இந்து சாமி மேடை சர்ச்சை: சகிப்புத்தன்மை எங்கே போனது ?

altarமலாய் சமூகம் இந்த முடிவுக்கு வந்தால் மலாய்க்காரர் அல்லதார் தங்கள் சமயத்தை பின்பற்றப் போராட வேண்டியது தான்.”

“சிப்பாங்கில் இந்து பூஜை மேடை மீண்டும் அமைக்கப்படுவதற்கு குடியிருப்பளர்கள் எதிர்ப்பு”

பி தேவ் ஆனந்த் பிள்ளை: தாமான் செரோஜா குடியிருப்பாளர் சங்கத் தலைவர் கமாருல்ஸாமான் மாட் ஜெயின் அபத்தமாகப் பேசுகிறார்.

அந்தக் கோயில் வீட்டு வளாகத்துக்குள் உள்ளது. அது பொதுவான சாலையில் அல்ல. ஆகவே முன் நுழைவாயில் உள்ளிட்ட தமது வீட்டு வளாகத்துக்குள் வழிபாடு செய்வது வீட்டு உரிமையாளருடைய உரிமையாகும்.

இந்த இடத்தில் மஇகா இளைஞர்கள் சொல்வது சரியே. தனியார் நிலத்தில் சட்டவிரோதமாக கோயில் கட்டப்பட்டிருந்தால் அதிகாரிகள் அதில் தலையிடலாம். ஆனால் இது ஒருவர் தமது சொந்த வீட்டுக்குள் வழிபாடு செய்யும் உரிமை சம்பந்தப்பட்டதாகும்.

ஆகவே இங்கே என்ன நடக்கிறது ? அதன் அர்த்தம் என்ன ? கிறிஸ்துவர்களும் இந்துக்களும் பௌத்தர்களும்  தங்கள் வீட்டுக்குள் சிலைகளை வைத்துக் கொள்ளக் கூடாதா ?

இந்த முடிவுக்கு மலாய் சமூகம் வந்தால் மலாய்க்காரர் அல்லதார் தங்கள் சமயத்தை பின்பற்றப் போராட வேண்டியதுதான்.

திரு கலை: ஒர் இந்து வீட்டில் எந்த சாமி மேடையும் வீட்டுக்குள் இருக்க வேண்டும். வெளியில் இருக்கக் கூடாது. அது சிறிய கோவிலைப் போன்ற நிரந்த கட்டுமானமாகவும் இருக்கக் கூடாது.

ஒரு கோவிலோ அல்லது சிலையோ அது கட்டப்பட்ட பின்னர் இந்துக்கள் அதனை அகற்ற மாட்டார்கள்.   காரணம் இறைவன் அங்கு குடியிருக்கிறான் என அவர்கள் கருதுகின்றனர்.

அந்த வீடு விற்கப்பட்டு புதிய உரிமையாளர் சிலையை விரும்பவில்லை என்றால் என்ன செய்வது ? நாம் இறைவனை மதிப்போம். இறைவனைப் பொருத்தமான இடத்தில் வைப்போம்.

சவுத்பாவ்: இந்த விஷயத்தில் பிஎன் உறுப்புக்கட்சிகள் குறிப்பாக அம்னோவும் மஇகா-வும் நாடகமாடுவதாக எனக்குத் தோன்றுகிறது.

கேபிஎஞ்சி: அந்த சாமி மேடை பெரிதாக்கப்பட்டது முஸ்லிம்களுக்கு அசௌகரியத்தைக் கொடுத்திருக்கலாம் என்பதை அண்டை வீட்டுக்காரரான ஸுரினா முகமட் ஒப்புக் கொள்கிறார்.

என்றாலும் அது இந்திய வீட்டு உரிமையாளர் வளாகத்துக்குள் நிகழ்கின்றது. அதனால் அந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம்களுக்கு ஏன் அசௌகரியமாக இருக்க வேண்டும் ? எனக்குப் புரியவில்லை.

மற்றவர்களுடைய சமய சுதந்திரத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா ? சிப்பாங் நகராட்சி மன்றம் அதற்கு விளக்கம் தர வேண்டும்.

அந்தப் பகுதியில் இந்தியர்கள் சிறிய எண்னிக்கையில் மட்டுமே வசிக்கின்றனர் என்ற வாதத்தை முன் வைக்க வேண்டாம். அது மிரட்டுவதைப் போல உள்ளது. எங்கள் சமயத்தைப் பின்பற்றும் உரிமைகளைப் பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஏசிஆர்: அந்தக் குடியிருப்பாளர் சங்கம் குடியிருப்பாளர்களில் 95 விழுக்காட்டினரை மட்டுமே பிரதிபலிக்கிறது. ஐந்து விழுக்காடு முஸ்லிம் அல்லாத குடியிருப்பாளர்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லையா ?

அந்த சாமி மேடை குறித்து அண்டை வீட்டுக்காரருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அந்த சாமி மேடை பொது மக்கள் பயனீட்டுக்கு இல்லை.

குடியிருப்பாளர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் பொது இடம் தவறாகப் பயன்படுத்தப்படுவது போல குடியிருப்பாளர் சங்கம் ஏன் அந்தச் சர்ச்சைக்குள் மூக்கை நுழைக்கிறது ?

லூயிஸ்: கமாருல்ஸாமான் அவர்களே, ஒரு பகுதியில் இந்துக்கள் சிறுபான்மையாக இருந்தால் அவர்கள் தங்கள் சமயத்தைப் பின்பற்றக் கூடாது என்பது அதன் அர்த்தமா ? தாங்கள் சிறுபான்மையாக இருக்கும் நாடுகளில் அல்லது பகுதிகளில் முஸ்லிம்களுக்கு தொழுகை இடங்கள் மறுக்கப்பட்டால் அவர்களுக்கு என்ன உணர்வு ஏற்படும் ?

இஸ்லாம் நியாயமான சமயமாகும். மற்ற சமய நடைமுறைகள் மீது முஸ்லிம்கள் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என அது எதிர்பார்க்கிறது. ஒரு சிறிய இந்து சிலையை அமைக்க அனுமதிப்பது இஸ்லாத்தின் பலவீனத்தைக் காட்டாது. அதற்கு மாறாக அது இஸ்லாத்தின் வலிமையைக் காட்டுகின்றது.

நியாயமானவன்: 50 ஆண்டுகளுக்கு மேல் ஒற்றுமையாக வாழ்ந்த பின்னர் இதுதான் மலேசியன் மலேசியா கோட்பாடா ?  உண்மையில் மலேசியன் என்ற முறையில் நான் என்னை பள்ளிவாசல்களும் தேவாலயங்களும் கோயில்களும் சூழ்ந்திருப்பதையே விரும்புகிறேன். அவை எனக்கு மன அமைதியைத் தருகின்றன

இம்ரான்: நான் ஒர் இந்திய இந்து. இந்தியர்கள் தங்கள் கோவில்கள் விஷயத்தில் அளவுக்கு மீறிச் செல்வதாக நான் எண்ணுகிறேன். ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஒர் இந்துக் கோவில் இருப்பதுதான் உண்மை எனத் தோன்றுகிறது.

சிறிய குழுக்கள் கோயில்கள் என அழைக்கப்படும் அவற்றை அமைக்கின்றன. நாடு முழுவதும் அது போன்று ஆயிரக்கணக்கில் உள்ளன.

இந்துக்கள் உள்ளூர் மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய தோட்டங்களில் சாமி மேடைகள் அமைக்கப்படுவதும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என நான் கருதுகிறேன். சாமி மேடைகள் வீட்டுக்குள் இருக்க வேண்டும். சுங்கை பூலோவில் ஒரு வீட்டில் கார் நிறுத்துமிடத்தில் பெரிய சாமி மேடை இருப்பதைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.

நானும் ஒர் இந்து தான். இந்திய சமூகத்தில் சிலருடைய நடவடிக்கைகளைக் கண்டு நான் வெட்கப்படுகிறேன்.

கோவில்கள் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் அரசியலாக்கலாம் என அவர்கள் எண்ணுகின்றனர். அந்த சிறிய குழுக்களுக்கு அரசாங்கம் விட்டுக் கொடுக்கக் கூடாது. நான் சொன்ன கருத்துக்களை பெரும்பாலான படித்த இந்தியர்களும் பகிர்ந்து கொள்கின்றனர்.

 

TAGS: