““கழிவுப் பொருளை ஏற்றுமது செய்யப் போவதாக லைனாஸ் அளித்த வாக்குறுதியை கட்டாயப்படுத்தப் போவதாக அணுசக்தி அனுமதி வாரியம் கூறியிருப்பதால் லைனாஸுக்குக் கொடுக்கப்பட்ட தற்காலிக நடவடிக்கை அனுமதியை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.”
கழிவுப் பொருள் மலேசியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட மாட்டாது என்கிறது லைனாஸ்
ஒடின்: மலேசிய லைனாஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் மாஷால் அகமட் அவர்களே, மற்ற நாடுகளுக்கு அபாயகரமான கழிவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அனைத்துலக ஒப்பந்தங்கள் தடை விதிப்பதால் உங்கள் தொழில் கூடத்திலிருந்து எந்தக் கழிவும் ஏற்றுமதி செய்யப்பட மாட்டாது என நீங்கள் சொன்னதாக செய்தி வெளியாகியுள்ளது.
உங்கள் தொழில் கூடம் உற்பத்தி செய்வது நச்சுத்தன்மையைக் கொண்டது என்பது தானே அதன் அர்த்தம்.
ஆனால் அந்தக் கழிவுப் பொருட்கள் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானவை என்று தானே இது நாள் வரை எங்களுக்குக் கூறப்பட்டு வந்துள்ளது.
உங்கள் நிறுவனமும் உங்கள் நடவடிக்கைகளை ஆதரிக்கின்ற மற்றவர்களும் பொய் சொல்லியிருக்கின்றனர் என்று தானே அர்த்தம்.
இப்போது சில விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன. கழிவுப் பொருளை என்ன செய்வது, எங்கு வைப்பது என்பது மீது உறுதியான அறிக்கை ஏதுமில்லை.
அடுத்து அவை ஏற்றுமதி செய்யப்படும் எனக் கூறப்பட்டது. அவை வர்த்தகப் பொருட்களாக மாற்றப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனால் எந்தக் கழிவும் மிஞ்சாது என்றும் சொல்லப்பட்டது.
இந்த இடத்தில் ‘கழிவுகள்’ என்பது திடக் கழிவுப் பொருட்களா அல்லது திரவங்களா ?
ஸாபிஸோ: அந்த ஆஸ்திரேலிய நிறுவனத்துக்கு 12 ஆண்டு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது மக்களுக்குத் தெரியுமா ? நச்சுக் கழிவுப் பொருளை லைனாஸ் தொடர்ந்து வைத்திருப்பதும் எனக்கு வியப்பைத் தரவில்லை ?
கழிவுப் பொருள் ஆஸ்திரேலியாவுக்குத் திருப்பி அனுப்பப்படும் என யாரோ ஒருவர் கடந்த காலத்தில் வாக்குறுதி அளித்தது என் நினைவுக்கு வருகின்றது. அரிய மண் பக்குவப்படுத்தப்படும் போது கிடைக்கும் நச்சுக் கழிவுகளைப் பற்றித் தான் நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம். மூலப் பொருளை அல்ல. (அந்த மூலப் பொருள் அணுக் கதிரியக்கத்தைக் கொண்டிருந்தால் அதனை ஆஸ்திரேலியா மலேசியாவுக்கு அனுப்ப முடியாது )
அந்தத் தொழில் கூட நடவடிக்கை தொடங்கும் முன்னர் எல்லாம் முடியும் ( apa pun boleh )எனச் சொல்லப்படும், ஆனால் தொடங்கிய பின்னர் உண்மையான நிறம் ( dah tunjuk belang )வெளியாகி விடும்.
புளாக்ஸ்மித்: கழிவுப் பொருளை ஏற்றுமது செய்யப் போவதாக லைனாஸ் அளித்த வாக்குறுதியை அமலாக்கப் போவதாக அணுசக்தி அனுமதி வாரியம் கூறியிருப்பதால் லைனாஸுக்குக் கொடுக்கப்பட்ட தற்காலிக நடவடிக்கை அனுமதியை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.
மலேசியாகினியில் வெளியான செய்தி இவ்வாறு சொல்கிறது- “கழிவுப் பொருளை வர்த்தகப் பொருட்கள் வடிவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய லைனாஸ் கொடுத்துள்ள வாக்குறுதியை அணுசக்தி அனுமதி வாரியம் அமலாக்கும் என அதன் தலைமை இயக்குநர் ராஜா அப்துல் அஜிஸ் ராஜா அட்னான் கூறியிருக்கிறார்”
“கழிவுப் பொருளை அகற்றுவதும் முறையாகப் பராமரிப்பதும் தற்காலிக நடவடிக்கை அனுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனையாகும்.”
“ஆகவே கழிவுப் பொருளை அகற்றும் பிர்சனை லைனாஸைக் கட்டுப்படுத்தாது எனக் கூறுவது தவறு. அதனால் அந்த வாரியம் அதனை அமலாக்கும்.”
குழப்பம் இல்லாதவன்: ஆகவே லைனாஸ் தொழில் கூடக் கழிவுப் பொருளை மலேசியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய முடியாது. காரணம் அனைத்துலக ஒப்பந்தத்தில் விளக்கப்பட்டுள்ளது போல அது அபாயகரமானதாகும்.
ஆனால் அந்தத் தொழில் கூட நடவடிக்கைகள் மலேசியர்களுக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்தாது என பல நேர்மையான தொழில் நிபுணர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர்.
இப்போது அதன் கழிவுப் பொருளில் நச்சுத்தன்மை இருப்பது தெளிவாகி விட்டது. அதனால் அது மலேசியாவிலேயே ‘அகற்றப்பட வேண்டும்’.
செலவுகள் குறைவாக இருப்பதால் கழிவுகளைக் கொட்டும் கிடங்காக மலேசியா பயன்படுத்தப்படுவது இப்போது உறுதியாகி விட்டது.