அம்பிகா சொன்னதை ‘அபத்தம்’ என இசி நிராகரித்தது

ecவிரைவில் எந்த தேர்தல் சீர்திருத்தமும் நிகழாது என பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் அண்மையில் சொன்னதை இசி என்ற தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் நிராகரித்துள்ளார்.

அம்பிகா அபத்தமாகப் பேசுகிறார் என்றும் வேறுபடுத்துகிறார் என்றும் வான் அகமட் கூறியதாக சைனா பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்து அவர் அடுத்த பொதுத் தேர்தலில் இசி அமலாக்க எண்ணியுள்ள தேர்தல் சீர்திருத்தங்கள் பட்டியலையும் வழங்கினார். அழியாத மையைப் பயன்படுத்துவது, வெளிநாடுகளில் வாழும் மலேசியர்களை வாக்களிக்க அனுமதிப்பது, இரு தரப்பையும் சேர்ந்த அரசியல்வாதிகள் வீடியோக்கள் வழி பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது ஆகியவை அவற்றுள் அடங்கும். அந்த சீர்திருத்தங்கள் முன் எப்போதும் நிகழாதவை என்றார் அவர்.

இசி உண்மையான தேர்தல் சீர்திருத்தங்களை அமலாக்காமல் இழுத்தடிப்பதாக கடந்த திங்கட்கிழமையன்று பெர்சே குற்றம் சாட்டியிருந்தது.

இசி பல அம்சங்களைக் கவனிக்க வேண்டியிருப்பதால் சீர்திருத்தங்களை அமலாக்குவதற்குக் காலம் பிடிக்கும் என வான் அகமட் அந்த சீன மொழி நாளேட்டிடம் கூறினார்.

‘Jom Pantau’ இயக்கமும் குறை கூறப்பட்டதுec1

தேர்தல் பார்வையாளர்களாக விளங்குவதற்கு குடிமக்களுக்குப் பயிற்சி அளிக்கும் ‘Jom Pantau’ இயக்கம் மூலம்13வது பொதுத் தேர்தலை சீர்குலைக்க வேண்டாம் என வான் அகமட் பெர்சே -யை எச்சரித்துள்ளதாக மலாய் ஏடான சினார் ஹரியானில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு உதவி செய்வதற்குப் பதில் அந்த இயக்கம் பல்வேறு பிரச்னைகளையே உருவாக்கும் என அவர் கூறிக் கொண்டார்.

“பொதுத் தேர்தலில் பார்வையாளர்களாக இருக்கும் மக்கள் உரிமைகளை நாங்கள் மறுக்கவில்லை. என்றாலும்இசி-க்கும் மற்ற அமலாக்க அமைப்புக்களுக்கும் அது மற்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் என நாங்கள் அஞ்சுகிறோம்.’

“பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கு இடையூறு செய்ய வேண்டாம் என நாங்கள் அந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ள பெர்சே-க்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்,” என வான் அகமட் சொன்னதாக சினார் ஹரியான் இணைய ஏட்டில் கூறப்பட்டுள்ளது.

“ஒரு கட்சியின்” நலன்களைக் கருத்தில் கொண்டு அது அமைக்கப்பட்டுள்ளதால் மற்ற நோக்கங்களும் பெர்சே-க்கு இருக்கலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

TAGS: