பெர்சே, 4.0 பேரணிக்கான வாய்ப்புக்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும்

ambiga‘பெர்சே ஆதரவாளர்கள் 2013ம் ஆண்டுக்கான  Himpunan Kebangkitan Rakyatஐ (மக்கள் எழுச்சிப் பேரணி) பயன்படுத்திக் கொள்வது நல்லது’

தேர்தல் சீரமைப்புக்கான நம்பிக்கை இல்லை. என்றாலும் எதிர்ப்புப் பேரணிக்கான திட்டம் இல்லை

முஷிரோ: தேர்தல் ஆணையம், போலீஸ் போன்ற பல அமைப்புக்கள் அம்னோ கட்டுக்குள் இருப்பதால் தேர்தல் சீர்திருத்தங்கள் எளிதாக வராது என்பது நமக்குத் தெரியும். ஏனெனில் அத்தகைய சீர்திருத்தங்கள் பொதுத் தேர்தலில் அம்னோ தோல்வி காண வழி வகுத்து விடும்.

என்றாலும் பெர்சே இன்னொரு பேரணிக்கான வாய்ப்புக்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும். அதே வேளையில் நமது பொதுத் தேர்தலைக் கண்காணிக்க அந்நியப் பார்வையாளர்களைக் கொண்டு வரவும் முயற்சி செய்ய வேண்டும்.

அடையாளம் இல்லாதவன் #59082512: பெர்சே ஆதரவாளர்கள் 2013ம் ஆண்டுக்கான  Himpunan Kebangkitan Rakyatஐ (மக்கள் எழுச்சிப் பேரணி) பயன்படுத்திக் கொள்வது நல்லது. அது ஜனவரி 12ம் தேதி புக்கிட் ஜலில் அரங்கத்தில் எதிர்த்தரப்பு ஏற்பாடு செய்கின்றது.

ஜிமினி கிர்க்கெட்: இனிமேல் பெர்சே பேரணிகள் வேண்டாம். மூன்று பேரணிகள் நிகழ்ந்து விட்டன. ஒன்றை விட ஒன்று பெரியவை. ஆனால் தேர்தல் சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையமோ அரசாங்கமோ அமலாக்கவில்லை. ஆகவே இன்னொரு பெர்சே பேரணி அதற்கு வழி வகுக்கவும் போவதில்லை.

அதற்கு மாறாக கலவரத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி விட அம்னோ/பிஎன் -னுக்கு நல்ல காரணத்தைக் கொடுத்து விடும். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் நிறுத்தி வைக்கப்பட்டு இராணுவச் சட்டங்கள் அமலாக்கப்படலாம். இது ஏற்படக் கூடிய சாத்தியம் உண்டா ?

டாக்டர் மகாதீர் நமக்கு ஏதும் பாடம் கற்றுக் கொடுப்பதாக இருந்தால் அது இது தான் (The Malay Dilemma).. ” 1969ம் ஆண்டு தேர்தல்கள் ( 13வது பொதுத் தேர்தல் என வாசிக்கவும்) நெருங்கும் வேளையில் மக்களில் எல்லாப் பிரிவினரும் அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்துள்ளனர்.”

“வளப்பத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளைச் சரி செய்யவும்  இனங்களை முன்னேற்றவும் அரசாங்கம் தவறி விட்டது மலாய்க்காரர்களுடைய வெறுப்புக்குக் காரணமாகும். அரசாங்கம் சீனர்களுடைய கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றியதால் அவை அதிகரித்துள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக அதன் எதிரொலியாக கூட்டணி அரசாங்கம் நல்ல முறையில் ஆட்சி செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பது மீது நம்பிக்கை குறைந்து வருகிறது..”

இந்த முறை ‘இனம்’ என்னும் சொல்லுக்கு பதில் “சிவில் பதற்ற நிலையைத் தொடர்ந்து அமைதியை நிலை நிறுத்த பிஎன் அரசாங்கம் தலையிட வேண்டியிருந்தது.”

யாஹோ: பிஎன் -னுக்கு அந்நிய நாடுகளிலிருந்து வந்த அந்த ‘திடீர் குடிமக்கள்’ வாக்களிப்பர் என அம்னோ நம்பிக் கொண்டிருக்கிறது.  பிஎன் செய்தும் குளறுபடிகளை அவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களை பெர்சே திசை திருப்பலாமே !

அவர்கள் இந்த நாட்டின் குடிமக்களாகி விட்டார்கள். தேர்தலில் எதிர்க்கட்சிகள் வென்றாலும் அவர்களுடைய குடியுரிமை மாறப் போவதில்லை. அவர்கள் இழக்கப் போவது ஒன்றுமில்லை. மாறாக அவர்களுடைய பிள்ளைகளுக்கு மலேசியா சிறந்த நாடாக திகழ முடியும்.

அடையாளம் இல்லாதவன் #59599842: தேர்தல் சீர்திருத்தங்களா ? அதிக நம்பிக்கை வேண்டாம். அவற்றின் நோக்கம் தெளிவானது. மோசடி, மோசடி, மோசடி. அவற்றுக்கு வெட்கமும் இல்லை. சுய மரியாதையும் இல்லை.

நில்: என்ன விலை கொடுத்தாவது அம்னோ/பிஎன் வெற்றி காணும். அது தான் காலம் காலமாக அவற்றின் நோக்கமும் வியூகமுமாகும்.

AkuMelayuIslam: மலேசியாவில் மட்டுமே சிலர், இஸ்லாமும் பெரும்பாலான சமயங்களும் போதிக்கும் தூய்மையான நியாயமான தேர்தல்களைக் கண்டு அஞ்சுகின்றனர். என்ன வேடிக்கை!

அஜிஸான்: இந்தோனிசியர்களும் வங்காள தேசிகளும் போன்ற பல அந்நியர்கள் தங்கள் மை கார்டுகளைப் பயன்படுத்தி வாக்களிக்கப் போவதால் மக்கள் பார்வையாளர்களாக இருக்க வேண்டும். வரும் தேர்தல் மிகவும் கறை படிந்ததாக இருக்கும் என்பது நமக்குத் தெரியும். சக குடிமக்களே முன் வாருங்கள்.

ஜார்ஜ்_1de8: பெர்சே ஒருங்கிணைப்பாளர் எஸ் அம்பிகா அவர்களே எது நல்லது என்பது உங்களுக்குத் தெரியும். திட்டமிட்டதைச் செயல்படுத்துங்கள். நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்போம்.

தீயிஸ்82: சட்டத்தின் கீழ் எது சரி தாம் எண்ணுகிறாரோ அதனையே அம்பிகா சொல்கிறார். அவர் வேறு விதமாக செயல்பட வேண்டும் என பலர் கருத்துச் சொல்லியுள்ளனர். அவை குழப்பமாக உள்ளன.

அவர் தேர்தல் சீர்திருத்த இயக்கத்தை வழி நடத்தினார். நமக்கு யாரும் ஏற்பட்டிருக்காத அவமானத்தையும் மிரட்டலையும் கூட அவர் சந்தித்தார்.

பேரணி நடந்தாலும் நடக்கா விட்டாலும் நாம் 13வது பொதுத் தேர்தலை நோக்கிச் செல்வோம்.

நாம் துணிந்து பேசுவோம். வாக்களிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வோம். நாம் மாற்றத்தைச் செய்ய முடியும். மற்றவர்களை நாம் ஒரளவுக்குத் தான் நம்ப முடியும். நாம் அதனைத் தொடங்குவோம்.

 

TAGS: