‘வருமானத்துக்கு மேல் வாழ்கின்றவர்களை புலனாய்வு செய்யுங்கள்’

தங்கள் வருமானத்துக்கு மேல் ஆடம்பரமாக வாழ்கின்றவர்களை விசாரிப்பதற்கு அனுமதிக்கும் பொருட்டு ” அனுமான ” சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது.

எம்ஏசிசி சட்டத்துக்கான திருத்தத்தின் ஒரு பகுதியாக அந்த விஷயம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என எம்ஏசிசி நடவடிக்கை மறு ஆய்வுக் குழு உறுப்பினர் சிசில் அப்ராஹாம் கூறினார்.

ஒரு நபர் வருமானத்தைக் காட்டிலும் மிக அதிகமான சொத்துக்களை வைத்திருப்பதற்காக விசாரிக்கப்படுவது ஒரு குற்றமாக இருக்க முடியாது.”

“நாம் சட்டங்களை மட்டுமே உருவாக்க  முடியும்.  அவற்றை நிறைவேற்றுவது சட்டமியற்றும் அமைப்புக்களுடைய பணியாகும்,” என மூத்த வழக்குரைஞருமான சிசில் கூறினார்.

தமது வருமானத்துக்கு மேல் ஆடம்பரமாக வாழ்கின்ற ஒருவரை விசாரிக்கவும் அவர் மீது குற்றம் சாட்டவும் அனுமதிக்கும் ஹாங்காங் சட்டங்களைப் போன்று “அனுமான” சட்டங்களை இயற்ற எம்ஏசிசி விரும்புகின்றதா என தொடுக்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த போது அவர் அவ்வாறு கூறினார்.

 

TAGS: