ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்ட பள்ளிக்கூடத்தில் மூன்று நாட்களுக்கு மட்டுமே வகுப்புக்கள்

asli1கிளந்தான் குவா மூசாங்கில் உள்ள பிஹாய் தேசியப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி என்பது விலை உயர்ந்த ஆடம்பரமாகி விட்டது.

தீவகற்ப மலேசியாவில் மற்ற ஒதுக்குப் புறமான இடங்களில் உள்ள கிராம மக்கள் தங்கள் பிள்ளைகளை படிப்பதற்கு அனுப்ப வெகு தொலைவு செல்ல வேண்டியுள்ளது. ஆனால் போஸ் பிஹாய் பள்ளி கம்போங் தென்ரி-கின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. போஸ் பிஹாய் உள்ள 9 கிராமங்களில் அதுவும் ஒன்றாகும்.

பல கிலோமீட்டர் தொலைவைச் சேர்ந்த மாணவர்களுக்கு அந்தப் பள்ளிக்கூடத்துக்கு பின்னால் கட்டப்பட்டுள்ள மூன்று மாடி தங்கும் விடுதியில் தங்கும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அங்கு பாலர் பள்ளியும் இயங்குகின்றது.

அந்தப் பள்ளிக்கூடத்தில் அக்டோபர் 23ம் தேதி நண்பகல் உணவுக்கு முன்னர் துவா சொல்லாததற்காக நான்கு முஸ்லிம் அல்லாத ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்ட பின்னர் அந்தப் பள்ளிக் கூடம் மக்களுடைய கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது.

போஸ் பிஹாய் கிராமங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கன்னத்தில் அறையப்பட்ட விவகாரத்தைக் காட்டிலும் பெரிய கல்விப் பிரச்னைகள் இருப்பதாக கம்போங் தென்ரிக்கைச் சேர்ந்த அரோம் அசிர் கூறினார்.asli2

அந்தக் கிராமத் தலைவர்  ( tok batin ) இறந்த பின்னர் புதியவர் யாரும் நியமிக்கப்படாததால் அரோமை தங்கள் பேராளராக ஒன்பது கிராம மக்களும் கருதுகின்றனர்.

200 பிள்ளைகளைக் கொண்ட பிஹாய் தேசியப் பள்ளியில் மாணவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே கல்வி கற்பிக்கப்படுவதாக அரோம் சொன்னார். கிளந்தானில் ஒரு கல்வி வாரம் என்பது ஞாயிற்றுக் கிழமை முதல் வியாழக்கிழமை வரையிலாகும்.

“ஆசிரியர்கள் ஞாயிற்றுக் கிழமை தான் வருகின்றனர். அதனால் கற்பிக்க முடியாது. ஆகவே அவர்கள் திங்கள் முதல் புதன் வரை கற்பிக்கின்றனர். வியாழக் கிழமை நண்பலில் அவர்கள் வீடு திரும்புவதற்குத் தயாராகின்றனர். விடுதிகளுக்குத் திரும்புமாறு மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.”

அந்தப் பள்ளிக்கூடத்தில் போதிக்கும் எல்லா 12 ஆசிரியர்களும் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் என்பதே அதற்குக் காரணம் என அந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவருமான அரோம் சொன்னார். வார இறுதியில் கிளந்தானில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல அவர்கள் வெகு தொலைவு பயணம் செய்ய வேண்டியுள்ளது என்றார் அவர்.

பள்ளி நாட்கள் குறைவாக இருப்பதுடன் முக்கியமான பாடங்களை விட்டு விட்டு சமயம் மீது பாடங்கள் நடத்தப்படுவதை கன்னத்தில் அறையப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் அறிந்த பெற்றோர்கள் மிகவும் வெறுப்படைந்துள்ளதாகவும் அரோம் சொன்னார்.

கம்போங் தெரிக்கில் உள்ள கிராம மக்களில் யாரும் முஸ்லிம்கள் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.