எதிர்பார்க்கப்பட்டது போல டிஏபி மத்திய நிர்வாகக் குழு கர்பால் சிங்-கைத் தொடர்ந்து கட்சித் தலைவராகவும் லின் குவான் எங்-கை தலைமைச் செயலாளராகவும் வைத்திருக்க முடிவு செய்துள்ளது. நேற்று நடைபெற்ற கட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து அந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
20 உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குழுவுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களில் மூவரைத் தவிர மற்ற அனைவரும் பழையவர்களே. அடுத்த ஆறு மாதங்களுக்குள் நடைபெற வேண்டிய 13வது பொதுத் தேர்தலுக்குக் கட்சி ஏற்பாடு செய்து கொண்டிருப்பதால் பெருத்த மாற்றங்களை செய்வதில்லை என குழு முடிவு செய்துள்ளது.
இதற்கு முன்பு கர்பால்-குவான் எங் தலைமைத்துவத்தை தொடர்ந்து நிலை நிறுத்துமாறு பேராளர்களை முதுநிலைத் தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டார்.
பக்காத்தான் ராக்யாட் தோழமைக் கட்சிகளுடன் டிஏபி-யை புத்ராஜெயாவுக்குக் கொண்டு செல்லும் ‘100 நாள் பிரச்சாரத்துக்கு’ அவர்கள் இருவரும் பொறுப்பேற்பார்கள்.
இதனிடையே நேற்றைய தேர்தலில் தோல்வி கண்ட பினாங்கு இரண்டாவது துணை முதலமைச்சர் பி ராமசாமியும் கெப்போங் எம்பி தான் செங் கியாவ்-வும் புதிய மத்திய நிர்வாகக் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தக் குழு கட்சியில் முடிவு எடுக்கும் முக்கிய அமைப்பாகும்.
கட்சித் தேர்தலில் போட்டியிட்ட எட்டு மலாய் வேட்பாளர்களில் யாரும் இருபதுக்குள் வராததால் டிஏபி மலாய் எதிர்ப்புப் போக்குடையது என்ற எண்ணத்தைப் போக்குவதற்காக செனட்டர் அரிபின் ஒமாரும் குவான் எங்-கின் அரசியல் செயலாளர் ஜைரில் கிர் ஜொஹாரியும் வலுவான அந்தக் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் சபாவைச் சேர்ந்த ஜிம்மி வோங், எட்வின் போஸி, சரவாக்கைச் சேர்ந்த ஜோன் பிரியான் அந்தோனி, பாகாங்கைச் சேர்ந்த லியோங் இங்கா இங்கா, பேராக்கைச் சேர்ந்த வி சிவகுமார், தாமஸ் சூ ஆகியோரும் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் என நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மூத்த தலைவர் தான் கோக் வாய் கட்சியின் புதிய துணைத் தலைவராகவும் சாவ் கோன் இயாவ், எம் குலசேகரன், சொங் சியங் ஜென், தெரெசா கோக், அரிபின் ஆகியோர் உதவித் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
மத்திய நிர்வாகக் குழு அதிகாரிகள் வருமாறு:
தலைவர்- கர்பால் சிங்
துணைத் தலைவர்- தான் கோக் வாய்
உதவித் தலைவர்கள்- சாவ் கோன் இயாவ், அரிபின் ஒமார், சொங் சியங் ஜென், எம் குலசேகரன், தெரெசா கோக்,
தலைமைச் செயலாளர் -லிம் குவான் எங்
துணைத் தலைமைச் செயலாளர்கள்- சொங் எங், இங்கே கூ காம், பி ராமசாமி
பொருளாளர்- போங் குய் லுன்
அமைப்புச் செயலாளர் – லோக் சியூ பூக்
துணை அமைப்புச் செயலாளர்கள்- வின்செண்ட் வூ, தாமஸ் சூ
பிரச்சாரச் செயலாளர்- டோனி புவா
துணைப் பிரச்சாரச் செயலாளர்கள்- தியோ நீ சிங், ஜைரில் கிர் ஜொஹாரி
அனைத்துலகச் செயலாளர்- வி சிவகுமார்
அரசியல் கல்வி இயக்குநர்- லியூ சின் தொங்
துணை அரசியல் கல்வி இயக்குநர்- பூ செங் ஹாவ்
குழு உறுப்பினர்கள்: லிம் கிட் சியாங், தான் செங் கியாவ், தெங் சாங் கிம், லியோங் இங்கா இங்கா, ஜிம்மி
வோங், ஜான் பிரியான் அந்தோனி, எட்வின் போஸி, கோபிந்த் சிங் டியோ.