உண்மையால் மட்டுமே வதந்தியை விரட்டியடிக்க முடியும்

1polisஉங்கள் கருத்து: “நாம் வதந்திகளை நம்பக்கூடாது என்று போலீஸ் விரும்பினால், அவர்கள்  உண்மைகளை நம்முன் வைக்க வேண்டும், இல்லையேல் வதந்திகள் சொல்வதையே நம்பவேண்டியிருக்கும்.”

போலீசார்: கோலா மூடாவில் இனக் கலவரம் என்பதை நம்ப வேண்டாம்

அம்னோ-எதிரி: நம்ப வேண்டாமென்றால், இப்படிப்பட்ட வதந்திகளைப் பரப்புவோரைத் தூக்கி உள்ளே போடுங்கள்.அந்தக் கயவர்கள் யார் என்பதையும் மக்களுக்குச் சொல்லுங்கள். அதுதான் எதிர்காலத்தில் மற்றவர்கள் அதுபோன்ற செயலில் ஈடுபடுவதைத் தடுக்கும்.

டூரியோ: நாம் வதந்திகளை நம்பக்கூடாது என்று போலீஸ் விரும்பினால், அவர்கள்  உண்மைகளை நம்முன் வைக்க வேண்டும், இல்லையேல் உத்துசான் செய்திகளைவிட வதந்திகள் சொல்வதையே நம்பவேண்டியிருக்கும்.

பி.தேவ் ஆனந்த் பிள்ளை: இது அம்னோ சைபர் படையினரின் வேலையாகத்தான் இருக்கும். நாட்டில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி தேர்தலை இரத்துச் செய்ய எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

ஆனால், மக்கள் மடையர்கள் அல்லர். தகவலுக்கு நன்றி.

மூத்த மலேசியன்: கலகம், சண்டை, இனக் கலவரம் என்றெல்லாம் வதந்திகளைப் பரப்புவோர் பொறுப்பற்றவர்களாகத்தான் இருப்பர். 13வது பொதுத் தேர்தலில் தோற்றுப்போவோம் என்று அஞ்சும் ஒரு அரசியல்கட்சிதான் பணம் கொடுத்து இப்படிப்பட்ட வதந்திகளைப் பரப்பத் தூண்டுகிறது.

அக்கட்சியின் தலைவர்கள் தேர்தலில் தோற்றால் மே13 மீண்டும் நிகழும் என்று ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.

முகம்மட் அப்துல் மாலிக்: வதந்திகள் காட்டுத்தீ போல் பரவும் தனமை கொண்டவை. மக்களும் அதிகாரிகள் சொல்வதைக் கேட்பதைவிட வதந்திகளுக்கே அதிகம் செவி சாய்ப்பர்.போலீஸ் அறிக்கை இன்னும் தெளிவாக இருத்தல் வேண்டும்.

பொதுமக்கள் வதந்திகளுக்குச் செவி சாய்ப்பதையும் குறை சொல்ல முடியாது. கடந்த காலத்தில் சில வதந்திகள் இறுதியில் உண்மை ஆகியிருக்கின்றன.

கிறிஸ்துவர்கள் இஸ்ரேலுக்குச் செல்வதற்கான கட்டுப்பாடு நீக்கப்பட்டது

உண்மை: 13 பொதுத் தேர்தல் வருகிறது. கிறிஸ்துவர்களை வேண்டிய மட்டும் போட்டுத் தாக்கியாகி விட்டது என்பதால் கிறிஸ்துவ சமூகத்தின் வாக்குகள் வராது என்பதை உணர்ந்து வீட்டார்கள். இப்போது ஏற்பட்டுவிட்ட சேதத்தைச் சரிக்கட்டப் பார்க்கிறார்கள். அதுதான் இந்நடவடிக்கை. ஆனால், காலம் கடந்து விட்டது என்றுதான் நான் நினைக்கிறேன். 

லூயிஸ்: இதற்கு எந்தக் காலத்திலும் கட்டுப்பாடு இருந்திருக்கக் கூடாது. கிறிஸ்துவர்கள் கிறிஸ்து பிறந்த இடத்தைப் பார்க்கத்தானே செல்கிறார்கள்.

நம்பாதவன்: புனித நிலம் செல்வதற்கிருந்த தடை கிறிஸ்மஸ் கொண்டாடப்படவுள்ள நேரத்தில் நீக்கப்பட்டது மிகவும் பொருத்தமானதே. ஆனால், நஜிப்பின் நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது. 55ஆண்டுகளில் முதல்முறையாக ஆட்சியை இழக்க நேரலாம் என்ற பயத்தால்தான் அவர் இந்நடவடிக்கையை மேற்கொண்டார் என்று நினைக்கிறேன்.

விஜய்47: கிறிஸ்துவர்கள் இஸ்ரேலுக்குச் செல்ல ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்தன. இப்போது அவை நீக்கப்பட்டது நல்ல செய்திதான். இனி, கிறிஸ்துவர்கள் நேரடியாக புனித நிலத்துக்குச் சென்று அம்னோவின் ஒட்டுமொத்த அழிவுக்கு பிரார்த்தனை செய்யலாம்.

 

 

 

 

TAGS: