உக்ரைன் நாட்டு பாராளுமன்றம் பெரும் அமளி துமளியை சந்தித்துள்ளது. கூட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே எம்.பிக்களுக்கிடையே கடும் அடிதடி மூண்டுள்ளது.
அதேபோல பெண்கள் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் சிலர் நாடாளுமன்றத்திற்கு வெளியே நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியே பரபரப்பானது.
உறைய வைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பெண்கள் உடைகளைக் களைந்து நிர்வாணமாகி நடு வீதியில் நின்று கூச்சலிட்டுப் போராட்டம் நடத்திய காட்சி அனைவரையும் அதிர வைத்துள்ளது.
பெண்கள் இப்படி மேலாடை துறந்து வீதியில் போராடிய அதே நேரத்தில் பாராளுமன்றத்தினுள் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கும், ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கும் இடையே கடும் மோதல் மூண்டது.
உக்ரைன் நாட்டில் பெருகி வரும் ஊழல்களுக்கு எதிராக பெண்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினர். மேலும் செய்யாத குற்றச்சாட்டுக்களின் பெயரில் அந்த நாட்டு முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவருமான யூலியா டைமோஷென்கோவை சிறையில் அடைத்திருப்பதைக் கண்டித்தும் இந்த நிர்வாணப் போராட்டம் நடைபெற்றது.