உங்கள் கருத்து: டிஏபி-யின் பல இனத்தன்மை தொடர்ந்து நிலை பெற்று வருகின்றது

ariffin“அம்னோ/பிஎன் பிடிஎன் (Biro Tatanegara), பெர்க்காசா ஆகியவை டிஏபி-யை இஸ்லாத்துக்கும் மலாய்க்காரர்களுக்கும் எதிரி என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் அது மிகவும் சிரமமானதாகும்.”

மலாய் பேராளர்கள் உண்மையான பல இனத்தன்மையை விரும்புகின்றனர்

அடையாளம் இல்லாதவன்_4030: அந்த தேர்தல் டிஏபி-யின் ‘மலேசியன் மலேசியா’ கோட்பாடும் பல இனக் கட்சி என அது சொல்லிக் கொள்வதும் வெறும் அபத்தமே, வேறு ஒன்றுமில்லை என்பதை மெய்பித்து விட்டது.

நீங்கள் விரும்பியதை எல்லாம் பேசலாம். ஆனால் உங்கள் நடவடிக்கைகள் வேறு விதமாக இருக்கின்றனவே ?

பி செல்வதுரை: ‘பல இனத்தன்மையை வலியுறுத்தும் மலேசியன் மலேசியா கோட்பாட்டை டிஏபி பேராளர்கள் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை’ எனக் கூறப்படுவதை நான் முற்றாக நிராகரிக்கிறேன். நிலைமை அதுவாக இருந்தால் அந்தக் கட்சியின் மத்திய நிர்வாக மன்றத்துக்கு 100 விழுக்காடு சீன உறுப்பினர்களே தேர்வு செய்யப்பட்டிருப்பார்கள்.

ஆனால் நமக்கு அந்த முடிவு வரவில்லை. டிஏபி கட்சியை நன்கு வழி நடத்தி வலுப்படுத்தக் கூடிய சிறந்த வேட்பாளர்கள் எனத் தாங்கள் கருதுகின்றவர்களையே பேராளர்கள் தேர்வு செய்துள்ளனர். அது ஆற்றலை அடிப்படையாகக் கொண்டது. இனம் அல்ல. வேட்பாளர் தேர்வில் அதுவே வழிகாட்டியாக இருந்தது. இருக்க வேண்டும்.

மத்திய நிர்வாகக் குழுவில் மூன்றில் ஒரு பகுதியினர் நியமிக்கப்படுவதற்கு வகை செய்யும் ஒரு முறையைக் கொண்டுள்ள டிஏபி-யை பாராட்ட வேண்டும். அதன் வழி சிறுபான்மையோர் எண்ணங்கள் பிரதிநிதிக்கப்படும். அதனால் கூட்டுத் தலைமைத்துவத்திற்கு மத்திய நிர்வாகக் குழு பங்காற்றும். இது தான் ஜனநாயகம்.

ஜோ குவான்: பி செல்வதுரை சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன். மத்திய நிர்வாகக் குழுவுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டும் எனத் தாங்கள் விரும்பும் மலாய் வேட்பாளர் பெயரைச் சொல்லுமாறு டிஏபி-க்கு அணுக்கமில்லாத ஒருவரைக் கேட்டுப் பாருங்கள். இப்போது அத்தகைய டிஏபி உறுப்பினருடைய பெயரை அவரால் தர முடியாது.

தேர்வு செய்யப்பட்டவர்கள் கடுமையாக உழைக்கின்றனர். அவர்கள் அவசியம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தோல்வி கண்டவர்கள் நன்றாக வேலை செய்யவில்லை என அர்த்தம் கொள்ளக் கூடாது. அவர்களை விட நல்ல வேட்பாளர்கள் இருக்கின்றனர் என்பதே உண்மை. ஆகவே எல்லோரும் மகிழ்ச்சி அடைய வேண்டும்.  சரி தானே ?

யூஜின் டி:  செனட்டர் அரிபின் ஒர் உண்மையை தெளிவாக சொல்லியிருக்கிறார். நம்பிக்கை இரு வழிகளிலும் வேலை செய்கிறது.

மலாய்க்காரர்கள் டிஏபி பேராளர்களுடைய நம்பிக்கையை பெறவும் வேண்டும்- அவர்கள் டிஏபி சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்வதை மெய்பிக்க வேண்டும். அம்னோ ‘கொடுக்க முன் வந்தால்’ ‘தவளையாக’ மாறக் கூடாது.

நியாயமானவன்: மாற்றம் என்பது கொஞ்சம் கொஞ்சமாகத் தான் ஏற்படும். பெரிய முன்னேற்றத்தை உடனடியாகஎதிர்பார்க்க முடியாது. 50 ஆண்டுகளாகியும் பிஎன் இன்னும் மாறவில்லை. ஆனால் அதை விட குறுகிய காலத்தில் பக்காத்தான் ராக்யாட் மாறும் என நான் நம்புகிறேன்.

ஜெரார்ட் லூர்துசாமி: நான் அதனை ஒப்புக் கொள்கிறேன். அதற்கு விடா முயற்சியும் பொறுமையும் தேவை. எடுத்துக்காட்டுக்கு பிகேஆர்-கட்சியில் சீனர்களைக் காட்டிலும் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆனால் அதன் உச்ச மன்றத்தில் இந்தியர்களைக் காட்டிலும் சீனர்களே கூடுதலாக இருக்கின்றனர். அதனால் என்ன ?

எல்லா இன மக்களுடைய நலன்களும் பிரதிநிதிக்கப்படுவது தான் முக்கியமே தவிர பிரதிநிதித்துவத்தின் அளவு அல்ல.

டிஏபி-யில் மலாய் உறுப்பினர் எண்ணிக்கை மிகவும் சிறியது. அந்த எண்ணிக்கையை அதிகரிக்க கட்சி முயலுகின்றது. அம்னோ/பிஎன் பிடிஎன் (Biro Tatanegara), பெர்க்காசா ஆகியவை டிஏபி-யை இஸ்லாத்துக்கும் மலாய்க்காரர்களுக்கும் எதிரி என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் அது மிகவும் சிரமமானதாகும்.

கட்சியில் அதிகமான மலாய்க்காரர்கள் சேர்ந்ததும் மத்திய நிர்வாகக் குழுவில் மலாய் பிரதிநிதித்துவம் சம்பந்தப்பட்ட பிரச்னை தானாகவே தீர்ந்து விடும்.

அம்னோ, மஇகா, மசீச, கெரக்கான் கூட இன அடிப்படையைக் கொண்ட கட்சிகளாகும். அம்னோவைப் பொறுத்த வரையில் சபா, சரவாக்கைச் சேர்ந்த மலாய் அல்லாத பூமிபுத்ரா ஒருவர் அவர் முஸ்லிமாக இருந்தாலும் அம்னோ தலைவராக முடியாது. அதன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அதனை விளக்க முடியுமா ?

பிஎன் கூட்டரசு அரசாங்கத்தை அமைக்க வகை செய்த பெரும்பான்மையில் அதிகமான இடங்களை சபா அம்னோ வைத்திருக்கும் போது அதன் உச்ச மன்றத்தில் தீவகற்ப மலேசிய மலாய்க்காரர்களும் முஸ்லிம்களும் ஆதிக்கம் செலுத்துவது ஏன் ?

உங்கள் அடிச்சுவட்டில்: உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்: அம்னோ தனது கதவுகளை எல்லா மலேசியர்களுக்கும் திறந்து விடுவதாக வைத்துக் கொள்வோம். ஒரே நாளில் அந்தக் கட்சியின் உயர் நிலையில் பல இனத் தலைமைத்துவம் வந்து விடுமா ?  நிச்சயம் நடக்காது .

என்றாலும் ஒரு கட்சி இனவாதத் தன்மையுடையதா என்பதை நான் தீர்மானிப்பதற்கு அந்த அம்சம் முக்கியமானது. உயர் நிலையில் உள்ள மலாய் தலைமைத்துவத்தின் அடிப்படையில் மட்டும் நான் அம்னோவை முடிவு செய்ய மாட்டேன். அம்னோவை அது பின்பற்றுகின்ற கொள்கைகள், எடுக்கின்ற நடவடிக்கைகள் அடிப்படையில் மட்டுமே நான் தீர்மானிப்பேன். உங்களுக்கு புரிகிறதா ?

பல இனக் கட்சி ஒன்றின் தலைமைத்துவம் இனப் பிரதிந்தித்துவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் எனக் கூறுகின்றவர்கள் தங்களை அறியாமலேயே இனவாதிகளாகி விடுகின்றனர்.

 

TAGS: