அமெரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கிச்சூட்டில் 20 குழந்தைகள் பலி

A young boy is comforted outside Sandy Hook Elementary School after a shooting in Newtownநியூயார்க்: அமெரிக்காவின் கானிக்டிகட் பகுதியில் கிண்டர்கார்டன் பள்ளியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 குழந்தைகள்உட்பட 28 பேர் பலியானதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் சட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

கானிக்டிக்ட் பகுதியில் உள்ள சான்டி ஹூக் பள்ளியில் , 20 வயது மதிக்கத்தக்க அந்த நபர் இரண்டு துப்பாக்கிகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தினான். அவனும் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. அந்த நபர் குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த போலீசார், அங்கு உயிருடனுள்ள மாணவர்களை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தில் எத்தனை குழந்தைகள் காயமடைந்துள்ளனர் என்பது பற்றி தெரியவில்லை.

சம்பவ இடத்திலிருந்து மாணவர்கள் பயத்தில் கதறியபடி பலத்த பாதுகாப்புடன் வெளியேறும் காட்சிகளை அந்நாட்டுதொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. இந்த சம்பவம் குறித்து அறிந்த பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். அதிகாரிகள் தொடர்ந்து பள்ளியை சோதனை செய்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ‘223 காலிபர்’ ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தங்களை பள்ளியிலிருந்து வெளியேற்றும் முன்னர், ஒவ்வொரு மாணவரையும் போலீசார் தீவிர சோதனை செய்ததாக மாணவர் ஒருவர் கூறினார்.

போலீசாருக்கு உதவ மீட்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். ஆயுதங்களுடன் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்களும் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

school shootings0220 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியான சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,இந்த துயரமான சம்பவத்திற்கு அதிபர் சார்பாகவும், எனது சார்பாகவும், பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறினார்.

மேலும் அவரிடம், அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் கட்டுப்படுத்தப்படுமா என கேட்டதற்கு, இது பற்றி விவாதிக்க இது சரியான நேரமல்ல என கூறினார்.

நியூடவுண் என்னும் சிறிய நகரில் உள்ள சாண்டி ஹுக் ஆரம்பப் பள்ளிக்கூடத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 5 முதல் 10 வயது வரையிலான மாணவர்கள் இந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.