நாடாளுமன்ற சிறப்புக்குழு தேசிய அளவில் குறைந்தது ஆறு சந்திப்புகளை நடத்தும்

தேர்தல் சீர்திருத்தங்கள் சம்பந்தமாக நியமிக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற சிறப்புக்குழு நாடுதழுவிய அளவில் குறைந்தது ஆறு சந்திப்புகளை மக்களுடன் நடத்தும்.

தூய மற்றும் நேர்மையான தேர்தலுக்கான இயக்கம் (பெர்சே 2.0) விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, நாடாளுமன்ற சிறப்புக்குழுவின் தலைவர் மேக்சிமஸ் ஜோனிட்டி ஒங்கீலி மக்களுடன் நடத்தப்படும் அப்பொது சந்திப்புக்கள் கோலாலம்பூர், சாபா, சரவாக் ஆகிய இடங்களோடு வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு தீவகற்பம் ஆகிய இதர மூன்று இடங்களிலும் நடைபெறும் என்று இன்று கூறினார்.

“மக்கள் தங்களுடைய மகஜர்களை தாக்கல் செய்வதற்கான சந்தர்ப்பத்தை அளிப்பதற்காக இவை நடத்தப்படும்…ஆனால் (அது எவ்வளவு நாள்களுக்கு என்பது) கிடைக்கும் நேரத்தைப் பொறுத்துள்ளது”,என்றாரவர்.

“மக்கள் தங்களுடைய பரிந்துரைகள் மற்றும் முன்மொழிதல்கள் ஆகியவற்றை தாக்கல் செய்வதற்காக விரைவில் நாடாளுமன்றத்தில் ஓர் இணையதளத்தை நாங்கள் அமைப்போம்”, என்றும் அவர் கூறினார்.