45 ஆண்டுகளுக்கு பின் பாலஸ்தீனம் திரும்பிய ஹமாஸ் தலைவர்

காசா: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்க தலைவர், 45 ஆண்டுகளுக்கு பின், சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் நீண்ட நாட்களாக பகைமை நிலவி வரு கிறது. பாலஸ்தீனத்தின் பல பகுதிகளை, இஸ்ரேல் இன்னும் தன் வசம் வைத்திருக்கிறது. இந்த பகுதிகளில், குடியிருப்புகளை கட்டவும் இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளது.

தங்கள் பகுதிகளை ஒப்படைக்கும் படி, பாலஸ்தீனத்தினர் நீண்ட நாட்களாக போராடி வருகின் றனர். பாலஸ்தீன தனி நாடு தீர்மானம் சமீபத்தில் தான், ஐ.நா.,வில் நிறைவேற்றப் பட்டது. இஸ் ரேலுடன், நீண்ட நாட்களாக நடந்த சண்டையின் காரணமாக, ஹமாஸ் அமைப் பின் தலைவர் களில் ஒருவரான காலீத் மெஷால், 45 ஆண்டுகளுக்கு முன் குவைத்தில் தஞ்சம் புகுந்தார். ஈராக் போர் தொடுத்ததால், ஜோர்டானில் குடிபெயர்ந்தார்.

ஹமாஸ் அமைப்புக்கு நிதி திரட்டி வந்த மெஷாலை கொல்ல, இஸ்ரேலிய உளவு படையினர் திட்டமிட்டிருந்தனர். இதனால், அவர், கத்தார் நாட்டுக்கு சென்றார். பின், சிரியாவில் தஞ்சம் அடைந்தார்.ஹமாஸ் அமைப்பின் ஆண்டு விழாவை கொண்டாடுவதற்காக, 45 ஆண்டு களு க்கு பின், நேற்று அவர் காசாவுக்கு திரும்பினார். பாலஸ்தீன பிரதமர், அவரை வரவேற் றார். இன்று நடக்கும் ஹமாஸ் பேரணியில், மெஷால் சிறப்புரையாற்ற உள்ளார்.