோவிடம் ஒப்படைத்தது.

ஆனால் அது சரியான பதில் அல்ல. வாக்குறுதி அளிக்கப்பட்ட பல நோக்கு மண்டபங்களும் பாலர் பள்ளிகளும் எங்கே ?

உங்கள் அடிச்சுவட்டில்:   இப்போது எல்லோரும் தாய் சி கலையில் வல்லவர்களாகை விட்டனர். சட்டத்துறைத் தலைவர் போலீசாரைக் குறை சொல்கிறார். போலீசார் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் மீது பழி போடுகின்றனர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சட்டத்துறைத் தலைவரை சுட்டிக்காட்டுகிறது. நாய் தன் வாலை விரட்டிச் செல்வதைப் போன்றது தான் அது.

இப்போது அந்த வால் சற்று நீண்டுள்ளது. இப்போது ஒர் அம்னோ தொகுதி இன்னொன்றின் மீது பழியைத் தள்ளி விடுகிறது. மாநில அம்னோவும் பிஎன் -னும் மட்டுமே எல்லாப் பிரச்னைகளுக்கும் பதில் சொல்ல வேண்டும்.

அந்த நிலம் கெளானா ஜெயா அம்னோவுக்குக் கொடுக்கப்பட்டதா அல்லது சுபாங் அம்னோவுக்கு கொடுக்கப்பட்டதா என்பது முக்கியமல்ல.

அடையாளம் இல்லாதவன்_rb345: இப்போது திருடர்கள் சக திருடர்களைக் காட்டிக் கொடுக்கின்றனர்.

TAGS: