ஆஸ்திரேலியாவின் லைனாஸ் கார்ப்ரேசன் தற்காலிகமாக செயல்படுவதற்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமத்தின் நிபந்தனைக்கு உட்பட்டு அதன் கழிவுப் பொருள்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று மத்திய அரசாங்கம் அதன் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.
லினாஸ் மலேசியா நிறுவனத்தின் நிருவாக இயக்குனர் மாஷால் அஹமட் அந்நிறுவனத்தின் கழிவுப் பொருள்களை வெளிநாட்டிற்கு அனுப்ப இயலாது ஏனென்றால் அனைத்துலகச் சட்டம் ஆபத்தான பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது என்று குவாங் மிங் டெய்லியிடம் கூறியிருந்தார்.
அனைத்தொடர்ந்து, லைனாஸ் நிறுவனம் அதன் கழிவுப் பொருள்களை ஒப்பந்தப்படி ஏற்றுமதி செய்யத் தவறினால், அதற்கு பொறுப்பேற்று நான்கு மத்திய அரசாங்க அமைச்சர்கள் பதவி துறக்க வேண்டும் என்று டிஎபியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் என்று கூறினார்.
லைனாஸ் திட்டத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள நான்கு அமைச்சர்கள் – முஸ்தாபா முகமட், மேக்ஸிமஸ் ஜோனிட்டி ஓங்கிலி, டக்ளஸ் உங்கா எம்பாஸ் மற்றும் லியாவ் தியோங் லாய் – இன்று கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் லனாஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக உரிமத்தின் நிபந்தனைக்கு உட்பட்டு லினாஸ் அதன் அனைத்து கழிவுப் பெருள்களையும் மலேசியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும். இல்லையேல், அதன் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என்று கூறியுள்ளனர்.