பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
கோபிந்த்: ஓராங் அஸ்லி சிறார்கள்மீதும் கருணை காட்டுவாரா பிரதமர்?
மலேசியர் அனைவருக்குமான தலைவர் என்று கூறிக்கொள்ளும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கிளந்தான், போஸ் பிஹாய் ஓராங் அஸ்லி மக்களின் துயர்தீர்க்க நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ. அக்டோபர் 23-இல், எஸ்கே பிஹாயில் உணவுக்குப் பின்னர் இஸ்லாமிய தொழுகையில் கலந்துகொள்ள மறுத்த…
‘பிஹாய் தேசியப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு ‘மட்டம்’ போடுவது குவா…
கிளந்தானில் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்துள்ள பிஹாய் தேசியப் பள்ளி ஆசிரியர்கள் வாரத்துக்கு மூன்று நாட்களுக்கு மட்டுமே மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பது பற்றி குவா மூசாங் கல்வித் துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் துறையின் அதிகாரிகளுடன் நவம்பர் முதல் தேதி நடைபெற்ற கலந்துரையாடலின் போது அது பற்றித் தெரிவிக்கப்பட்டதாக பிஹாய் தேசியப்…
புவாட்: அந்த மூன்று நாள் பள்ளிக்கூடம் பற்றி அமைச்சிடம் புகார்…
வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே கற்பிக்கப்படுவதாக கூறியுள்ள குவா மூசாங் பிஹாய் தேசியப் பள்ளிப் பிள்ளைகளின் பெற்றோர்கள் அது பற்றி கல்வி அமைச்சிடம் புகார் செய்ய வேண்டும் என கல்வித் துணை அமைச்சர் முகமட் புவாட் ஸார்க்காஷி விரும்புகிறார். "பெற்றோர்கள் அமைச்சிடம் புகார் செய்ய வேண்டும். பின்னர் அந்தக்…
ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்ட பள்ளிக்கூடத்தில் மூன்று நாட்களுக்கு…
கிளந்தான் குவா மூசாங்கில் உள்ள பிஹாய் தேசியப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி என்பது விலை உயர்ந்த ஆடம்பரமாகி விட்டது. தீவகற்ப மலேசியாவில் மற்ற ஒதுக்குப் புறமான இடங்களில் உள்ள கிராம மக்கள் தங்கள் பிள்ளைகளை படிப்பதற்கு அனுப்ப வெகு தொலைவு செல்ல வேண்டியுள்ளது. ஆனால் போஸ் பிஹாய்…
வீ: ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்ட விவகாரம் மாநில…
கடந்த அக்டோபர் மாதம் துவா சொல்லாததற்காக கன்னத்தில் அறையப்பட்ட மூன்று ஒராங் அஸ்லி பிள்ளைகள் விவகாரம் கிளந்தான் மாநிலக் கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் இன்று தெரிவித்திருக்கிறார். அக்டோபர் மாதம் 23ம் தேதி நிகழ்ந்த அந்தச் சம்பவம் மீது ஏற்பட்டுள்ள முன்னேற்றம்…
கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம்: ஏன் இன்னும் நடவடிக்கை இல்லை?
துவா (இஸ்லாமியத் தொழுகை) சொல்லாததற்காக நான்கு ஒராங் அஸ்லி பிள்ளைகளை கன்னத்தில் அறைந்த ஆசிரியர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை கல்வி அமைச்சரும் சட்டத் துறைத் தலைவரும் விளக்க வேண்டும் என பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ கேட்டுக் கொண்டுள்ளார். நடவடிக்கை எடுக்கத் தாமதமாவது…
புகாரை மீட்டுக் கொள்ள ஒராங் அஸ்லி பிள்ளைகளுடைய குடும்பத்திற்கு பணம்…
கடந்த மாதம் பள்ளிக் கூடத்தில் துவா (இஸ்லாமியத் தொழுகை) சொல்லாததற்காக கன்னத்தில் அறையப்பட்ட முஸ்லிம் அல்லாத ஒராங் அஸ்லி பிள்ளைகளுடைய குடும்பத்தினர் செய்த போலீஸ் புகாரை மீட்டுக் கொள்வதற்கு அந்தக் குடும்பத்துக்கு பணம் கொடுக்க முன் வந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 7ம் தேதி ஹசான் அச்சோய் குடும்பத்தினர்…
ஒராங் அஸ்லி மாணவிகளை அறைந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகின்றது
மதிய உணவுக்கு முன்னர் துவா சொல்லத் தவறியதாகக் கூறப்பட்ட முஸ்லிம் அல்லாத ஒராங் 12 வயது அஸ்லி மாணவிகளை கன்னத்தில் அறைந்த ஆசிரியர் மீது நடவடிக்கை 'எடுக்கப்படுகின்றது'. குழு நிலையில் 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தை நேற்று நிறைவு செய்து வைத்து பேசிய கல்வித்…
ஓராங் அஸ்லி மாணவர்களை அறைந்த ஆசிரியரை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்
எம்பி பேசுகிறார்: கோபிந்த் சிங் டியோ பிஹாய் இடைநிலைப்பள்ளியில் நான்கு ஓராங் அஸ்லி மாணவர்களைக் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படும் ஆசிரியர்மீது தாக்குதல் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். பிஹாய் பள்ளி,குவா மூசாங் உள்புறம் கிளந்தான்-பேராக் எல்லைக்கருகில் ஓராங் அஸ்லி மாணவர்களுக்காகவே உள்ள ஒரு பள்ளிக்கூடமாகும். அங்கு பயிலும்…
ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்டது மீது அரசு அமைப்புக்கள்…
துவா சொல்லாததற்காக நான்கு ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம் மீது கல்வித் துறையும் ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறையும் நேற்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளன. குவா மூசாங், கோலா பெட்டிஸில் உள்ள Dewan Jubli Perak மண்டபத்தில் நடைபெற்ற ஐந்து மணி நேரச் சந்திப்பின் போது…
ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்டதாகக் கூறப்படுவதை அமைச்சர் மறுக்கிறார்
உணவுக்கு முன்னர் துவா ஒதாமல் இருந்ததற்காக நான்கு ஒராங் அஸ்லி பிள்ளைகளை அவர்கள் ஆசிரியர் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுவதை கிராமப்புற வட்டார மேம்பாட்டு அமைச்சர் ஷாபீ அப்டால் மறுத்துள்ளார். பெற்றோர்களுடைய அனுமதி இல்லாமல் குவா மூசாங்கில் உள்ள போஸ் பிஹாய் தேசியத் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு-அவர்கள் அனைவரும்…
பள்ளியில் சமய போதனை குறித்து பேசக்கூடாது என்று தடையா?
கிளந்தான், குவாங் மூசாவுக்கு அருகில் போஸ் பிஹயிலுள்ள எஸ்கே பிஹய் பள்ளியைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் அவர்களுக்கு பள்ளியில் சமய பாடம் போதிக்கப்பட்டது குறித்து பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருக்கலாம் என்று சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவர் கூறிக்கொண்டார். கடந்த வாரம் துவா ஓதாமல் இருந்ததற்காக நான்கு முஸ்லிம்…
‘துவா (doa) ஒதாதற்காக ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்டனர்’
பெற்றோர்கள் குழு ஒன்று தங்கள் பிள்ளைகள் நண்பகல் உணவுக்குப் பின்னர் துவா (doa) ஒதாதற்காக அவர்களை கன்னத்தில் அறைந்த கிளந்தான் குவா மூசாங்-கிற்கு அருகில் உள்ள போஸ் பிஹாய்-யில் உள்ள பிஹாய் தேசியப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மீது போலீசில் புகார் செய்துள்ளனர். செவ்வாய்க்கிழமையன்று பிற்பகல் மணி 1.30…