போலீஸ்காரர்கள் சுஹாக்காம் விசாரணையைக் கேலிக்கூத்தாக்குகின்றனர்

“அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறையை அவிழ்த்து விட்டதற்குப் பொறுப்பான குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் அதிகார வர்க்கத்தினர் உண்மையாக நடந்து கொள்ளவில்லை.”

தவறு செய்த போலீஸ்காரர்களை 10 வீடியோக்களிலிருந்து முன்னாள் ஒசிபிடி அடையாளம் காண முடியவில்லை.

ஜோக்கர்: சூதாட்ட மய்யங்கள் கூட தங்கள் மய்யங்களுக்கு வருகின்றவர்களுடைய முகங்களை அடையாளம் காண்பதற்கு உதவும் மென்பொருளை வைத்துள்ளன. நமது அரச மலேசியப் போலீஸ் படைக்கு இரண்டு மாதங்கள் கொடுக்கப்பட்டும் அதனால் தனது சொந்த ஆட்களைக் கூட அடையாளம் காண முடியவில்லை.

மலேசியாவில் மொத்தம்  120,000 போலீஸ்காரர்கள் உள்ளனர். எல்லாப் போலீஸ் நிலையங்களுக்கும் அவர்களது படங்களை விநியோகம் செய்து அடையாளம் காண உதவுமாறு கேட்டுக் கொள்வது என்ன அவ்வளவு சிரமமா ?

இரண்டு மாதங்களில் 86,400 நிமிடங்கள் உள்ளன. ஒருவர் ஒரு போலீஸ்காரர் படத்தை ஒப்பிட்டுப் பார்க்க 30 வினாடிகள் எடுத்துக் கொண்டால் கூட இரண்டு மாதங்களில் எல்லாப் போலீஸ்காரர்களையும் பார்த்து விட முடியும்.

நசுக்கப்பட்டவன்: தவறு செய்த போலீஸ்காரர்களை முன்னாள் டாங் வாங்கி ஒசிபிடி முகமட் சுல்கார்னெயின் அப்துல் ரஹ்மான் அடையாளம் காண முடியாவிட்டால் அன்றைய தினம் தங்கள் ஆட்களை அனுப்பி வைத்த அனைத்து போலீஸ் பட்டாளங்களின் தலைவர்களுக்கும் அவர் அந்தப் படங்களை அனுப்பி வைத்து உதவுமாறு கேட்டுக் கொண்டிருக்கலாமே ?

அவர் சுஹாக்காம் விசாரணையைக் கேலிக்கூத்தாக்குகின்றார்.  அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறையை அவிழ்த்து விட்டதற்குப் பொறுப்பான குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் அதிகார வர்க்கத்தினர் உண்மையாக நடந்து கொள்ளவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்குமாறு அந்தக் குற்றவாளிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்ததோ என்னவோ ?

உங்கள் அடிச்சுவட்டில்: அந்த சாட்சியம் மிகவும் அற்புதமானது. கூட்டத்தினரைத் தாக்கிய ஒரு போலீஸ்காரரைக் கூட அந்த ஒசிபிடி-யால் அடையாளம் காட்ட முடியவில்லை !

இப்போது எல்லாம் தெளிவாக விட்டது. போலீசார் மக்கள் மீது வன்முறையை அவிழ்த்து விட வேண்டும் என்றால் அவர்கள் கோலாலம்பூருக்கு வெளியில் உள்ள போலீஸ் பட்டாளங்களிலிருந்து ஆட்களைக் கொண்டு வந்தால் போதும்.

அன்றைய தினம் கடமையில் இருந்த எல்லா போலீஸ்காரர்களையும் அடையாளம் காட்டுமாறு யாரும் அந்த ஒசிபிடி-யைக் கேட்டுக் கொள்ளவில்லை. அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறையை பயன்படுத்தியவர்களை  அடையாளம் காணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர் கேட்டுக் கொண்டால் போதும்.

போலி போலீஸ் அதிகாரிகள் இருந்தனர் என்றும் அவர்களை அடையாளம் காண வழியே இல்லை என்றும் நீங்கள் சொல்கின்றீர்களா ? ஆனால் அன்றைய தினம் போலீஸ் தடுப்பை மீறிச் சென்ற ஒவ்வொரு சிவிலியனையும் போலீசார் எப்படி அடையாளம் கண்டனர் ?

அடையாளம் இல்லாதவன்_40dc: முகமட் சுல்கார்னெயின் தம்மை முட்டாளாக்கிக் கொள்கின்றாரா ? அல்லது சுஹாக்காம் விசாரணைக் குழு உறுப்பினர்கள் முட்டாள்கள் என அவர் எண்ணுகின்றாரா ?

என்றாலும் அந்த புத்திசாலியான அதிகாரி (மலேசியத் தரத்தில்) சிஐடி என்ற குற்றப் புலனாய்வுத் துறையின் துணை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார் !

அபாசிர்: நான் நஜிப்பின் உருமாற்றத் திட்டத்தின் விளைவுகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவரைப் பாதுகாப்பதும் என்ன விலை கொடுத்தாவது அவர் அரசியல் ரீதியில் நிலைத்திருப்பதை உறுதி செய்வதும் அந்த உருமாற்றத் திட்டத்தின் நோக்கங்களாகும்.

போலீஸ் படை வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது அதாவது உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அனோம்னிம்: உங்கள் சொந்த ஆட்களையே உங்களால் அடையாளம் காண முடியவில்லை என்றால் நீங்கள் எப்படி குற்றவாளிகளைப் பிடிக்கப் போகின்றீர்கள் ?  போலீஸ் படையின் திறமைக் குறைவு குறித்து நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன்.

 

TAGS: