உங்கள் கருத்து: மூசா ஐஜிபி-யாக இருந்த போது ஏன் மௌனமாக இருந்தார் ?

 “நேர்மையில்லாதவர்களும் பொய்யர்களும் நமது போலீஸ் படையின் உச்சப் பதவிகளுக்கு எப்படி உயர முடிந்தது ? அரசாங்க உதவியும் பாதுகாப்பும் இல்லாமல் அது நடந்திருக்க முடியாது.”

மாட் ஜெய்ன்: மூசா ஆவேசம் இன்னொரு சண்டிவாரா (நாடகம்)

தாய்கோதாய்: முன்னாள் கோலாலம்பூர் சிஐடி தலைவர் மாட் ஜெய்ன் இப்ராஹிம் நெற்றியடி கொடுத்துள்ளார்.

மாட் ஜெய்ன் தாம் கூறுவதற்கு ஆதரவாக பல போலீஸ் புகார்களைச் செய்துள்ளார். ஆனால் முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) மூசா ஹசான் ஒரு புகாரைக் கூடச் செய்யவில்லை.

புகார்  செய்யப்பட்டால் மட்டுமே அரச மலேசியப் போலீஸ் படை நடவடிக்கை எடுக்கும். ஆனால் அந்தப் புகார் பிஎன் -னுக்கு எதிராக இருந்தால் பெரும்பாலும் அதன் மீது ஏதும் செய்யப்பட மாட்டாது.

மூசா சொல்லிய கருத்துக்கள் கொஞ்சம் கூட நம்பிக்கையைத் தரவில்லை. காரணம் அவை நீதி மன்றத்தில் எடுபடாது.

ஆர்எல்: மூசா பதவியில் இருந்த காலத்தில் பல தவறுகள் நிகழ்ந்துள்ளன. அவற்றை இப்போது ஏன் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றார் ? அவர் ஐஜிபி-யாக இருந்த நேரத்தில் ஏதாவது செய்திருக்கலாமே ?

பல இனம்: மாட் ஜெய்ன் பல விஷயங்களை அம்பலப்படுத்திய போதிலும் நடப்பு அரசாங்கமும் அதிகாரிகளும் ஒன்றும் செய்யாமல் இருக்கின்றனர். அதற்கு என்ன அர்த்தம் ? அவர்களும் அதில் சம்பந்தப்பட்டுள்ளனரா ?

உங்கள் அடிச்சுவட்டில்: போலீசார் அவர்களே, உங்களில் ஒருவர் அந்த விஷயங்களை வெளியிடுகிறார்.  பிகேஆர், பாஸ் அல்லது டிஏபி எழுப்பியதல்ல அவை. அரசாங்கத்தில் உள்ள நீங்கள் எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் ?

நீங்கள் ஒன்று மாட் ஜெய்ன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அந்த முன்னாள் ஐஜிபி, நடப்பு ஏஜி (சட்டத்துறைத் தலைவர்) மீது குற்றம் சாட்ட வேண்டும்.

காஸ்காரா: நேர்மையில்லாதவர்களும் பொய்யர்களும் நமது போலீஸ் படையின் உச்சப் பதவிகளுக்கு எப்படி உயர முடிந்தது ? அரசாங்க உதவியும் பாதுகாப்பும் இல்லாமல் அது நடந்திருக்க முடியாது.

ராஜாசூலான்: தங்களுக்குப் பிடிக்காத யார் மீதும் அதிகாரிகள் குற்றச்சாட்டுக்களை ஜோடித்து, தில்லுமுல்லு செய்ய முடியும் என்ற தகவலைப் படித்ததும்  சாதாரண குடிமகன் என்ற முறையில் நான் உண்மையில்ஆடிப் போனேன். இப்போது அதிகாரிகளைக் கண்டு மிகவும் பயப்படுகிறேன். இறைவன் நம்மைக் காப்பாற்றட்டும்.

உங்களிடம் உள்ள பெருவாரியான சொத்துக்களை விளக்குங்கள் என மூசா ராம்லியிடம் சொல்கிறார்

கனசாய்: இந்தச் செய்தி மேலும் மேலும் ஆர்வத்தைத் தூண்டுகின்றது. ஒய்வு பெற்ற உயர் நிலை போலீஸ்காரருக்கு எதிராக ஒய்வு பெற்ற உயர் நிலை போலீஸ்காரர் ஒருவர் குற்றம் சாட்டுகிறார். யாரோ ஒருவர் எல்லா உண்மைகளையும் உடைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் பாதகம் ஏதும் அம்பலமாகாது என்ற நம்பிக்கையுடன் உள்துறை அமைச்சர் தமது வாயை இறுக்கமாக மூடிக் கொண்டிருக்கிறார்.

மூஷிரோ: மூசா அவர்களே,  ராம்லியின் 8 மில்லியன் ரிங்கிட் சொத்துக்கள் பற்றி உங்களுக்குத் தெரியும். அது பற்றி உங்களுக்கு சந்தேகமும் இருந்தது. ஆனால் நீங்கள் அதனை விசாரிக்கவில்லை.

பாரபட்சமாக நடந்து கொள்ளும் எம்ஏசிசி ராம்லியை விசாரித்த போது ராம்லியின் சொத்துக்கள் பற்றி ஆராயவில்லையா ? ராம்லியிடம் ஊழல் அம்சங்கள் ஏதுமில்லை என எம்ஏசிசி பெரும்பாலும் முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.

ஒடின்: மூசா, இன்னும் ஏதாவது தகவல்கள் இருக்கின்றனவா ?

லாங் ஜாபார்: அந்த முன்னாள் ஐஜிபி-யிடம் ஏதோ துருப்புச் சீட்டு சிக்கியிருக்க வேண்டும். அவரது துணிச்சல்இந்த நாட்டில் இதுவரை யாருக்கும் வந்ததில்லை.

உயர்ந்த நிலையில் உள்ளவர்களைப் பற்றி அவரிடம் நிறையத் தகவல்கள் இருக்க வேண்டும். ஆனால் அவற்றை வெளியிட அவர் விரும்பவில்லை. ஐஜிபி என்ற முறையில் அவரிடம் நல்லது, கெட்டது உட்பட எல்லா விஷயங்களும் இருக்க வேண்டும்.

இது மேலும் மேலும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஒய்வு பெற்ற மற்ற ஐஜிபி-க்களுடைய செல்வத்தையும் நாம் விசாரிப்பது நல்லது. அவர்களும் செல்வந்தர்களாக இருப்பதாக நான் அறிகிறேன். முன்னாள் அமைச்சர்களையும் துணை  அமைச்சர்களையும் மறக்க வேண்டாம்.

TAGS: