லைனாஸ் மீதான முரண்பாடான அறிக்கைகளுக்கு லியாவ் விளக்கம் தரவில்லை

menteriலைனாஸ் அரிய மண் சுத்திகரிப்பு  கூடத்திலிருந்து வெளியாகும் கழிவுகள் நாட்டுக்கு வெளியே கொண்டு செல்லப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

என்றாலும் தற்காலிக நடவடிக்கை அனுமதியில் கழிவுகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது ஒரு நிபந்தனை அல்ல என அந்த ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனம் விடுத்துள்ள முரண்பாடான அறிக்கைக்கு அவரால் விளக்கம் தர முடியவில்லை.

லனாஸ் நிர்வாகத் தலைவர் நிக்கோலஸ் கேர்ட்டிஸும் லியாவ் உட்பட நான்கு அமைச்சர்களும் விடுத்த முரண்பாடான அறிக்கைகளின் எழுந்துள்ள குழப்பம் பற்றி வினவப்பட்ட போது கழிவுகள் மலேசியாவில் இருக்கக் கூடாது என அமைச்சரவை முடிவு செய்ததாக திரும்பத் திரும்ப லியாவ் கூறினார்.

“அதனால் தான் இந்த நாட்டில் லைனாஸ் சுத்திகரிப்புக் கூடக் கழிவுகள் இருக்கக் கூடாது என நான் சொல்கிறேன். அது அரசாங்க முடிவு. அமைச்சரவை முடிவு இந்த நாட்டில் எந்தக் கழிவும் இருக்கக் கூடாது,” என அவர் பதில் அளித்தார்.

குவாந்தான் கெபெங்கில் அமைந்துள்ள லைனாஸ் அரிய மண் சுத்திகரிப்பு நிலையத்தின் கழிவுகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என எந்த நிபந்தனையும் இல்லை கேர்ட்டிஸ் சொன்னதாக வால் ஸ்டீரிட் சஞ்சிகை கடந்த செவ்வாய்க் கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.

 

TAGS: