டிஏபி கட்சியின் 16வது மூவாண்டு தேசியப் பேரவை இந்த வார இறுதியில் பினாங்கில் நடைபெறுகின்றது.
அங்கு நிகழும் கட்சித் தேர்தல்களில் 20 டிஏபி மத்திய நிர்வாகக் குழு இடங்களுக்கு 68 பேர் போட்டியிடுகின்றனர்.
டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், அவரது புதல்வர்களான கோபிந்த் சிங் டியோ ( பூச்சோங் எம்பி ),ஜக்தீப் சிங் டியோ (டத்தோ கிராமாட் சட்டமன்ற உறுப்பினர்) ஆகியோர் அவர்களில் அடங்குவர்.
கட்சித் தலைமைச் செயலாளர் லின் குவான் எங் ( பினாங்கு முதலமைச்சர்), அவரது தந்தையும் டிஏபி மூத்த அரசியல்வாதியுமான லிம் கிட் சியாங் (ஈப்போ தீமோர் எம்பி) ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
பேராக் டிஏபி மாநிலத் தலைவர் இங்கா கூ காம் ( புருவாஸ் எம்பி), அவரது உறவினரான பேராக் டிஏபி செயலாளர் இங்கா கோர் மிங் (இங்கா தைப்பிங் எம்பி-யும் பந்தாய் ரெமிஸ் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.
மலாய் வேட்பாளர்களில் ஜோகூர் டிஏபி உதவித் தலைவர் அகமட் டோன், செனட்ட அரிபின் எஸ்எம் ஒமார், பாகாங் டிஏபி துணைத் தலைவர் தெங்கு சுல்புரி ஷா ராஜா பூஜி, பினாங்கு செயற்குழு உறுப்பினர் சுல்கிப்லி முகமட் நூர், 13வது பொதுத் தேர்தலில் நெகிரி செம்பிலானில் நிறுத்தப்படவிருக்கும் ரோஸ்லி அப்துல் கனி, தேசா மஞ்சோங் கிளைத் தலைவர் சொலைமான் ஓ சையட் ஒப்ராஹிம், ஹருண் அகமட் ஆகியோரும் அடங்குவர்.
பெர்னாமா