“28 மில்லியன் மக்களைக் கொண்ட மலேசியா கள்ளத்தனமாக வெளியே கொண்டு செல்லப்படும் பண மதிப்பில் மற்ற நாடுகளைக் காட்டிலும் வெகு தொலைவு முன்னேறியுள்ளது.”
சட்ட விரோதமாக மூலதனம் வெளியேறுவதில் மலேசியா உலகில் இரண்டாவது இடம் வகிக்கிறது
அப்சலோம்: எந்தப் பணமும் முதலில் கள்ளப்பணம் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் வேர்வையிலும் உழைப்பிலும் உருவான நல்ல பணம் தான் அது.
சிலர் சட்டப்பூர்வமாக எந்த வேலையும் செய்யாமல் அல்லது சட்ட விரோத வழிகளில் அந்தப் பணத்தைப் பெறும் போது அவர்கள் அந்தப் பணத்துக்குக் கணக்குக் காட்ட முடியாது. (அவர்களிடம் இருக்க வேண்டியதை விட அது அதிகமானது) அதனால் அவர்கள் அந்தப் பணத்தை நாட்டிலிருந்து கடத்துகின்றனர்.
சிலர் அதனைப் பைகளில் கொண்டு செல்கின்றனர். மற்றவர்கள் நவீனமான வழிகளில் செய்கின்றனர். நமது அரசியல் எஜமானர்களில் சிலருக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் வெளிநாடுகளில் விலை உயர்ந்த சொத்துக்களும் கொழுத்த வங்கிக் கணக்குகளும் உள்ளன. ஆகவே அந்த நவீனமான வழிகள் பற்றியும் அந்த விஷயம் குறித்த மேல் விவரத்தையும் அவர்கள் மட்டுமே விளக்க முடியும்
ஸ்விபெண்டர்: யார் பணத்தை வெளியில் கொண்டு செல்கின்றனர் ? அந்தப் பணத்துக்கு பிரபலமான இலக்குகள் யாவை ?
பாங்க் நெகாரா மலேசியா தனது தலையை மணலுக்குள் புதைத்து கொண்டுள்ளது. அதன் கவர்னருக்கு சிறந்த மத்திய வங்கி நிர்வாகி என்ற விருது கிடைக்கிறது. அதில் அவர் மகிழ்ச்சி அடைகிறார்.
என்ன வேடிக்கை ! 2010ல் மட்டும் நாட்டை விட்டு 200 பில்லியன் ரிங்கிட் கள்ளத்தனமாக வெளியேறியுள்ளது.
அந்த அளவு நமது உள்நாட்டு அந்நிய நேரடி முதலீடுகளை விட குறைந்தது 10 மடங்கு கூடுதலாகும்.
இந்த நாட்டைச் சூழ்ந்துள்ள நம்பிக்கை நெருக்கடியை அது உணர்த்துகின்றது. ஆற்றலும் பணமும் பெரும் அளவில் நாட்டிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. அதனை நிறுத்தி மாற்றா விட்டால் அடுத்த பத்து ஆண்டுகளில் நம்மிடம் மனித மூலதனமும் நிதி மூலதனமும் அற்றுப் போகும்.
தெளிந்த நீர்: சட்ட விரோதமாக பணம் வெளியேறுவதில் நாம் பொருளாதார வல்லரசான சீனாவுக்கு அடுத்தநிலையில் இரண்டாவது இடத்தை வகிக்கிறோம்.
ஆனால் தனிநபர் அடிப்படையில் நாம் உலகில் முதல் இடத்தில் ! 28 மில்லியன் மக்களைக் கொண்ட கள்ளத்தனமாக வெளியே கொண்டு செல்லப்படும் பணத்தின் மதிப்பில் மலேசியா மற்ற நாடுகளைக் காட்டிலும் வெகு தொலைவு முன்னேறியுள்ளது. அந்த விஷயத்தில் நமக்கு அருகில் எந்த நாடும் வர முடியாது.
கென்னத்_2585: அந்த ஜிஎப்ஐ ( Global Financial Integrity- GFI) அறிக்கைக்கு அரசியல் பின்னணி இருப்பதாக பிரதமரும் அவரது குழுவினரும் குற்றம் சாட்டப் போகின்றனர். அத்துடன் அந்த அமைப்பில் பிகேஆர்- கட்சிக்குப் பெரும்பங்கு இருப்பதாகவும் அவர்கள் சொல்வார்கள்.
எல்லாம் போதும். அந்தப் பணம் நமது நாட்டு வளர்ச்சிக்குச் செலவு செய்யப்பட்டிருந்தால் நாம் இன்னேரம் இந்தப் பூமியில் நாம் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருப்போம்.
மலேசியர்களே விழித்துக் கொள்ளுங்கள். அடுத்த தேர்தலில் விவேகமாக வாக்களியுங்கள். இல்லை என்றால் எல்லாப் பழியும் உங்கள் மீதே விழும்.
அடையாளம் இல்லாதவன்_3e86: 13வது தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் அதிகமான பணம் நாட்டைவிட்டு வெளியேறும். பொதுத் தேர்தலில் பிஎன் தோல்வி காணுமானால் தாங்கள் நேர்மையற்ற வழிகளில் தேடிய பணத்தை பிஎன் அரசியல்வாதிகள் மாற்றுவதற்குத் தயாராகி வருகின்றனர்.
ஆகவே 2012 அறிக்கை வெளியாகும் போது நாம் சட்ட விரோதமாக பணம் வெளியேறும் விஷயத்தில் நாம் முதலிடத்தில் இருப்போம்.
சுவர்க் கண்ணாடி: மலேசியா போன்ற சிறிய நாட்டுக்கு உலகில் இரண்டாவது இடம் என்பது பெரியசாதனையாகும். அந்தச் சாதனையைப் புரிந்த அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.
அந்தப் பிசாசுகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். அவர்களுக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுக்கக் கூடாது. இல்லை என்றால் அவர்கள் சீனாவை மிஞ்சி அடுத்த ஆண்டு முதல் இடத்தைப் பிடித்து விடுவார்கள்.
CAT Lover: அந்நிய நாடுகளுக்கு மூலதனத்தை மாற்றி விடும் நடைமுறை- நிறுவனங்களுக்கு இடையிலான பரிவர்த்தனையில் விலைகளைக் குறைவாக அல்லது கூடுதலாகக் குறிப்பது – மலேசிய அந்நிய நேரடி முதலீடுகளுடன் குறிப்பாக செம்பனை எண்ணெய் சம்பந்தப்பட்டதாகும்.
பெல்டா, சைம் டார்பி, ஐஒஐ, கேஎல்கே போன்ற தோட்ட நிறுவனங்கள் வெளிநாடுகளில் பல சுத்திகரிப்பு நிலையங்களை வைத்துள்ளன. அவற்றுக்கு செம்பனை எண்ணெய் மிகக் குறைந்த விலையில் மலேசியாவில் உள்ள அதன் சொந்த துணை நிறுவனங்கள் அனுப்புகின்றன.
அதனால் அந்நிய நாடுகளில் இயங்கும் நிறுவனங்கள் கொள்ளை இலாபம் சம்பாதிக்கின்றன. அந்த நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் நஜிப்பை அழைத்து செம்பனை எண்ணெய் ஏற்றுமதி வரியைக் குறைக்குமாறு கேட்டுக் கொள்வர். அதற்கு பின்னர் அந்தத் தலைமை நிர்வாகிகளுக்கு இரட்டை ஆதாயம் தான்.
அந்த கொழுத்த ஆதாயம் பிஎன் -னுடன் அந்த நிறுவனங்கள் பகிர்ந்து கொண்டு 13வது பொதுத் தேர்தலுக்கான பிஎன் நிதியில் அது சேர்த்தால் போதும். பிஎன் அதனை ஏற்றுக் கொள்வது திண்ணம். உண்மையில் பெரிய கட்டமைப்புத் தான்.
மலேசியாவுக்கு உள்ளும் புறமும் பணம் சட்டப்பூர்வமாக சம்பாதிக்கப்படுகின்றது. அந்த நிறுவனங்கள் பிஎன் -னுக்கு பகுதியாக பகுதியாக பணத்தை அனுப்புகின்றன. நிதி கண்காணிப்பு அமைப்புக்களும் எதிர்க்கட்சிகளும் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் தடுமாறும்.
அடையாளம் இல்லாதவன்#43051382: அந்தப் பந்தை (விஷயத்தை) நஜிப் பாங்க் நெகாராவிடம் தள்ளுகிறார். பாங்கு நெகாரா அதனை நிதித் துணை அமைச்சர் டொனால்ட் லிம் -மிடம் தள்ளுகிறது. லிம் அதனை ஆகாயத்தில் உதைக்கிறார். மேல் நடவடிக்கை இல்லை. அவ்வளவு தான். முடிந்தது.
பூ: இந்த நாட்டைத் திவால் நிலைக்குக் கொண்டு செல்லக் கூடிய அந்தப் பண வெளியேற்றத்தை பாங்க் நெகாரா நிறுத்த முடியுமா ?
பாங்க் நெகாரா அம்னோ கருவியாகி விட்டதால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.