“இத்தகைய சம்பவங்கள் மீது உடனடியாக தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும். அப்போது தான் மற்ற ஆசிரியர்கள் சட்டத்தை மீறுவதற்கு அஞ்சுவர். பெற்றோர்களுக்கு மீண்டும் பணம் கொடுக்க யாரும் முயலாமல் இருப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.”
வீ: ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்ட விவகாரம் மாநிலக் கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது
லம்போர்கினி: பொது மக்கள் ஆழ்ந்த அக்கறையும் கவலையும் கொண்டுள்ள ஒரு விஷயம் கையாளப்படும்முறை இதுதான் என்றால் மலேசியக் கல்வித் தரம் படு வீழ்ச்சி அடைந்து விட்டதில் வியப்பில்லை.
அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட அந்த கடுமையான விஷயம் தொடர்பில் போலீசில் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த விவகாரத்தை மூடி மறைப்பதற்கு பணம் கொடுக்க முன் வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதற்கு அரசாங்கம் விரைவாக உறுதியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கை பற்றி அறிந்து கொள்ள மக்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு.அந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மையா இல்லையா என்பதையும் நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
இல்லை என்றால் இது போன்று மீண்டும் நடக்கும். போக்கிரி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லாத நிலையில் தங்கள் பிள்ளைகளைப் பெற்றோர்கள் குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்கள் தங்கள் பிள்ளைகளை அரசாங்கப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பவே பயப்படுவர்.
கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் அவர்களே, நடவடிக்கை எடுக்கப்படும் என நீங்கள் வாக்குறுதி அளித்தீர்கள். அதற்கு ஒரு மாதம் கழித்தும் நீங்கள் மேலோட்டமான பதில்களையே கொடுக்கின்றீர்கள்.
உங்களுக்குத் திறமை இல்லை என்பதையே அது காட்டுகின்றது. உங்களிடம் தார்மீக வலிமையே கிடையாது. உங்களிடம் இன்னும் கௌரவம் ஏதும் மிஞ்சியிருந்தால் பதவியை துறந்து விடுங்கள். பெருத்த அவமானமாக இருக்கிறது.
லைலா: ஏதுமறியாத அந்தப் பிள்ளைகளை கன்னத்தில் அறைந்த பொறுப்பற்ற ஒர் ஆசிரியரை விசாரிக்க ஏன் இவ்வளவு காலம் பிடிக்கிறது ? போலீஸ் புகார்களை மீட்டுக் கொள்ளச் செய்வதற்காக பெற்றோர்களுக்கு பணம் கொடுக்க ஆசிரியர்கள் முயற்சி செய்த விவகாரம் என்னவானது ?
அந்த விவகாரத்தை தொடர்ந்து உயிரூட்டிக் கொண்டிருக்கும் மலேசியாகினிக்கு நன்றி. இல்லை என்றால் அது இன்னேரம் மேல் நடவடிக்கை இல்லை என முத்திரை குத்தப்பட்டிருக்கும்.
உங்கள் அடிச்சுவட்டில்: வீ அவர்களே, அந்த விவகாரத்தை விசாரிக்கப்பதற்குக் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. ஆனால் எந்த முடிவுக்கும் வர இயல்வில்லை. இதற்கு இந்த நாட்டை இப்போதைக்கு கோமாளிகள் ஆட்சி புரிவதே காரணம் என நீங்கள் சொன்னால் மிகவும் பொருத்தமாக இருக்கும். தயவு செய்து எல்லோருடைய நேரத்தையும் மிச்சப்படுத்துங்கள்.
சிஎச்கியூ: அமெரிக்காவில் இது போன்று நிகழ்ந்திருந்தால் ஒர் அமைச்சர் 24 மணி நேரத்தில் தமது வேலையை இழந்திருப்பார்.